உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியாவில் செவிலியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவில் செவிலியம் என்பது, இந்திய நாட்டில் நோயாளிகளைக் கவனித்துப் பேணுவதற்கான துறையைக் குறிக்கும். பழங்கால இந்திய ஆவணங்கள் செவிலியப் பணியின் கொள்கை முறைகளைப் பற்றி விளக்குகின்றன. அவை தெளிவாகவும், அறிவியல் நுட்பத்துடனும், அடிப்படை அறிவுடனும், இக்கால நவீன நூல்களுக்கு இணையாக விளங்குகின்றன. முதலில் இளைஞர்களே செவிலியப் பணியில் சேர்ந்தனர், பின்னர் மகப்பேற்றுத் துறையில் பெண்கள் சேர்க்கப்பட்டனர்.[1][2][3]

இந்திய நாட்டில் நிலவி வந்த ஜாதி முறைகள், கல்வி அறிவின்மை, பெண்களின் பின் தங்கிய நிலைமை, சம உரிமை அற்ற அரசியல் ஆகிய காரணங்களால் செவிலியத்துறை மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இருந்தது

இந்திய செவிலிய வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்[தொகு]

 • 1664 இல் கிழக்கிந்திய கம்பேனி தனது வீரர்களுக்காக சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் ஒரு வீட்டில் முதல் மருத்துவ மனையை ஆரம்பித்தது. இந்த மருத்துவமனையில் பணிபுரிய இலண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் இருந்தது செவிலிய சகோதரிகள் வந்தனர்
 • 1797 இல் சென்னையில் உள்ள ஏழைகளுக்காக மருத்துவர் ஜான் அண்டர்வுட் என்பவரின் பொருளுதவியுடன் ஒரு மகப்பேறு மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டது அன்றைய அரசாங்கம் 1854 இல் மகப்பேறு செவிலியர்களுக்கென ஒரு பயிற்சி பள்ளியை சென்னையில் உருவாக்கியது
 • பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் இந்தியாவில் மக்களின் நிலையை உணர்ந்து செவிலியப்பணி முன்னேற்றமடைய பல உதவிகள் செய்தார். அவர் இந்திய இராணுவ வீரர்களின் நலத்துக்காக அரும்பாடு பட்டபோதும் இந்திய மக்களுக்கு தேவையான செவிலிய பணி சென்றடையவும் ஆர்வம காட்டினார்
 • 1865 இல் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் “இந்திய மருத்துவமனைகளில் செவிலியர் பணிக்கான ஆலோசனைகள்” என்ற நூலை வெளியிட்டார்
 • 1867 ஆம் ஆண்டு டெல்லியில் செயின்ட் ஸ்டீவன்ஸ் மருத்துவமனியில் இந்திய பெண்களுக்கான செவிலிய பயிற்சி பள்ளி தொடங்கப்பட்டது
 • 1871 இல் சென்னை பொது மருத்துவமனையில் ஆறு மாதகால மகப்பேறு பட்டாய படிப்பு பயிற்சி திட்டம் நான்கு மாணவிகளுடன் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது
 • அதே ஆண்டில் இங்கிலாந்தில் சிறந்த பயிற்சி பெற்ற நான்கு செவிலியரும் நான்கு பெண் செவிலிய கண்காணிப்பாளரும் சென்னை மருத்துவமனையில் பதவியேற்றனர்
 • 1890 முதல் 1900 வரை சமய அமைப்புகள் மற்றும் அரசாங்கத்தால் இந்திய நாட்டின் பல பகுதிகளில் செவிலிய பயிற்சிப் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன
 • இருபதாம் நூற்றாண்டில் ஆரம்பகாலங்களில் தேசிய செவிலியர் அமைப்புகள் (சங்கங்கள்) தொடங்கப்பட்டன
 • 1897 ஆம் ஆண்டு டாக்டர் பி. சி. இராய் செவிலியப்பணி முன்னேற்றமடையவும் ஆண், பெண் செவிலியர்களின் நலனுக்காகவும் அருந்தொண்டு ஆற்றினார்
 • 1905 ஆம் ஆண்டின் வாக்கிலே ஐரோப்பாவைச் சேர்ந்த ஒன்பது மூத்த செவிலியர்கள் சேர்ந்து ஓர் அமைப்பை தோற்றுவித்தனர். அது செவிலியர் கண்காணிப்பாளர் அமைப்பு என அழைக்கபட்டது
 • 1908 ஆம் ஆண்டில் பம்பாயில் நடைபெற்ற இதன் முதல் ஆண்டு மாநாட்டிலே பயிற்சி பெற்ற செவிலிய அமைப்பு தொடங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
 • பின்னர் 1909 ஆம் ஆண்டில் இந்திய பயிற்சி பெற்ற செவிலியர்கள் அமைப்பு (Trained Nurses Association India) தொடங்கப்பட்டது இதன் அலுவலக பிரதிநிதிகளாக செவிலிய கண்காணிப்பாளர் அமைப்பின் பிரதிநிதிகளே இருந்து வந்தனர்
 • 1910 இல் இந்திய பயிற்சி பெற்ற செவிலியர் அமைப்பின் முதல் மாநாடு பனாரஸ் இல் நடைபெற்றது அந்த மாநாட்டில் அலுவலக பிரதிநிதிகள் இந்திய பயிற்சி பெற்ற செவிலியர் அமைப்பின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
 • இந்திய பயிற்சி பெற்ற செவிலியர் அமைப்பின் கீழ் 1922 ஆம் ஆண்டு சுகாதார ஆய்வாளர் அமைப்பு

(Health Visitors’ League) 1925 ஆம் ஆண்டு துணை சுகாதார செவிலிய தாதியர் அமைப்பு உருவாக்கப்பட்டது (Auxilary Nurse Midwives Association) 1929 ஆம் ஆண்டும் செவிலிய மாணவர் அமைப்பு (Student Nurses Association) இணைக்கப்பட்டது

 • 1912 இல் இந்திய பயிற்சி பெற்ற செவிலியர் அமைப்பு உலக செவிலியர் அமைப்பின் அங்கீகாரத்தை பெற்றது
 • 1918 ஆம் ஆண்டு டெல்லி மற்றும் கராச்சியில் சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் தாதியர்களுக்கான பயிற்சி பள்ளிகள் துவங்கப்பட்டன; பயிசிக்காக செல்வி கீரீபின், செல்வி கிரகாம் என்ற இரு ஆங்கிலேய செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர்
 • 1926 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் செவிலியர்; கல்வி மற்றும் பயிற்சி முறைகளில் அடிப்படை தரத்தை அளிப்பதற்காக முதல் பதிவுக்குழுமம் தோற்றுவிக்கப்பட்டது
 • 1946 ஆம் ஆண்டு டெல்லியிலும் வேலுரிலும் நான்கு வருட செவிலியர் பட்ட படிப்பு முறை கொண்டு வரப்பட்டது
 • 1947 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய செவிலியர் குழுமம் அமைக்க அரசால் முடிவு செய்யப்பட்டு
 • 1949 ஆம் ஆண்டு இந்திய செவிலியர் குழுமம் அமைக்கப்பட்டது
 • 1956 ஆம் ஆண்டு செல்வி அட்ரன்வாலா என்பவர் இந்திய அரசாங்கத்தின் செவிலியர் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்
 • 1960 ஆம் ஆண்டு முதன் முதலில் முதுகலை பட்டப்படிப்பு டெல்லியில் உள்ள செவிலியர் கல்லூரியில் துவங்கப்பட்டது
 • 1963 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் உள்ள செவிலியர் பயிற்சி பள்ளியில் பட்டய படிப்பிற்கு பின்பான இரண்டு வருட பட்டபடிப்பு தொடங்கப்பட்டது

மேற்கோள்கள்[தொகு]

 1. "The evolution of the hospital from antiquity to the end of the middle ages". பார்க்கப்பட்ட நாள் 15 Feb 2023.{{cite web}}: CS1 maint: url-status (link)
 2. "Florence Nightingale in India".{{cite web}}: CS1 maint: url-status (link)
 3. "Florence Nightingale biography".{{cite web}}: CS1 maint: url-status (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியாவில்_செவிலியம்&oldid=3768922" இலிருந்து மீள்விக்கப்பட்டது