உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியாவில் பங்குச் சந்தைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவில் தற்போது பங்குவர்த்தகம் இரு பெரும் பங்குச்சந்தைகளில் நடை பெறுகிறது. அவை: இந்திய தேசிய பங்கு சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தை. இவை தவிர பண்டகப் பொருட்கள் வர்த்தகம் நடக்கும் பண்டச் சந்தைகளும் (commodity exchanges) வேறு சிறு பங்குச் சந்தைகளும் உள்ளன.

வரலாறு

[தொகு]

மும்பையில் உள்ள பங்குத் தரகர்கள் இணைந்து இந்தியாவின் முதல் பங்குச் சந்தையான மும்பைப் பங்குச் சந்தையைத் தோற்றுவித்தார்கள். 1894 ஆம் ஆண்டில் அகமதாபாத் பங்குச் சந்தை உருவாக்கப்பட்டது. கல்கத்தா பங்குச் சந்தை 1908 ஆம் ஆண்டில் நிறுவப் பெற்றது.

அங்கீகாரம் பெற்ற சந்தைகள்

[தொகு]

Securities Contracts (Regulations) Act, 1956. இன் படி கீழ்காணும் பங்குச் சந்தைகள் அங்கீகாரம் பெற்றன:

  1. பாம்பே
  2. கல்கத்தா
  3. மெட்ராஸ்
  4. அகமதாபாத்
  5. தில்லி
  6. ஹைதராபாத்
  7. பெங்களூர்
  8. இந்தூர்

இந்தியாவில் உள்ள பிற பங்குச் சந்தைகள்

[தொகு]
  1. கொச்சின் பங்குச் சந்தை (1980)
  2. உத்திரப் பிரதேச பங்குப் பரிமாற்றுச் சங்கம் (வரை) (கான்பூர்-1982)
  3. புனே பங்குச் சந்தை (1982)
  4. லூதியானா பங்குப் பரிமாற்றுச் சங்கம் (வரை)(1983)
  5. கோயம்புத்தூர் பங்குச் சந்தை
  6. மீரட் பங்குச் சந்தை
  7. ஜெய்ப்பூர் பங்குச் சந்தை (வரை)

வெளி இணைப்புகள்

[தொகு]