இந்தியாவில் தாய்மொழியைப் பேசுவோரின் எண்ணிக்கையின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தியா பல நூறு மொழிகளின் தாயகம் ஆகும். பெரும்பாலான இந்தியர்கள் பேசும் மொழிகள் பின்வரும் குடும்பங்களைச் சார்ந்தவைகளாகவே இருக்கின்றன. அவை இந்தோ-ஆரிய மொழியின் கிளையான இந்தோ-ஐரோப்பிய மொழிகள் (ca. 74%), திராவிட மொழிகள் (ca. 24%),ஆசுத்ரோ-ஆசிய மொழிகள் (முண்டா மொழிகள்) (ca. 1.2%), சீன-திபெத்திய மொழிகள் (ca. 0.6%), மேலும் இமயமலையிலுள்ள பட்டியலிடப்பாத சில மொழிகள். உலகின் மொழிகள் அமைப்பு இந்தியாவில் 415 மொழிகள் பேசப்படுவதாக தெரிவிக்கிறது.

இந்தியாவில் அரசியலமைப்புரீதியில் அங்கீகரிக்கப்பட்ட 23 ஆட்சி மொழிகள் உள்ளன. மத்திய அரசு பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ மொழிகளில் இந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளன. மாநில அரசுகள் அந்தந்த மாநிலங்களில் பேசப்படும் மொழிகளை அதிகாரப்பூர்வ மொழிகளாக பயன்படுத்துகின்றன.

இந்தியாவின் வடக்குப் பகுதிகளில் மிகவும் பரவலாக பேசப்படும் மொழி இந்தி ஆகும். 2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இந்திய மக்கள் தொகையில் 45% ஹிந்தி பேசுவோர், எனினும் அவர்களுள் 25% மட்டுமே இந்தியை தங்கள் சொந்த தாய்மொழியாக பதிவுசெய்தனர்.[1] 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்திர்யர்களுள் 226449 நபர்கள் தங்கள் தாய்மொழியாக இந்திய ஆங்கிலத்தினை பதிவுசெய்தனர். [2]

95% இந்திய மக்கள்தொகையினுள் குறைந்தப்பட்சம் 1%க்கும் அதிகமான நபர்களினால் இந்திய அரசியலமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட 13 அட்டவணை மொழிகள் பேசப்படுகிறது. இந்திய மக்கள்தொகையினுள் 1%க்கும் குறைவான நபர்ளினால் பேசப்படும் அட்டவணை மொழிகள், சந்தாளி மொழி (0.64%), நேபாளி மொழி (0.28%), சிந்தி மொழி (0.25%), மணிப்புரியம் (0.14%), போடோ மொழி (0.13%), தோக்ரி மொழி (0.01%), மற்றும் 2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சமஸ்கிருதம் வெறும் 14,135 நபர்களால் மட்டுமே தாய்மொழியாக பதிவுசெய்யப்பட்டது.[3] அட்டவணைப்படுத்தப்படாத பெரிய மொழிகள் பிலி மொழி (0.95%), followed by கோண்டி மொழி (0.27%), குமோனி மொழி (0.21%), துளு மொழி (0.17%) and குறுக்ஸ் மொழி (0.10%).

தாய்மொழியைப் பேசுவோரின் எண்ணிக்கைப் பட்டியல்[தொகு]

தாய்மொழியை பேசுவோரின் எண்ணிக்கை வரிசைப்படி பின்வரும் அட்டவணை உள்ளது. 1991 இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 19.4% பேர் இருமொழி பேசுபவர்களாகவும் மேலும் 7.2% மும்மொழி பேசுபவர்களாகவும் உள்ளனர், எனவே மொத்தமாக மொழியைப் பேசுவோரின் சதவீதம் 127% ஆகும்.

2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பின்வரும் 29க்கும் மேற்பட்ட மொழிகள் பத்து இலட்சத்துக்கும் அதிகமானோரால் பேசப்படுகிறது.

அட்டவணை: தாய்மொழியைப் பேசுவோரின் எண்ணிக்கை வரிசை
வரிசை மொழி 2001 கணக்கெடுப்பு[4]
(மொத்த மக்கள்தொகை 1,028,610,328 )
1991 கணக்கெடுப்பு[5]
(மொத்த மக்கள்தொகை 838,583,988)
என்கார்டாவின் 2007 உத்தேசம்[6]
(உலகளவில் பேசுபவர்கள்)

பேசுபவர்கள் சதவீதம் பேசுபவர்கள் சதவீதம் பேசுபவர்கள்
1 இந்தி[7] 422,048,642 41.03% 329,518,087 39.29% 366 மில்லியன்
2 பெங்காலி 83,369,769 8.11% 69,595,738 8.30% 207 மில்லியன்
3 தெலுங்கு 74,002,856 7.19% 66,017,615 7.87% 69.7 மில்லியன்
4 மராத்தி 71,936,894 6.99% 62,481,681 7.45% 68.0 மில்லியன்
5 தமிழ் 60,793,814 5.91% 53,006,368 6.32% 66.0 மில்லியன்
6 உருது 51,536,111 5.01% 43,406,932 5.18% 60.3 மில்லியன்
7 குசராத்தி 46,091,617 4.48% 40,673,814 4.85% 46.1 மில்லியன்
8 கன்னடம் 37,924,011 3.69% 32,753,676 3.91% 35.3 மில்லியன்
9 மலையாளம் 33,066,392 3.21% 30,377,176 3.62% 35.7 மில்லியன்
10 ஒடியா 33,017,446 3.21% 28,061,313 3.35% 32.3 மில்லியன்
11 பஞ்சாபி 29,102,477 2.83% 23,378,744 2.79% 57.1 மில்லியன்
12 அசாமிய மொழி 13,168,484 1.28% 13,079,696 1.56% 15.4 மில்லியன்
13 மைதிலி மொழி 12,179,122 1.18% 7,766,921 0.926% 24.2 மில்லியன்
14 பிலி மொழி 9,582,957 0.93%
15 சந்தாளி மொழி 6,469,600 0.63% 5,216,325 0.622%
16 காசுமீரி 5,527,698 0.54%
17 நேபாளி மொழி 2,871,749 0.28% 2,076,645 0.248% 16.1 மில்லியன்
18 கோண்டி மொழி 2,713,790 0.26%
19 சிந்தி மொழி 2,535,485 0.25% 2,122,848 0.253% 19.7 மில்லியன்
20 கொங்கணி மொழி 2,489,015 0.24% 1,760,607 0.210%
21 தோக்ரி மொழி 2,282,589 0.22%
22 காந்தேசி மொழி 2,075,258 0.21%
23 குறுக்ஸ் மொழி 1,751,489 0.17%
24 துளு மொழி 1,722,768 0.17%
25 மணிப்புரியம் 1,466,705* 0.14% 1,270,216 0.151%
26 போடோ மொழி 1,350,478 0.13% 1,221,881 0.146%
27 காசி மொழி 1,128,575 0.11%
28 முண்டாரி 1,061,352 0.103%
29 ஹோ மொழி 1,042,724 0.101%


100,000 முதல் பத்துலட்சம் வரை[தொகு]

வரிசை மொழி 2001 கணக்கெடுப்பு
பேசுபவர்கள் சதவீதம்
30 கூய் மொழி 916,222
31 கரோ மொழி 889,479
32 கொக்பராக் மொழி 854,023
33 மிசோ மொழி 674,756
34 கலாபி மொழி 593,443
35 கொற்கு மொழி 574,481
36 முண்டா 469,357
37 மிசிங் மொழி 390,583 0.047%
38 கார்பி மொழி 366,229 0.044%
39 சௌராஷ்டிர மொழி 310,000 0.037%
40 Savara 273,168 0.033%
41 கோயா மொழி 270,994 0.032%
42 ஆங்கிலம் 226,449 0.027%
43 Kharia 225,556 0.027%
44 Khond/Kondh 220,783 0.026%
45 Nishi 173,791 0.021%
46 Ao 172,449 0.021%
50 Sema 166,157 0.020%
51 Kisan 162,088 0.019%
52 Adi 158,409 0.019%
53 Rabha 139,365 0.017%
54 Konyak 137,722 0.016%
55 Malto 108,148 0.013%
56 Thado 107,992 0.013%
57 Tangkhul 101,841 0.012%

சான்றுகள்[தொகு]

  1. http://ibnlive.in.com/news/census-dispels-hindi-myth-only-25-pc-in-india-claim-hindi-is-their-mother-tongue/480525-37-64.html
  2. In 1991, there were 90,000,000 "users" of English. (Census of India Indian Census, Issue 10, 2003, pp. 8–10, (Feature: Languages of West Bengal in Census and Surveys, Bilingualism and Trilingualism) and Tropf, Herbert S. 2004. India and its Languages. Siemens AG, Munich.)
  3. {http://web.archive.org/web/20071130133947/http://www.censusindia.gov.in/Census_Data_2001/Census_Data_Online/Language/Statement5.htm}
  4. Abstract of speakers' strength of languages and mother tongues – 2000, Census of India, 2001
  5. Comparative Speaker's Strength of Scheduled Languages -1971, 1981, 1991 and 2001, Census of India, 1991
  6. "Languages Spoken by More Than 10 Million People – Table – MSN Encarta". மூல முகவரியிலிருந்து 2007-12-03 அன்று பரணிடப்பட்டது.
  7. includes Western Hindi apart from Urdu, Eastern Hindi, Bihari languages except for Maithili, the Rajasthani languages, and the Pahari languages apart from Nepali and (in 2001) Dogri, whether or not the included varieties were reported as "Hindi" or under their individual names.