இந்தியத் தொலைக்காட்சி சேவைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவில் தொலைக்காட்சி சேவைகள் 1959 ஆம் ஆண்டு டெல்லியில் தொடங்கின. இது முதன்முதலாக கல்வி ஒளிபரப்பிற்காகத் தொடங்கப்பெற்றது. சின்னத்திரைகளின் நிகழ்ச்சிகள் 1980 முதலாக தொடங்கியது. முதன்முதலாக தேசிய ஒளிபரப்புச் சேவையை தூர்தர்சன் தொடங்கியதும் இதே கால கட்டமே ஆகும். இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகிய இரண்டு காப்பியங்களே முதன் முதலாக தொலைக்காட்சித் தொடர்களாக தயாரிக்கப்பட்டன. மேலும் இத்தொடர்கள் உலகில் அதிகமாக பார்க்கப்பெற்ற தொடர்களாகவும் புகழ் பெற்றிருந்தன. 1990கள் வரை அரசு தொலைக்காட்சி சேவைகள் மட்டுமே இந்தியாவில் ஒளிபரப்பப்பட்டு வந்தன. 1990கள் முதல் நூற்றுக்கணக்கான தனியார் தொலைக்காட்சி சேவைகள் உருவாகின. தற்போது இந்தியாவெங்கும் கம்பிவழி தொலைக்காட்சி சேவைகளும், நேரடி ஒளிபரப்பு (DTH) சேவைகளும் அதிகம் உள்ளன. சில இடங்களில் இணையவழி தொலைக்காட்சி சேவைகளும் (IPTV) துவக்கப்பட்டுள்ளன.