இந்தியப் பாதுகாப்புப் படைகளில் பெண்கள்
இந்திய ஆயுதப் படைகளின் அனைத்துப் பிரிவுகளும் பெண்கள் பணியாற்ற அனுமதிக்கின்றன.போரினை மேற்பார்வை செய்யும் அதிகாரிகள் பணியில் பணியாற்றவும், இந்திய இராணுவத்தில் (ஆதரவு பணியாளர்களாகவும்) மற்றும் இந்தியாவின் சிறப்புப் படைகளிலும் (பயிற்சியாளரர்களாக மட்டும்) பெண்கள் பங்களிக்கின்றனர். (c. 2017) .டிசம்பர் 2018 மற்றும் டிசம்பர் 2014 இல் முறையே இந்திய விமானப்படையில் 13.09% மற்றும் 8.5%, இந்திய கடற்படையில் 6% மற்றும் 2.8% பெண்கள், இந்திய இராணுவத்தில் 3.80% மற்றும் 3% பெண்கள் பணியாற்றினர். [1] [2]
2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, மூன்று அதிகாரிகளுக்கு, உள்ள மூன்று நட்சத்திர தகுதி உடைய கட்டளையாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது, அவர்கள் அனைவரும் மருத்துவ சேவையினைச் சேர்ந்தவர்கள். மே 2021 இல், 83 பெண்கள் இந்திய இராணுவத்தில் முதல் முறையாக ஜவான்களாக சேர்க்கப்பட்டனர், ஜவான்கள் இராணுவ காவல்துறையில் சேர்க்கப்பட்டனர் . [3]
வரலாறு
[தொகு]1888 ஆம் ஆண்டில், பிரித்தானிய ஆட்சியின் போது "இந்திய இராணுவ செவிலியர் சேவை" உருவாக்கப்பட்டபோது இந்திய இராணுவத்தில் பெண்களின் பங்கு தொடங்கியது. [4] 1914-45 காலப்பகுதியில், பிரித்தானிய இந்திய இராணுவ செவிலியர்கள் முதலாம் உலகப் போர் (1914-18) மற்றும் இரண்டாம் உலகப் போர் (1939-45) ஆகியவற்றில் கலந்து கொண்டனர், அதில் 350 பிரித்தானிய இந்திய இராணுவ செவிலியர்கள் இறந்தனர் அல்லது போர்க் கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டனர், அல்லது போரின் போது காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டனர். [4] 1942 இல் ஜப்பானிய குண்டுவீச்சுக்காரர்களால் எஸ் எஸ் கோலா மூழ்கியபோது இறந்த செவிலியர்களும் இதில் அடங்குவர் [4] மகளிர் துணைப் படை (இந்தியா) மே 1942 இல் உருவாக்கப்பட்டது. [5] நூர் இனாயத் கான், ஜார்ஜ் கிராஸ் (2 ஜனவரி 1914 - 13 செப்டம்பர் 1944), இந்திய மற்றும் அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்,அவரது சேவைக்காக இரண்டாம் உலகப் போரின் பிரித்தானிய கதாநாயகியாகப் புகழ் பெற்றார். [6] நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய இராணுவத்தின் கீழ் ஜான்சி ராணிப் படை என்று அழைக்கப்படும் ஒரு பெண்ணின் படைப்பிரிவு இரண்டாம் உலகப் போரின்போது இருந்தது.
குறிப்பிடத்தக்க பெண்கள்
[தொகு]2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, காலாட்படை, இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை, கவசப்படை மற்றும் பீரங்கி போன்ற போர் பிரிவுகளில் பெண்கள் பணியாற்ற அனுமதிக்கப்படவில்லை. [7]
ஆகஸ்ட் 27, 1976 இல், இராணுவ செவிலியர் சேவை கெர்ட்ரூட் ஆலிஸ் ராம், இந்திய இராணுவத்தில் படைத்துறைப் பணித்தலைவர் அந்தஸ்தைப் பெற்ற முதல் பெண் அதிகாரியானார், மேலும் இந்திய ஆயுதப் படையில் முதல் பெண் அதிகாரி இரண்டு -நட்சத்திர தரநிலை கொண்ட பதிவியில் சேர்ந்த முதல் பெண் அதிகாரி எனும் பெருமை பெற்றார்.ராமிற்கு கொடிக்கப்பல் தளபதியாகளின் பதவி வழங்கப்படதன் மூலம் ஒரு உலக அளாவில் இந்தப் பதவி வழஙப்பட்ட மூன்றாவது பெண் எனும் சாதனை பெற்றார். இதற்கு முன்னால் அமெரிக்கா மற்றும் பிரான்சு ஆகிய நாடுகள் பெண்களுக்கு இந்தப் பதவியினை வழங்கியது.[8]
1992 ஆம் ஆண்டில், இந்திய இராணுவம் பெண் அதிகாரிகளை மருத்துவமற்ற பணிகளில் சேர்க்கத் தொடங்கியது. [9] 19 ஜனவரி 2007 அன்று, ஐக்கிய நாடுகள் சபை முதன்முதலில் 105 இந்திய பாதுகாப்புப் பெண்களால் அமைக்கப்பட்ட அனைத்து பெண் அமைதிப்படையும் லைபீரியாவிற்கு அனுப்பப்பட்டது. [10] ருச்சி சர்மா இந்திய இராணுவத்தில் முதல் வான்குடை படைவீரர் ஆனார். இவர் 1996 இல் பணியில் சேர்ந்தார். [11]
சான்றுகள்
[தொகு]- ↑ "Indian Army's shameful treatment of women recruits". NDTV.
- ↑ Women to comprise 20% of Military Police, The Tribune, 18 Jan 2019.
- ↑ "Army inducts 1st batch of women in military police". hindustantimes.com. 9 May 2021.
- ↑ 4.0 4.1 4.2 Indian Army must stop its discrimination against military nurses, ஹிந்துஸ்தான் டைம்ஸ், 13 December 2017.
- ↑ Perry, Frederick William (1988). The Commonwealth armies: manpower and organisation in two world wars (p.1114).
- ↑ "Noor Inayat Khan: remembering Britain's Muslim war heroine," 23 October 2012.
- ↑ "Women officers in 8 more streams, MoD issues order". The Tribune India. 2020-07-24.
- ↑ "India's First Woman General" (PDF). Press Information Bureau of India - Archive. 30 August 1976. பார்க்கப்பட்ட நாள் 3 April 2020.
- ↑ Women officers entry
- ↑ "First All-Female U.N. Peacekeeping Force to Deploy to Liberia". Fox News Channel. 19 January 2007. http://www.foxnews.com/story/0,2933,244862,00.html.
- ↑ Mukherjee, Oindrila (2018-03-01). "First jump is like first love, exciting and exhilarating: Capt (Retd) Sharma". The Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-07.