இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் இங்கிலாந்துச் சுற்றுப் பயணம், 2021
இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் இங்கிலாந்துச் சுற்றுப் பயணம், 2021 | |||||
இங்கிலாந்துப் பெண்கள் அணி | இந்தியப் பெண்கள் அணி | ||||
காலம் | 16 ஜூன் 2021 – 15 சூலை 2021 | ||||
தலைவர்கள் | ஹெதர் நைட் | மிதாலி ராஜ்(பெண்கள் தேர்வுப் போட்டி மற்றும் பெண்கள் ஒருநாள் தொடர்) ஹர்மன்பிரீத் கவுர்(பெண்கள் இருபது20 தொடர்) | |||
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் | |||||
முடிவு | 1-ஆட்டத் தொடர் 0–0 என்ற கணக்கில் சமனாக முடிந்தது. | ||||
அதிக ஓட்டங்கள் | ஹெதர் நைட் (95) | சஃபாலி வர்மா (159) | |||
அதிக வீழ்த்தல்கள் | சோஃபி எக்ஹல்ஸ்டோன் (8) | சினேஹ் ராணா (4) | |||
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடரில் இங்கிலாந்துப் பெண்கள் அணி 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | நாட் சிவர் (142) | மிதாலி ராஜ் (206) | |||
அதிக வீழ்த்தல்கள் | சோஃபி எக்ஹல்ஸ்டோன் (8) | ஜுலான் கோஸ்வாமி(3) பூனம் யாதவ் (3) |
இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணி , இங்கிலாந்து அணியுடன் விளையாட இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது, இந்த சுற்றுப்பயணம் தற்காலிகமாக ஜூன் 2021 இல் தொடங்க உள்ளது.[1] அனைத்துலக பெண்கள் நாள் அன்று இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா , இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடும் என்று கூறினார். [2][3] இந்திய அணி இறுதியாக 2014 நவம்பரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடினர்.[4]
பின்னணி
[தொகு]முதலில், இந்தச் சுற்றுப்பயணம் ஜூன் மற்றும் ஜூலை 2020 இல் நடைபெற திட்டமிடப்பட்டது.[5] இந்த சுற்றுப்பயணத்தில் நான்கு ஒருநாள் மற்றும் இரண்டு இருபது -20 போட்டிகளாக நடைபெற இருந்தன. [6] இருப்பினும், ஏப்ரல் 24, 2020 அன்று, கோவிட் தொற்றுநோய் காரணமாக, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் துடுப்பாட்ட வாரியம் துடுப்பாட்டத்திற்குத் தடை விதித்ததனால்[7] இந்தச் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டது. [8] மே 2020 இல், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் துடுப்பாட்ட வாரியத்தின் இயக்குனர் கிளேர் கானர், 2020 செப்டம்பரில் சுற்றுப்பயணம் செய்யும் தென்னாப்பிரிக்க அணியுடன் முத்தரப்பு தொடரில் இந்தியா பங்கேற்கலாம் என்று பரிந்துரைத்தார்.[9][10] இருப்பினும், 2020 ஜூலை 20 ஆம் தேதி, இந்தியாவில் தொற்றுநோயின் தாக்கத்தால் இந்தியா சுற்றுப்பயணம் செய்யவில்லை .[11]
இறுதியாக, 2021-ஆம் ஆண்டின் சூன், மற்றும் சூலை மாதங்களில் 1 பெண்கள் தேர்வுப் போட்டி , 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 பெண்கள் இருபது20 போட்டிகள் கொண்ட தொடர் ஆகியவற்றை இங்கிலாந்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது .
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "India set to play a Test against England this year; match likely during their proposed England tour". Women's CricZone. பார்க்கப்பட்ட நாள் 8 March 2021.
- ↑ "India Women to play Test against England this year, says BCCI secretary Jay Shah". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 March 2021.
- ↑ "England to play 'one-off Test' against India this year - BCCI". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 8 March 2021.
- ↑ "India Women to play a Test against England in 2021, confirms Jay Shah". CricBuzz. பார்க்கப்பட்ட நாள் 8 March 2021.
- ↑ "Women's T20 World Cup a chance for England to 'put a few things to right' - Natalie Sciver". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 January 2020.
- ↑ "England Women announce T20 World Cup squad and summer fixtures". England and Wales Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 17 January 2020.
- ↑ "ECB announces further delay to the professional cricket season". England and Wales Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 24 April 2020.
- ↑ "Season delayed until July as England-West Indies postponed". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 24 April 2020.
- ↑ "England women: India & South Africa tri-series an option - Clare Connor". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 21 May 2020.
- ↑ "England women could follow men into training within weeks". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 May 2020.
- ↑ "Covid-19: India women set to pull out of England tour". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 July 2020.