இந்தியப் படைக்கலச் சட்டம், 1959

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியப் படைக்கலச் சட்டம், 1959, பிரிவு 3(1) ன் படியும் மற்றும் 1962ம் ஆண்டின் படைக்கல விதிகளின் படியும் படைக்கல உரிமம் இன்றி எந்தவொரு நபரும் படைக்கலத்தை வைத்திருத்தல் கூடாது.[1] இச் சட்டப்பிரிவு 3(2) ன் படி ஒரு நபர் மூன்று படைக்கலங்களுக்கு மேல் வைத்துக்கொள்ளக் கூடாது.

விதி எண் 3(2)ன் படி ரைபிள் கிளப்பில் ஆயுள் கால உறுப்பினராக இருக்கும் நபர் மூன்று படைக்கலங்கள் தவிர்த்து ஒரு ரைபிள் வைத்துக் கொள்ளலாம்.[2]

தற்காப்பு, பயிர் பாதுகாப்பு, கால் நடைபாதுகாப்பு, விளையாட்டுகளில் பங்கெடுத்துக் கொள்ளுதல் போன்ற தகுதியான காரணங்களுக்காக மட்டுமே படைக்கல உரிமங்கள் வழங்கப்படுகின்றன.

தடை செய்யப்படாத துப்பாக்கிகள், ரைபிள், ரிவால்வர், பிஸ்டல் போன்ற படைக்கலங்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் / மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் வழங்கும் அலுவலர்களாக இருப்பார்கள்.

பொதுவாக படைக்கல உரிமங்கள் மூன்றாண்டு காலத்திற்கு செல்லதக்கதாகும். குறிப்பிட்ட காரணங்களுக்காக குறைந்த காலத்திற்கும் உரிமம் வழங்கிடலாம். ஒரு உரிமம் எவ்வளவு காலத்திற்கு வழங்கப்பட்டதோ, அதே கால அளவிற்கு தொடர்ந்து புதுப்பிக்கப்பட வேண்டும். (பிரிவு 15)

படைக்கலத்தை விற்கவும் மாற்றம் செய்யவும் உரிமம் பெற்ற நபர் சம்பந்தபட்ட உரிமம் வழங்கிய அதிகாரியின் முன் அனுமதி பெற வேண்டும். படைக்கல உரிமம் பெற்ற நபர் காலமாகிவிட்டால் படைக்கலம் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது படைக்கல கிடங்கிலோ பாதுகாப்பாக ஒப்படைக்கப்படவேண்டும். மேலும் கலவர காலங்களில் படைக்கலங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவிக்கும் போது, படைக்கலங்கள் வைத்திருப்பவர்கள் அதனை உடனடியாக காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும்

மேற்கோள்கள்[தொகு]

  1. "INDIAN ARMS ACT 1959". Archived from the original on 2015-05-15. பார்க்கப்பட்ட நாள் 2017-09-19.
  2. "INDIAN ARMS RULES 1962". Archived from the original on 2017-09-20. பார்க்கப்பட்ட நாள் 2017-09-19.