இந்தியப் பேரரசின் கிரீடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியப் பேரரசு மகுடம்

இந்தியப் பேரரசின் கிரீடம் என்பது 1911 ஆம் ஆண்டு தில்லி தர்பாரில் இந்தியப் பேரரசராக ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் முடிசூடப் பயன்படுத்திய கிரீடமாகும். [1]

தோற்றம்[தொகு]

பிரித்தானிய அரசியலமைப்பானது அரச மகுடம் உள்ளிட்ட அரச ஆபரணங்களை நாட்டை விட்டு வெளியே கொண்டுசெல்வதை தடைசெய்கிறது. காரணம் மன்னர், அரசி போன்றோர் மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணங்களின்போது அவர்கள் நகைகளுக்காக தாக்கப்படாமலிருக்க இது ஒரு ஏற்பாடாகும். கடல் மற்றும் தரை வழியாக இவ்வளவு நீண்ட தொலைவுக்கு அவற்றைக் கொண்டு செல்வதில் கணிசமான அபாயங்கள் உள்ளன. இந்த காரணங்களுக்காக, இந்திய துணைக்கண்டத்துக்கு 1911இல் ஜார்ஜ் மன்னரும், ராணி மேரி வந்தபோது அவர் அணிய இந்த மணிமகுடம் செய்யப்பட்டது. அச்சமயம் அவர்கள் வந்தபோது இந்திய இளவரசர்கள் மற்றும் பிரித்தானிய அதிகாரிகள் முன்னிலையில் இந்தியாவின் சக்கரவர்த்தி, மகாராணி என்று முடிசூட்டப்பட்டனர். [2]

அந்தச் சமயத்தில் மன்னருக்காக புதியதாக மணிமகுடம் செய்யப்பட்டது. இலண்டனின் பிரபல நகை நிறுவனமான காரார்ட் அண்ட் கோ, தயாரித்த அந்த மணிமகுடத்தின் மதிப்பு 60,000 பவுண்ட். ஆகும். இது இலண்டனில் உள்ள இந்திய அலுவலகத்தால் செலுத்தப்பட்டது. [1]

விளக்கம்[தொகு]

இந்திய மணிமகுடத்தின் எடையானது 920 g (2.03 lb) ஆகும். இதில் 6,170 பெரிய சிறிய வைரங்கள், 9 மரகத கற்கள், 4 மாணிக்க கற்கள், 4 நீலக்கற்கள் போன்றவை பதிக்கப்பட்டிருந்தன. மேலும் மகுடத்தின் முன்புறத்தில் 32 காரட்டுகள் (6.4 g) எடையுள்ள மிகச் சிறந்த மரகதம் பதிக்கப்பட்டிருந்தது.[3] மன்னர் அந்த மகுடம் குறித்து தனது நாட்குறிப்பில், அது அணிய கனமாகவும் சங்கடமாகவும் இருந்த்தது என்று எழுதினார்: "சுமார் 3 12 மணி நேரம் அந்த கிரீடத்தை அணிந்துகொண்டு தர்பார் நிகழ்வுகளைக் கண்டது களைப்பாகவும், தலை வலியை உண்டாக்குவதாகவும் இருந்தது."[4] என்று குறிப்பிட்டுள்ளார்.

பயன்பாடு[தொகு]

டெல்லி தர்பாரில் 1911 இல் கிரீடம் அணிந்த நான்காம் ஜார்ஜ்

விழாவில் ஜார்ஜ் மற்றும் மேரி பேரரசர் மற்றும் பேரரசிக்கான சடங்குகள் செய்யப்பட்டு முடிசூட்டப்படவில்லை. இந்திய துணைக்கண்டமானது இந்து மற்றும் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஒரு நாடு. அங்கு கிறிஸ்தவ முறைப்படி முடிசீடுவது முறையல்ல என்று மன்னரால் கருதப்படது. இதனால் மன்னர் வெறுமனே தர்பாரில் மகுடம் அணிந்தபடி நுழைந்தார். மேலும் தர்பாரானது அரசரின் முடிசூட்டு விழா போன்றே வடிவமைக்கப்பட்டது. மன்னருக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் ஐக்கிய இராச்சியத்தில் முடிசூட்டு விழா நடந்திருந்தது.

ஐந்தாம் ஜார்ஜ் இந்தியாவில் இருந்து திரும்பியதிய பிறகு இநத மகுடத்தை மீண்டும் அணியவில்லை. 1947 ஆகத்து 15 இல், இந்தியப் பேரரசு கலைக்கப்பட்டு, இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் என்ற டொமினியன்கள் உருவாயின. இந்தியப் பேரரசர் என்ற விதத்தில் ஐந்தாம் ஜார்ஜ் சூட்டிக்கொண்ட இந்த கிரீடத்தை இந்தியாவுக்கே திருப்பித் தருமாறு கோரிக்கை எழுந்தது. அந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை.


குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Mears, Kenneth J.; Thurley, Simon; Murphy, Claire (1994). The Crown Jewels. Historic Royal Palaces Agency. பக். 33. https://books.google.com/books?id=r1GJnAEACAAJ. 
  2. "The Imperial Crown of India". Royal Collection Trust. பார்க்கப்பட்ட நாள் 7 December 2015.
  3. Edward_Twining (1960). A History of the Crown Jewels of Europe. B. T. Batsford. பக். 169. https://books.google.com/books?id=XvIOAQAAMAAJ. 
  4. Brooman (1989). The World Since 1900. Longman. பக். 96. https://books.google.com/books?id=JyWgAAAAMAAJ.