இந்தியாவில் சாதி தொடர்பான வன்முறைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவில் ஜாதி தொடர்பான வன்முறைகள் (Caste-related violence in India) பல நிகழ்வுகள் மூலம் அதிகமாக நடப்பதாக மனித உரிமைகள் ஆணையம் தெரிவிக்கிறது. அதுவும் குறிப்பாக இந்தியாவில் முதன்மை மதமான இந்து மததிற்குள்ளேயே காணப்படும் இனக்குழுக்குகளை தங்களை உயர்குடிகள் என்று நினைத்துக்கொள்லும் மக்கள் இனப்படுகொலை செய்வதும், தீண்டாமையை கட்டவிழ்த்துவிடுவதும் பல காலமாக நடத்திவருகிறார்கள். இவற்றுள் அதிகமாக பதிக்கப்படுவது பட்டியல் இனத்தவர்களும், பழங்குடிகளுமே ஆகும். இவ்வாறான வன்முறையை அடக்க எவ்வளவுதான சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் அச்சட்டத்தை உள்ளூர் அதிகாரிகளால் முழுவதுமாக நிறைவேற்ற முடிவதில்லை. [1]

1968 கீழ்வெண்மணி படுகொலை, தமிழ்நாடு[தொகு]

1968 ஆம் ஆண்டு ஊதியத்தை உயர்த்திக்கேட்டதற்காக ஏழை மக்களை நில பிரபுக்கள் ஒரே வீட்டுற்குள் வைத்து 44 பேரை தீ வைத்துக்கொளுத்தினர்.

1981 பூலான் தேவி. உத்தரபிரதேசம்[தொகு]

சம்பல் பள்ளதாக்கின் கொல்லைக்காரியும், 1999 ஆம் ஆண்டின் இந்திய மக்களவை உறுப்பினருமான பூலான் தேவி அவருக்கு அரசு ஒதுக்கிய டெல்லி வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். [2]

1990 ரன்வீர் சேனா, பீகார்[தொகு]

பீகார் மாநிலத்தில் 1990 ஆம் ஆண்டு ரன்வீர் சேனா என்ற அமைப்பைத் துவங்கிய உயர்குடி இந்துக்கள் பல ஏழைக் கூலிகளை அழித்தொழித்தனர்.

1996 பதனி டோலா படுகொலை, பீகார்[தொகு]

பதனி டோலா படுகொலை என்பது பீகாரிலுள்ள பதனி டோலா கிராமத்தில் 1996 ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட சாதி மற்றும் முசுலீம் மதத்தைச் சேர்ந்த 21 பேரை, ரன்வீர் சேனா என்ற நிலப்பிரபுக்களின் படை படுகொலை செய்த நிகழ்வாகும்.[3]

1997 மேலவளவு படுகொலை[தொகு]

தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள மேலவலவு கிராமத்தில் 1996 ஆம்ம ஆண்டு நடந்த கிராம பஞ்சாயத்து தேர்தலின்போது அவ்வூரைச்சார்ந்த தலித் மக்கள் மீது சாதி இந்துக்கள் நடத்திய தாக்குதலில் 6 பேர் இறந்தனர். [4] தனி தொகுதியில் நின்று வெற்றிபெற்ற முருகேசன் என்பவரையும் அவருடன் சென்றவர்களையும் சேர்த்து 6 பேரை பேருந்திலிருந்து இறக்கி வெட்டிக்கொன்றார்கள். இப்படுகொலையில் ஈடுபட்ட 17 பேருக்கு சேலம் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வித்தித்து தீர்ப்பளித்தது. இதனை சென்னை உயர்நீதிமனறம் உறுதிசெய்தது.

1997, இலச்மண்பூர் பதே படுகொலைகள்[தொகு]

பீகார் மாநிலம் அர்வால் மாவட்டத்தில் உள்ள இலச்மண்பூர் பதே கிராமத்தில் வசித்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஆதிக்கசாதி ரன்வீர் சேனா தீவிரவாத குழுவினர் தாக்குதல் நடத்தினர். 1997 ஆம் ஆண்டு திசம்பர் 1ம் திகதி நடந்த இந்த தாக்குதலில் 58 தலித் மக்கள் கொல்லப்பட்டனர். அதோடு அவர்களின் வீடுகளும், உடமைகளும் தீக்கிரையாக்கப்பட்டன. இது குறித்து தனது அதிர்ச்சியை தெரிவித்த அன்றைய இந்திய சனாதிபதி கே. ஆர். நாராயணன், அவர்கள் இது சுதந்திர இந்தியாவின் மிக அவமானகரமான நிகழ்வு எனக் குறிப்பிட்டார். [5]

2012 தருமபுரி வன்முறை[தொகு]

2012 நவம்பர் 7 அன்று தமிழ்நாட்டின் தருமபுரி மாவட்டம் நத்தம், பழைய கொண்டாம்பட்டி, புதிய கொண்டாம்பட்டி, அண்ணாநகர் போன்ற ஊர்களில் உள்ள தலித் குடியிருப்புகளில் 200க்கும் மேற்பட்ட வீடுகளை எரித்த நிகழ்வைக் குறிக்கிறது. செல்லன் கொட்டாயைச் சேர்ந்த ஒரு வன்னிய பெண்ணும், அருகில் உள்ள நத்தம் தலித் குடியிருப்பைச் சேர்ந்த தலித் இளைஞனும் காதலித்தத் திருமணம் செய்து கொண்டதால் நடந்த வன்முறையாகும். [6]

2013 மரக்காணம் வன்முறை[தொகு]

2013 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கிராமவாசிகளுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு இடையே நடந்த மோதலாகும். இதில் இரு நபர்கள் கொல்லப்பட்டனர்.[7]

2016 ரோகித் வேமுலாவின் தற்கொலை[தொகு]

2016 ஆம் ஆண்டு ஐதராபாத்து பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்காகப் படித்துக்கொண்டிருந்த மாணவர் தன்னை தங்கும் விடுதியிலிருந்து வெளியேற்றியதற்கும், தனது உதவித்தொகையை நிறுத்தியதற்காகவும், மேலும் தன்னை சாதி ரீதியாக துன்புறுத்துவதாலும் தற்கொலை செய்துகொண்டார். [8] – சனவரி 17, 2016)[9]

2018 மகாராட்டிர தலித் போராட்டங்கள்[தொகு]

சனவரி 1, 2018 ஆம் ஆண்டு சனவரி மாதம் 1 ஆம் திகதி அன்று மகாராட்டிரம் மாநிலம் புனேவில், கோரேகாவ் போரின் 200 ஆம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு நடந்த விழாவில் வன்முறை ஏற்பட்டது. [10]

ஏப்ரல் 2018 இந்தியாவில் சாதி எதிர்ப்புகள்[தொகு]

இந்திய உச்ச நீதிமன்றம், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபர்கள் முன்பிணைக்கு விண்ணப்பிக்கலாம் என தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பிற்கு எதிராக ஆயிரக்கணக்கான பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் இந்தியா முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ச்சியாக நடைபெற்ற வன்முறைகளினால் 10 பேர் இறந்தனர், நூற்றுக்கணக்கானோர் புண்பட்டனர்.[11].

மருத்துவர் பாயல் தடுவா தற்கொலை[தொகு]

2019 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி அன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் பழங்குடி இனத்தின் 26 வயதுள்ள, முதல் மருத்துவப் பெண்ணான பாயல் தடுவா என்பவர் சக மருத்துவ மாணவிகளின் சாதிக் கொடுமையைத்தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார். [12]

மேற்கோள்கள்[தொகு]

  1. "India Events of 2007". Human Rights Watch.
  2. "The queen is dead". The Guardian. 26 சூலை 2001. http://www.guardian.co.uk/g2/story/0,3604,527406,00.html. பார்த்த நாள்: 9 ஆகத்து 2012. 
  3. Banerjee, Shoumojit (2012-04-17). "All accused in 1996 Bihar Dalit carnage acquitted". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/news/national/article3321368.ece. 
  4. "Broken People Caste Violence Against India’s “Untouchables”". https://www.hrw.org/report/1999/03/01/broken-people/caste-violence-against-indias-untouchables#ed740e. 
  5. "Death to 16 in Dalit massacre". Deccan Herald. 7 April 2010. பார்க்கப்பட்ட நாள் 2013-11-14.
  6. K A Shaji, TNN; V Senthil Kumaran; Karthick S (9 November 2012). "Inter-caste marriage sparks riot in Tamil Nadu district, 148 dalit houses torched". Times of India இம் மூலத்தில் இருந்து 27 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130127015708/http://articles.timesofindia.indiatimes.com/2012-11-09/india/35015844_1_dalit-houses-dalit-youth-dalit-boy. பார்த்த நாள்: 30 April 2013. 
  7. "Two killed after violence in Marakkanam near Chennai". The Times of India. 2013-04-26. Archived from the original on 2013-05-01. பார்க்கப்பட்ட நாள் 2013-06-03. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  8. Saubhadra, Chatterji (20 January 2016). "Official certificate scotches doubts over Rohith's Dalit identity". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 20 January 2016.
  9. Aji, Sowmya. "Probe suggests Rohith Vemula's family not dalit: Police". The Economic Times. economictimes.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 23 January 2016.
  10. Srinivasan, Madhuvanti (2018-01-04). "Trains hit, dabbawalas suspend services" (in en-IN). The Hindu. http://www.thehindu.com/news/cities/mumbai/trains-hit-dabbawalas-suspend-services/article22362150.ece. 
  11. "Eight dead in massive India caste protests". BBC. 2 April 2018. https://www.bbc.com/news/world-asia-india-43616242. பார்த்த நாள்: 7 April 2018. 
  12. https://www.huffingtonpost.in/entry/dr-payal-tadvi-case-bmc-suspends-license-of-doctors_in_5cecc03fe4b0512156f69f83