இந்தியவியல் தமிழியல் நிறுவனம் (கோலோன் பல்கலைக்கழகம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியவியல் மற்றும் தமிழ்க்கல்வி நிறுவனம் (கொலோன் பல்கலைக்கழகம்) (இடாய்ச்சு மொழி: Instituts für Indologie und Tamil-Studien ஆங்கிலம்: Institute of Indology and Tamil Studies) என்பது ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் உள்ள பல்கலைக் கழகக் கல்விப் பிரிவு ஆகும்.

தமிழ்க் கல்வி மற்றும் ஆய்வுப்பணிகளில் நீண்டகாலமாகப் பங்காற்றி வரும் இந்நிறுவனம், கொலோன் பல்கலைக்கழகத்தின் மறுசீரமைப்புக்குப் பிறகு 2012 முதல் தத்துவத்துறையின் தெற்கு மற்றும் தென்கிழக்காசிய கல்வி நிறுவனத்தின் (Instituts für Südasien- und Südostasien-Studien (SASOA)) ஒரு பகுதியாகச் செயல்படுகிறது [1].

எட்டாம் தமிழ் இணைய மாநாடு இதன் ஒத்துழைப்போடு ஜெர்மனியில் நடைபெற்றது.

பணிகள்[தொகு]

பல்துறை ஆராய்ச்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.[2]

மொழியறிவியல்[தொகு]

சமூகவியல்[தொகு]

  1. மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளின் இன அமைப்பியல், சமூகவியல் மற்றும் பொதுப் பண்பாடு முதலியவற்றை உள்ளடக்கிய மாபெரும் ஆய்வு
    • தென்னிந்திய சமூகம், தலித் மற்றும் பழங்குடியின குழுக்கள் பற்றிய ஆய்வுகள்
    • கிராமங்களில் பண்பாடு, சமயங்கள், மக்கள் இன அமைப்புகள், சமூகக் கட்டமைப்புகள்
  2. பாண்டிச்சேரி பல்கலைக்கழக மானிடவியல் துறையுடனும்[3] தென்னிந்திய நாட்டுப்புறச் சங்கத்துடனும் (SIFS) இணைந்து முன்னாள் பிரெஞ்சு இந்திய மானிடவியல், மற்றும் தென்னிந்திய நாட்டுப்புறம் பற்றிய ஆய்வுகள்
  3. தென் இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகள் (குறிப்பாக கம்போடியா) இடையிலான பண்பாட்டுப் பரிமாற்றம் தொடர்பான ஆய்வுகள்

மருத்துவம்[தொகு]

கொலோன் பல்கலைக்கழகம இந்தியவியலில் ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவ ஆய்வுகள் நடைபெறுகின்றன. தமிழகத்தின் மற்றும் கேரளாவின் உள்நாட்டு அறிஞர்களின் ஒத்துழைப்புடன் ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்திடையே ஒப்பீடு செய்யப்படுகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

சான்றுகள்[தொகு]