இந்தியாவின் விடிவெள்ளி - சுவாமி விவேகானந்தர் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியாவின் விடிவெள்ளி
சுவாமி விவேகானந்தர்
நூல் பெயர்:இந்தியாவின் விடிவெள்ளி
சுவாமி விவேகானந்தர்
ஆசிரியர்(கள்):நெல்லை விவேகநந்தா
வகை:வரலாறு
துறை:வாழ்க்கை வரலாறு
இடம்:வானதி பதிப்பகம்,
23, தீன தயாளு தெரு,
தி. நகர்,
சென்னை - 600 017.
மொழி:தமிழ்
பக்கங்கள்:252
பதிப்பகர்:வானதி பதிப்பகம்
பதிப்பு:சூன், 2012
ஆக்க அனுமதி:ஆசிரியருக்கு

இந்தியாவின் விடிவெள்ளி சுவாமி விவேகானந்தர் என்பது நெல்லை விவேகநந்தா எழுதிய விவேகானந்தர் வாழ்க்கை வரலாற்று நூல். இது சென்னையில் உள்ள வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

நூலாசிரியர்[தொகு]

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குட்டம் என்கிற கடற்கரையோர கிராமத்தில் ஜெயமுருகானந்தன் பிறந்தார். இவர் நிர்வாகவியலில் முதுகலைப் பட்டமும், இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியலில் முதுகலைப்பட்டமும் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றவர். சென்னையில் ஊடகத் துறையில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர். இவர் சுவாமி விவேகானந்தர் மேல் கொண்ட பற்றுதலால் நெல்லை விவேகநந்தா என்கிற புனைப் பெயரில் கட்டுரைகளையும் தொடர்களையும் தமிழில் வெளியாகும் அச்சிதழ்களிலும் இணைய இதழ்களிலும் எழுதியுள்ளார்.

அணிந்துரை[தொகு]

இந்த நூலுக்கு, ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் எனும் ஆன்மிக - பண்பாட்டு மாத இதழின் ஆசிரியர் சுவாமி விமூர்த்தானந்தர் அணிந்துரை எழுதியிருக்கிறார்.

பொருளடக்கம்[தொகு]

இந்நூலில் 43 தலைப்புகளில் விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றை கதை நடையில் எழுதியுள்ளனர்.

வெளி இணைப்புகள்[தொகு]