சிப்பாய்க் கிளர்ச்சி, 1857

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இந்தியாவின் 1857 ஆம் ஆண்டுக் கலகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சிப்பாய்க் கிளர்ச்சி, 1857
இந்திய விடுதலைப் போராட்டம் பகுதி

1857 இல் இடம்பெற்ற பெரும் கலகத்தைக் காட்டும் 1912 வரைபடம். கலகம் இடம்பெற்ற நகரங்கள்: மீரட், டெல்லி, கான்பூர், லக்னௌ, ஜான்சி, குவாலியர்.
நாள் மே 10, 1857
இடம் இந்தியா (1857)
கலகம் அடக்கப்பட்டது,
இந்தியாவில் கம்பனியின் ஆட்சி முடிவு
பிரித்தானிய முடியாட்சியின் கீழ் இந்தியா கொண்டு வரப்பட்டது.
நிலப்பகுதி
மாற்றங்கள்
முன்னாள் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியால் உருவாக்கப்பட்ட வட்டாரங்களை உள்ளடக்கிய இந்தியப் பேரரசு, சில இடங்கள் உள்ளூர் அரசர்களிடம் ஒப்படைக்கப்பட்டன, எஞ்சிய இடங்கள் பிரித்தானிய முடியாட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டன.
பிரிவினர்
பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் சிப்பாய்கள்,
7 இந்திய சிற்றரசுகள்,
தனியாட்சிப் பகுதிகளான ஆவாட் மற்றும் ஜான்சி ஆகியவற்றின் வெளியேற்றப்பட்ட அரசர்கள்
சில பொது மக்கள்.
ஐக்கிய இராச்சியம் பிரித்தானிய இராணுவம்
பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் சிப்பாய்கள் Native Irregulars and British regulars, பிரித்தானிய தன்னார்வலர் படைகள்
20 சிற்றரசுகள் (நேபாளம், காஷ்மீர் உட்பட.
தளபதிகள், தலைவர்கள்
இரண்டாம் பகதூர் ஷா
நானா சாகிப்
மிர்சா முகல்
பாக்த் கான்
இராணி இலட்சுமிபாய்
தாந்தியா தோபே
பேகம் ஹஸ்ரத் மகால், அகமதுல்லா சா
இந்தியத் தளபதி:
ஜோர்ஜ் ஆன்சன் (மே 1857 வரை)
சர் பாட்ரிக் கிராண்ட்
சர் கொலின் காம்பல் (ஆகஸ்ட் 1857 முதல்)
ஜங் பகதூர் ராணா [1]
சிப்பாய் கிளர்ச்சி நடைபெற்ற பகுதிகள்

இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 (Indian Rebellion of 1857) அல்லது சிப்பாய்க் கலகம் என்பது பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் சிப்பாய்கள் மே 10, 1857 இல் இந்தியாவில் மீரட் என்ற நகரில் தொடங்கிய கிளர்ச்சியைக் குறிக்கும். இக்கிளர்ச்சி பின்னர் இந்தியாவின் பல இடங்களிலும், குறிப்பாக இந்தியாவின் மத்திய மலைப் பகுதிகளில், பரவியது. பொது மக்கள் பலரும் இக்கிளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டனர். முக்கிய கிளர்ச்சி இன்றைய உத்தரப் பிரதேசம், உத்தரகாண்டம், வடக்கு மத்தியப் பிரதேசம், டெல்லி, மற்றும் குர்காவுன் ஆகிய இடங்களை மையமாகக் கொண்டிருந்தது[2]. கிளர்ச்சியாளர்கள் பிரித்தானியப் படையினருக்கு ஒரு பெரும் சவாலாக விளங்கினர்[3]. ஜூன் 20, 1858 இல் குவாலியர் நகரின் வீழ்ச்சியுடன் இது முடிவுக்கு வந்தது[2]. இக்கிளர்ச்சி ""இந்தியாவின் முதலாவது விடுதலைப் போர்", அல்லது "சிப்பாய்க் கலகம்" எனவும் அழைக்கப்படுகிறது.

கிழக்கிந்தியக் கம்பெனியின் விரிவாக்கம்[தொகு]

இந்தியாவில் வர்த்தக நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட பிரித்தானியரின் தொழில் மற்றும் தொழிற்சாலை பகுதிகளை நிருவகிக்க பிரித்தானிய கிழக்கு இந்திய கம்பெனி நிறுவப்பட்டது. ஆனாலும் இதன் எல்லை மீறிய நடவடிக்கைகளாலும் இந்திய மன்னர்களிடையே ஒற்றுமையின்மையாலும் 1757 ல் பிளாசி போரில் பெற்ற வெற்றியால் கிழக்கு இந்தியாவில் வங்காளம் வரை அதன் ஆட்சி பரவலாக்கப்பட்டது. பக்சர் போரில் முகலாய பேரரசர் ஷா அலாம் II தோற்றபின் 1764-ல் பீகாரும் கிழக்கிந்திய கம்பெனியால் கைப்பற்றப்பட்டது. இதன் காரணமாக வங்கம், பீகார் மற்றும் ஒரிசா மாநிலங்களில் வரி வசூல் செய்யும் உரிமை கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வழங்கப்பட்டது. இந்நிறுவனம் விரைவில் மும்பை, சென்னை போன்ற பகுதிகளில் தன்னை விரிவாக்கம் செய்தது.

ஆங்கில-மைசூர்ப் போர்கள் (1766–1799), ஆங்கில-மராட்டியப் போர்கள் (1772–1818), கர்நாடகப் போர்கள் ஆகியன பரந்த நர்மதா ஆற்றின் தெற்குப் பகுதியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வழிவகுத்தது. அதுவரை இச்செயல்களுக்கு பேரளவில் எதிர்ப்புகள் ஏதும் ஏற்படவில்லை. 1806-ல் தமிழ்நாட்டிலுள்ள வேலூர் சிறைச்சாலையில் இந்து மற்றும் இசுலாமிய சிப்பாய்களிடையே ஆங்கிலேயர் உருவாக்கிய சீருடை விதிமுறைகள் காரணமாகக் கிளர்ச்சி வெடித்தது. இதுவே முதன் முதலில் ஆங்கிலேயருக்கு எதிராக ஏற்பட்ட முதல் கிளர்ச்சியாகும்.[4]

கலகத்திற்கான காரணங்கள்[தொகு]

பொருளாதார காரணங்கள்[தொகு]

1764 ஆம் ஆண்டு பக்சார் போருக்குப் பின் கிழக்கிந்திய வணிகக் குழு இந்தியாவில் ஒரு அரசியல் சக்தியாக எழுச்சியுற்றது. பின் வந்த காலங்களில் இந்தியாவின் வளங்கள் கம்பெனியின் வணிக முன்னேற்றத்திற்காகவே பயன்படுத்தப்பட்டன. இந்தியர்களின் நலன்கள் பெரிதாக பொருட்படுத்தப்படவில்லை. செல்வச் சுரண்டல், இந்திய கைவினைத் தொழில்களின் நலிவு போன்றவை இந்தியாவில் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தன. தொழில் புரட்சியின் விளைவாக பிரிட்டன் தொழிலகங்களில் இயந்திரங்கள் அதிக அளவில் அறிமுகப்படுத்தப்பட்டன. புதிதாக அறிமுகமான இயந்திரங்களின் உதவியால் உற்பத்திப் பொருட்களும் அதிக அளவில் தயாரிக்கப்பட்டன. ஆங்கிலேயே வணிகர்கள் இவற்றை விற்பனை செய்யும் சந்தையாகவே இந்தியாவை பார்க்கத் தொடங்கினர். அதே நேரம் இந்தியாவில் கைவினைஞர்களால் தயாரிக்கப்பட்ட இந்தியப் பொருட்களுக்கு பிரிட்டனில் அதிக வரிகள் விதிக்கப்பட்டன. எனவே இந்தியப் பொருட்களுக்கான தேவை சரிந்து இந்தியத் தொழில்கள் அழிவை நோக்கி சென்றன. இது தவிர ஆங்கிலேயர்கள் நிலவரி மக்கள் விருப்பத்திற்கு எதிராக அமைந்திருந்தன.

அரசியல் காரணங்கள்[தொகு]

ஆங்கிலேயரின் துணைப்படைத் திட்டம் சுதேச சமஸ்தான மன்னர்களிடையே வெறுப்புணர்ச்சி உண்டாக்கியது.

உடனடிக் காரணங்கள்[தொகு]

அப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட என்பீல்டு வகை துப்பாக்கிகள் உடனடிக் காரணமாக அமைந்தன. அவ்வகை துப்பாக்கிகளுக்கு வழங்கப்பட்ட தோட்டாக்கள் ஒரு வகை உறையால் மூடப்பட்டிருந்தன. இவற்றை வாயால் கடித்து உறைகளை அகற்ற வேண்டியிருந்தது. இந்த உறைகள் மாட்டுக் கொழுப்பு மற்றும் பன்றிக் கொழுப்பினால் ஆனவை என்று தகவல் பரவியது. இது இந்து மற்றும் முஸ்லிம் சமயத்தைச் சார்ந்த ராணுவ வீரர்களின் சமய உணர்வை புண்படுத்துவதாக ராணுவ வீரர்கள் எண்ணினர். இதன் காரணமாக ராணுவ வீரர்கள் அவ்வகை உறைகளை வாயால் கடித்து நீக்க மறுத்து உயர் அதிகாரிகளை எதிர்த்தனர். இதன் தொடர்ச்சியாக 1857 மார்ச் 29 ஆம் நாளில் மங்கல் பாண்டே என்ற ராணுவ வீரர் ஒருவர் பாரக்பூரில் தனது உயரதிகாரியை தாக்கி தன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இது ஆங்கிலேய ராணுவத்தில் பணிபுரிந்த இந்திய வீரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட ஒரு ஆரம்பமாக அமைந்தது.

தோல்விக்கான காரணங்கள்[தொகு]

ஆங்கிலேயர்கள் இந்தியக் கிளர்ச்சியை அடக்குவது போன்ற உருசிய ஓவியர் வசீலி வெரசாகி வரைந்த ஓவியம். கிளர்ச்சியில் ஈடுபட்ட சிப்பாய்கள் பீரங்கிகளில் கட்டப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
சிப்பாய் கிளர்ச்சிக்குப் பின் 1860இல் பிரித்தானிய இந்தியாவின் வரைபடம்

சுவாமி விவேகானந்தர் சிப்பாய் கலகத்தின் தோல்விக்கான காரணம் குறித்து கடற்பயணத்தில் தாம் எழுதிய ’எனது பயணம்’ என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

"..இந்திய ராணுவ வீரன் ஒருவனாவது போர்க்களத்தில் கோழையாக நடந்து கொண்டது உண்டா? இல்லை. ஆனால் அவர்களுக்குத் தலைவன் வேண்டும். படைத் தளபதியான ஸ்ட்ராங் என்ற பெயருடைய எனது ஆங்கிலேய நண்பர் சிப்பாய்க் கலகம் நிகழ்ந்தபோது இந்தியாவில் இருந்தார். அதுபற்றி அவர் கதை கதையாகச் சொல்வது உண்டு. போதிய அளவுக்கு பீரங்கிகள், வெடிமருந்துகள், தேவையான மற்ற பொருட்கள் அனைத்தும் இருந்ததுடன், பயிற்சி பெற்ற போர்வீரர்கள் இருந்தும் சிப்பாய்கள் ஏன் அப்படித் தோல்வி அடைந்தார்கள் என்று ஒருநாள் நான் அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் கூறினார்: "தளபதிகள் தலைமை தாங்கி முன்னே செல்லாமல், பின்னே வசதியான இடத்தில் இருந்துகொண்டு, “வீரர்களே! முன்னேறுங்கள், தாக்குங்கள்” என்றெல்லாம் ஆணை பிறப்பித்துக் கொண்டிருந்தனர். தளபதி முன்வந்து மரணத்தை எதிர்கொள்ளாவிட்டால், சாதாரண படை வீரர்கள் போரிடுவார்களா, என்ன?" எல்லாத் துறைகளிலும் இதுதான் நிலைமை!. தளபதி தலை கொடுக்கவும் தயாராக இருக்க வேண்டும்’ தலைகொடுக்க முடியுமானால் மட்டுமே தலைவனாக முடியும். ஆனால் நாமோ தியாகமோ வேதனையோ எதுவும் இல்லாமல் தலைவனாக விரும்புகிறோம். அதனால்தான் எதுவும் நடக்கவில்லை...[5]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. கூர்க்காக்கள் by W. Brook Northey, John Morris. ISBN 81-206-1577-8. Page 58
  2. 2.0 2.1 Bandyopadhyay 2004, ப. 169-172 Bose & Jalal 2003, ப. 88-103 Quote: "The 1857 rebellion was by and large confined to northern Indian Gangetic Plain and central India.", Brown 1994, ப. 85-87, and Metcalf & Metcalf 2006, ப. 100-106
  3. Bayly 1990, ப. 170 Quote: "What distinguished the events of 1857 was their scale and the fact that for a short time they posed a military threat to British dominance in the Ganges Plain."
  4. http://www.hindu.com/mag/2006/08/06/stories/2006080600360400.htm பரணிடப்பட்டது 2006-12-02 at the வந்தவழி இயந்திரம் TheHindu August-2006
  5. எனது பயணம் : சுவாமி விவேகானந்தர்; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; பக்கம் 46

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிப்பாய்க்_கிளர்ச்சி,_1857&oldid=3812917" இலிருந்து மீள்விக்கப்பட்டது