உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியத் திரைப்படங்களில் இலங்கைத் தமிழர்களின் சித்தரிப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியத் திரைப்படங்களில் இலங்கைத் தமிழர்களின் (Portrayals of Sri Lankan Tamils in Indian cinema) சித்தரிப்புகள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவற்ற எந்தவொரு உணர்வும் தமிழ்நாட்டில் பெரும்பாலும் விமர்சிக்கப்படுகிறது. இதன் விளைவாக, இதுபோன்ற படங்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டுத் தமிழ் மக்களிடமிருந்தும், புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழ் மக்களிடமிருந்தும் அரசியல் அழுத்தங்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டுள்ளன.[1][2]

இந்தியத் திரைப்படங்கள் பெரும்பாலும் இலங்கைத் தமிழர்களை சாதாரண மக்களாகக் காட்டுவதற்குப் பதிலாக போராளிகளாகவோ அல்லது அகதிகளாகவோ காட்டுவது விமர்சனத்துக்கு உள்ளாகிறது.[3] இந்தியத் திரைப்படப் படைப்பாளிகள் தங்கள் படங்களில் இலங்கைத் தமிழ் கதாபாத்திரங்களைச் சேர்க்கும்போது பெரும்பாலும் முக்கிய கருப்பொருள்களாக இராஜீவ் காந்தி படுகொலை, இலங்கைப் போரின் முடிவு, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நாடற்ற இலங்கை புலம்பெயர்ந்தோரின் கதைகள் ஆகியவையே உள்ளன.[3]

இந்தியத் திரைபடங்களில் இலங்கைத் தமிழர் சமூகத்தை நேரடியாகக் குறிப்பிடுவது தொடர்பான பரவலர் பண்பாட்டுப் பங்களிப்புகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. தமிழ் பேசும் (அல்லது பேசிய) மற்றும் முதலில் இலங்கையிலிருந்து வந்த அனைத்து சமூகங்களும் இதில் அடங்கும். இன்று இலங்கைத் தமிழர்கள் நாடுகடந்த சிறுபான்மையினராக உலகம் முழுவதும் காணப்படுகின்றனர். இந்தக் கட்டுரையில் உள்ள பெரும்பாலான படங்கள் தமிழகத் திரைப்படங்களில் இருந்து எடுக்கப்பட்டாலும், மலையாளம், இந்தி உள்ளடக்கமும் இதில் உள்ளன.[4]

நடிகர்களும் கலைஞர்களும்

[தொகு]

பின்வரும் நடிகர்கள், நடிகைகள், திரைப்பட தொழில்நுட்ப வல்லுநர்கள் இன ரீதியாக, குறைந்தபட்சம் ஓரளவுக்கு, இலங்கைத் தமிழர்களாவர். இந்தத் துறையில் நுழைந்த துவக்க ஆண்டு முதல் கடைசி ஆண்டு வரை பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

நடிகர்கள்
நடிகைகள்
தொழில்நுட்பப் பிரிவினர்
இசைக்கலைஞர்கள்

1980களில் திரைப்படங்களில்

[தொகு]

புன்னகை மன்னன் (1986)

[தொகு]

கே. பாலசந்தரின் காதல் நாடகத் திரைப்படமான புன்னகை மன்னன் (1986) திரைப்படத்தில் ரேவதி ஒரு தமிழ் நடனக் கலைஞரைக் காதலிக்கும் சிங்களப் பெண்ணாக முதன்மை வேடத்தில் நடித்தார். ஒரு காட்சியில், இலங்கையில் நிலவும் அரசியல் பதட்டங்கள் காரணமாக அவர் இலங்கைத் தமிழர்களால் கடத்தப்படுகிறார். படம் வெளியான நேரத்தில், ஒரு சிங்களப் பெண்ணை நேர்மறையாக காண்பித்ததற்காக இந்தப் படம் பேசுபொருளாக மாறியது.[1]

1990களில் திரைப்படங்களில்

[தொகு]

உனக்காக பிறந்தேன் (1992)

[தொகு]

பாலு ஆனந்த்தின் காதல் நாடகத் திரைப்படமான உனக்காக பிறந்தேன் (1992), படத்தில் கதாநாயகியாகவும் அவரது தாத்தாவாக மோகினியும், ஜனகராஜும் நடித்திருந்தனர். அவர்கள் இந்தியாவில் உள்ள அகதி முகாமில் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழ் அகதிகளாக சித்தரிக்கப்பட்டனர்.[42]

தி டெரரிஸ்ட் (1997)

[தொகு]

சந்தோஷ் சிவன் இயக்கிய த டெரரிஸ்ட் (1997) திரைப்படம் முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தியின் படுகொலை மற்றும் இலங்கை உள்நாட்டுப் போரை பின்னணியாகக் கொண்டிருந்தது. இந்தத் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளைப் பெற்றது. மேலும் 1998 கெய்ரோ சர்வதேச திரைப்பட விழாவில் இந்த படத்தை முதன்முதலில் பார்த்த நடிகர் ஜான் மல்கோவிச், பின்னர் இந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக முன்வந்தார். விமர்சகர் ரோஜர் எபர்ட் இந்த படத்தை தனது "கிரேட் மூவிஸ்" விமர்சனத் தொடரில் சேர்த்தார்.[43]

2000களின் திரைப்படங்கள்

[தொகு]

தெனாலி (2000)

[தொகு]

கே. எஸ். ரவிக்குமார் இயக்கிய நகைச்சுவை நாடகத் திரைப்படமான தெனாலி (2000), மனநல சிகிச்சைக்காக சென்னைக்கு வரும் இலங்கை தமிழ் அகதியாக கமல்ஹாசன் முதன்மை வேடத்தில் நடித்தார். இலங்கை உள்நாட்டுப் போரின் போது அவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக அவருக்கு பய உணர்வுகள் ஏற்படுகின்றன. யாழ்ப்பாணத் தமிழை சரியாகப் பேசுவதற்காக, கமல்ஹாசன் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் அப்துல் ஹமீதிடம் பயிற்சி பெற்றார்.[44][45]

காற்றுக்கென்ன வேலி (2001)

[தொகு]

புகழேந்தி தங்கராஜின் நாடகத் திரைப்படமான காற்றுக்கென்ன வேலி (2001) விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் இந்தியாவுக்கு வந்த கதையைக் கூறியது. படத்தில் அருண் பாண்டியன், குஷ்பு, சுஜிதா உள்ளிட்ட நடிகர்கள் இலங்கைத் தமிழர்களாக நடித்தனர்.[46]

நந்தா (2001)

[தொகு]

பாலாவின் நாடகத் திரைப்படமான நந்தா (2001) தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழ் அகதியாக, லைலா நடித்த கதாபாத்திரம் இடம்பெற்றது.[47]

கன்னத்தில் முத்தமிட்டால் (2002)

[தொகு]

மணிரத்னத்தின் குடும்ப நாடகத் திரைப்படமான கன்னத்தில் முத்தமிட்டால் (2002) சுஜாதா எழுதிய "அமுதாவும் அவனும்" என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது. இலங்கை உள்நாட்டுப் போருக்கு இடையில் தன்னைப் பெற்ற தாயைச் சந்திக்க விரும்பும் தமிழ்நாட்டுப் பெற்றோர்களால் தத்தெடுக்கப்பட்ட இலங்கைத் தமிழ்க் குழந்தையின் கதையை இந்தப் படம் விவரிக்கிறது. வட இலங்கையில் விடுதலைப் புலிகளின் தளத்தை சித்தரிக்க கேரளக் காடுகளில் படப்பிடிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. குழந்தை நட்சத்திரமான பி. எஸ். கீர்த்தனா தன்னைப் பெற்ற உண்மையான பெற்றோரைத் தேடும் குழந்தை பாத்திரத்தில் நடித்தார். குழந்தையின் உண்மையான பெற்றோர் கதாபாத்திரங்களில் ஜே. டி. சக்ரவர்த்தி, நந்திதா தாஸ் ஆகியோர் நடித்தனர். இலங்கையர்களாக நடித்த பிற நடிகர்களில் பசுபதி ஒரு விடுதலைப் புலி போராளியாகவும், சசிகுமார் சுப்பிரமணி ஒரு தற்கொலை குண்டுதாரியாகவும், ஈஸ்வரி ராவ் போருக்கு இடையில் சிக்கிய ஒரு பெண்ணாகவும் நடித்தனர்.[48] இந்த படம் ஆறு தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றது. இது கூட்டாக அதிக விருதுகள் பெற்ற தமிழ்த் திரைப்படம் என்ற பெயரைப் பெற்றது.[49]

சயனைடு (2006)

[தொகு]

ஏ. எம். ஆர். ரமேஷ், இயக்கிய கன்னடத் திரைப்படமான சயனைடு (2006) முன்னாள் பிரதமரான இராஜீவ் காந்தியின் படுகொலையையும், ஈழப்போரையும் பின்னணியாக கொண்டது. இப்படம் தமிழில் குப்பி என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது. இப்படம் விமர்சன ரீதியில் பாராட்டுகளைப் பெற்றது.[50]

ஆணிவேர் (2006)

[தொகு]

ஜான் மகேந்திரனின் போர் திரைப்படமான ஆணிவேர் (2006) இலங்கையில் அப்போது நடந்து கொண்டிருந்த உள்நாட்டுப் போரின் போது எடுக்கபட்ட ஒரு காதல் கதை. தமிழ் திரைக்கண் என்ற சுயாதீன விநியோக நிறுவனத்தால் விநியோகிக்கப்பட்ட இந்தப் படம், ஆத்திரேலியா, கனடா, ஐக்கிய இராச்சியத்தில் உள்ள தமிழர் புலம்பெயர்ந்த பகுதிகளில் வெளியிடப்பட்டது.[51] அடுத்த ஆண்டு இந்தியாவிலும் படம் வெளியிடப்பட்டது.[52]

குற்றப்பத்திரிகை (2007)

[தொகு]

ஆர். கே. செல்வமணி இயக்கிய, குற்றப்பத்திரிகை (2007) முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தியின் படுகொலை மற்றும் ஈழப் போரை பின்னணியாகக் கொண்டது. இந்தப் படம் 1991 இல் எடுக்கபட்டது, கடுமையான அரசியல் செய்தியைக் கொண்ட அத்தகைய படத்தை வெளியிட தணிக்கை வாரியம் அனுமதிக்க மறுத்ததால் பதினைந்து ஆண்டுகள் முடங்கிப் போனது. படம் இறுதியாக 2007 மார்ச்சில் பல வெட்டுக்களுடன் வெளியிடப்பட்டது.[53][54]

2006 திசம்பரில், வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தீர்ப்பினால், சில வெட்டுக்களுக்குப் பிறகு 'ஏ' சான்றிதழுடன் படத்தைத் திரையிட அனுமதிக்கபட்டது. நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை எதிர்த்து இந்தியத் தணிக்கை வாரியம் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தடைசெய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை இந்தப் படம் ஆதரிப்பதாக மனுவில் முன்னர் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. தணிக்கையாளர்கள் வெட்ட விரும்பிய காட்சிகளில், புலிகளின் பயிற்சி, ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து காவல்துறை அதிகாரிகள் தப்பிச் செல்வது ஆகியவை அடங்கும்.[55]

மிஷன் 90 டேஸ் (2007)

[தொகு]

மேஜர் ரவி இயக்கிய மலையாள அரசியல் அதிரடி பரபரப்பூட்டும் திரைப்படமான மிஷன் 90 டேஸ் (2007) இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தியின் படுகொலை மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த விசாரணையை அடிப்படையாகக் கொண்டது.[56]

ராமேஸ்வரம் (2007)

[தொகு]

செல்வத்தின் நாடகத் திரைப்படமான ராமேஸ்வரம் (2007) தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழ் அகதியாக முதன்மைப் பாத்திரத்தில் ஜீவா நடித்தார்.[57]

மற்றவை

[தொகு]

2010களின் திரைப்படங்கள்

[தொகு]

சிவப்பு மழை (2010)

[தொகு]

சிவப்பு மழை படத்தில், சுரேஷ் ஜோக்கிம் ஒரு இலங்கை தமிழராக நடித்தார். அவர் மீரா ஜாஸ்மின் கதாபாத்திரத்தை கடத்தி, இலங்கை அகதியாக அலெக்ஸ் நடித்த பாத்திரத்தை விடுவிக்கக் கோருகிறார்.[62]

உச்சிதனை முகர்ந்தால் (2011)

[தொகு]

புகழேந்தி தங்கராஜின் நாடகத் திரைப்படமான உச்சித்தனை முகர்ந்தால் (2011) மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இந்தியாவுக்குச் சென்ற கதையைச் சொன்னது. நடிகை நீனிகா முதன்மை வேடத்தில் நடித்தார்.[63]

பில்லா 2 (2012)

[தொகு]

சக்ரி டொலெட்டியின் பில்லா 2 (2012) படம் அஜித் குமார் நடித்த பில்லா படத்தின் இரண்டாம் பாகமாகும். இது இலங்கையின் கடலோரப் பகுதியைச் சேர்ந்த ஒரு சாதாரண மனிதனான டேவிட் பில்லா என்கிற முக்கியக் கதாபாத்திரம் எவ்வாறு ஒரு பயங்கரமான நிழலுலகத் தலைவனாக மாறுகிறான் என்பதை மையமாகக் கொண்டது. கதாபாத்திரத்தின் வளர்ச்சி காரணமாக, ஒரு தமிழ் கல்வியாளர் "கோலிவுட்டில் ஒரு ஈழத் தமிழரின் மிகவும் விரும்பத்தக்க சித்தரிப்பு டேவிட் பில்லா, அரசியல் ரீதியாக எந்த ஒரு ஈழத் தமிழரும் விரும்புவார்" என்று குறிப்பிட்டார்.[3]

இனம் (2013)

[தொகு]

சந்தோஷ் சிவன் இயக்கிய இனம் (2013) என்ற போர் திரைப்படம் " விடுதலைப் புலிகள் தொடர்பான மோதல்கள் மற்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணத்தை மையமாகக் கொண்ட ஒரு கடுமையான அரசியல் படம்" என்று அறிவிக்கப்பட்டது.[64] 2012 சூனில், சிவன், " இனம் படத்தை இலங்கை நிலைமையை நெருக்கடியில் சிக்கிக் கொள்ளும் ஒரு சில இளைஞர்களின் பார்வையில் இருந்து பார்க்க விரும்புகிறேன். இது அரசியலைப் பற்றியது அல்ல, பயங்கரங்கள் மீது வெளியாட்களின் எதிர்வினையைப் பற்றியது" என்று கூறினார்.[65] மழைக்குப் பிறகு இலங்கையில் படப்பிடிப்பு நடத்துவேன் என்றும், " இலங்கை ஒரு சுற்றுலா தலமாகத் தோன்றுவதை விரும்பவில்லை" என்றும் அவர் கூறினார்.[65] படம் வெளியானதும் பரவலான விமர்சனங்களைப் பெற்றது.[66]

படம் வெளியான பிறகு, புதுச்சேரியில் உள்ள பாலாஜி திரையரங்கைத் தாக்கிய தந்தை பெரியார் திராவிடர் கழகத் தொண்டர்களின் போராட்டங்களைத் தொடர்ந்து, ஈழப் போரை படம் மோசமாக சித்தரிப்பதாகக் கூறிதால், நான்கு காட்சிகளும் ஒரு உரையாடலும் நீக்கப்பட்டன.[67] மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோவும் இந்தப் படம் சிங்களவர்களுக்கு ஆதரவானது என்று கடுமையாக விமர்சித்ததைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் என். லிங்குசாமி 31 மார்ச் 2014 முதல் திரையிடலை நிறுத்திவிட்டு திரையரங்குகளில் இருந்து படத்தை திரும்பப் பெற முடிவு செய்தார். இந்தச் சூழ்நிலையால் அவருக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டது.[1][68]

மெட்ராஸ் கஃபே (2013)

[தொகு]

சூஜித் சிர்க்கார் இயக்கிய இந்தி அரசியல் அதிரடி பரபரப்பூட்டும் படமான மெட்ராஸ் கஃபே 2023 ஆகத்தில் வெளியானது. இந்த படம் 1980களின் பிற்பகுதியிலும் 1990களின் முற்பகுதியிலும், இலங்கை உள்நாட்டுப் போரில் இந்தியா தலையிட்ட காலத்திலும், இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட காலத்தைக் களமாக கொண்டு அமைக்கப்பட்டது. இந்திய அமைதி காக்கும் படை பின்வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளான பிறகு, யாழ்ப்பாணத்தில் இரகசிய நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்க உளவுத்துறை நிறுவனமான ராவால் நியமிக்கப்பட்ட இந்திய இராணுவ சிறப்பு அதிகாரியைப் பற்றியது இந்தப் படம்.[69][70] அஜய் ரத்னம் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார்.[71]

மாசு என்கிற மாசிலாமணி (2015)

[தொகு]

வெங்கட் பிரபு இயக்கிய திகில் நகைச்சுவைத் திரைப்படமான மாசு என்கிற மாசிலாமணி (2015) படத்தில் , சூர்யா கனடாவின் கியூபெக் நகரில் இலங்கைத் தமிழ் காவல்துறை அதிகாரியாக நடித்தார்.[72]

சிவப்பு (2015)

[தொகு]

சத்யசிவாவின் சிவப்பு (2015) திரைப்படம் தமிழ்நாட்டில் கட்டுமானத் தொழிலாளர்களாகப் பணிபுரியும் இலங்கை அகதிகளின் கதையைச் சொன்னது, ரூபா மஞ்சரி ஒரு இலங்கைத் தமிழராக நடித்தார்.[73] ஒரு விமர்சகர் "இயக்குநர் காதல், இலங்கைத் தமிழர் பிரச்சினை என இரண்டையும் சமமாகக் கலந்து ஒரு காதல் கதையைக் கொண்டு ஒரு வலுவான செய்தியைச் சொல்ல முயல்கிறார். ஆனால் அது இங்கேயும் இல்லாமல், இங்கேயும் இல்லாமல் உள்ளது" என்று குறிப்பிட்டார்.[74]

ஆண்டவன் கட்டளை (2016)

[தொகு]

எம். மணிகண்டன் இணைந்து எழுதி இயக்கிய நையாண்டி நகைச்சுவைத் திரைப்படமான ஆண்டவன் கட்டளை (2016) தமிழ்நாட்டின் உட்பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் லண்டனுக்கு விமானத்தில் செல்வதற்கான பயண ஆவணங்களைப் பெற எவ்வாறு போராடுகிறார்கள் என்பதை விவரிக்கிறது. இந்திய வதிவிட அனுமதி வழங்கப்படாத ஒரு இலங்கை தமிழ் அகதிநான அரவிந்தன் என்ற முக்கியப் பாத்திரத்தில் நேசன் நடித்தார். ஒரு முக்கிய காட்சியில், யோகி பாபு நடித்த கதாபாத்திரம் இலங்கை தமிழ் அகதியாகக் காட்டிக் கொண்டு லண்டனுக்கு பறக்க முயற்சிக்கிறது, ஆனால் அங்கிருந்து கொழும்புக்கு நாடு கடத்தப்படுகிறது.[75]

செக்கச்சிவந்த வானம் (2017)

[தொகு]

மணிரத்னத்தின் செக்கச்சிவந்த வானம் (2017) படத்தில் அருண் விஜய் நடித்த கதாபாத்திரத்தை மணந்தவராக துபாயில் குடியேறிய இலங்கைத் தமிழர் பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தார்.[76] கல்கி கிருஷ்ணமூர்த்தியின் தமிழ் வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வனில் இருந்த பூங்குழலியின் பாத்திரத்தை விமர்சகர்கள் குறிப்பிட்டனர்.[77]

பிற

[தொகு]
  • 2010களில், வலுவான இலங்கை தமிழ் கருப்பொருள்களைக் கொண்ட குறைந்த செலவில் எடுக்கப்பட்ட பல இந்தியத் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டன. இதில் அஜய் நூதக்கியின் ராவண தேசம் (2013), பிரவீன் காந்தியின் புலிப்பார்வை (2014), எம். எஸ். ஆனந்தின் யாழ் (2017) கே. கணேசனின் 18.05.2009 (2018) ஆகியவை அடங்கும்.[78] குமார் ஜி. வெங்கடேசின் நீலம் மற்றும் ஷெரின் சேவியரின் முற்றுப் புள்ளியா..? உள்ளிட்ட பிற படங்கள் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி தடை செய்யப்பட்டன.[79]
  • செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் (2010), ஏ. ஆர். முருகதாசின்' ஏழாம் அறிவு (2011), அட்லீயின் மெர்சல் (2017) உள்ளிட்ட திரைப்படங்கள் இலங்கைத் தமிழர்களின் அவல நிலையைக் குறிப்பிடும் உரையாடல்களையும் கருப்பொருள்களையும் கொண்டிருந்தன.
  • ஏ. எல். விஜய்யின் தாண்டவம் (2012) படத்தில், நடிகர் நாசர் இங்கிலாந்தின் லண்டனில் வசிக்கும் இலங்கை தமிழ் காவல்துறை அதிகாரியாக நடித்தார்.[80]
  • 2010களில் இந்தியா-இலங்கை மீன்பிடி எல்லைத் தகராறை ஒட்டிய பதட்டங்கள் நீர்ப்பறவை (2012), மரியான் (2013) போன்ற படங்களில் சுருக்கமாக விவரிக்கப்பட்டன.[78]
  • 2014 ஆம் ஆண்டில், தமிழக அரசியல் கட்சிகளும் தமிழ் புலம்பெயர்ந்தோரும் ஏ. ஆர். முருகதாசின் கத்தி (2014), வெளியீட்டிற்கு எதிராகப் போராட்டம் நடத்தினர், லைகா புரொடக்சன்ஸ் இலங்கை அதிபர் மகிந்த ராசபக்சவின் உறவினர்களுடன் தொடர்பு கொண்டிருப்பதாகக் கூறினர். காலப்போக்கில், எதிர்ப்புகள் அடங்கி, லைகா புரொடக்சன்ஸ் இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக மாறியுள்ளது.[81]
  • மதுர நரங்கா (2015) என்ற மலையாளத் திரைப்படத்தில் பார்வதி ரதீஷ் பாரசீக வளைகுடாவில் வசிக்கும் இலங்கைத் தமிழ் பெண்ணாக நடித்தார்.[82]
  • 2017 ஆம் ஆண்டு வெளியான தெலுங்குத் திரைப்படமான ஒக்கடு மிகிலடு படத்தில் மஞ்சு மனோஜ் விடுதலைப் புலிகளின் தலைவராக நடித்தார்.[83]
  • மலையாளத் திரைப்படமான ரணம் (2018) படத்தில் இல் டிட்ராயிட்டில் இருந்து தொராண்டோவிற்கு குடிபெயர்ந்த இலங்கை தமிழ் நிழலுலகத் தலைவராக ரகுமான் நடித்தார்.[84]
  • கடல் குதிரைகள் (2018) படத்தில் ரோகிணி இலங்கை தமிழ் அகதியாக நடித்தார்..[85]
  • 2018 அக்டோபரில் இயக்குநர் குமார் ஜி. வெங்கடேஷ், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான சீறும் புலி படத்தில், பாபி சிம்ஹா முக்கிய வேடத்தில் நடிப்பதாக அறிவித்தார். அறிவிப்பு வெளியானாலும், படத்தின் தயாரிப்பில் முன்னேற்றம் ஏற்படவில்லை.[86]

2020களின் திரைப்படங்கள்

[தொகு]

மீண்டு ஒரு மரியாதை (2020)

[தொகு]

இங்கிலாந்தை மையமாக கொண்டு எடுக்கபட்ட பாரதிராஜாவின் மீண்டும் ஒரு மரியாதை (2020) லண்டனில் உள்ள இலங்கைத் தமிழ் சமூகம் சம்பந்தப்பட்ட பல காட்சிகளைக் கொண்டிருந்தது..[87]

பேமிலி மேன் 2 (2021)

[தொகு]

ராஜ் மற்றும் டி.கே இயக்கிய தி பேமிலி மேன் (2021) என்ற இந்தி வலைத் தொடரின் இரண்டாவது பருவம், இலங்கைத் தமிழர்களின் பிரிவினைப் போராட்டத்தை மையமாகக் கொண்டதாக இருந்தது. இந்தத் தொடரில், லண்டனில் உள்ள நாடுகடத்தப்பட்ட தலைவர்களின் உத்தரவின் பேரில், சென்னையில் ஒரு சர்ச்சைக்குரிய சந்திப்பை ஏற்பாடு செய்த இந்திய மற்றும் இலங்கை பிரதமர்களைக் கொலை செய்ய தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழீழப் பிரிவினைவாத போராளிகள் போரிடுவதை சித்தரித்தது. சமந்தா ருத் பிரபு மற்றும் ஆனந்தசாமி ஆகியோர் சென்னையைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்களாகவும், இறுதியில் கொலை செய்யும் பணியில் ஈடுபடும் கதாபாத்திரங்களாக நடித்தனர். நடிகர்கள் மைம் கோபி மற்றும் அழகம்பெருமாள் ஆகியோர் விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் ஆகியோரை அடிப்படையாகக் கொண்ட கதாபாத்திரங்களில் நடித்தனர்.[88]

மே 24, 2021 அன்று, நாடு முழுவதும் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான இந்த வலைத் தொடரின் வெளியீட்டை நிறுத்தவோ அல்லது தடை செய்யவோ உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியது.[89] தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோ தங்கராஜ், மத்திய ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு எழுதிய கடிதத்தில், "இந்த வலைத் தொடர் (ஜூன் 2021 இல் வெளியிடப்பட உள்ளது) ஈழத் தமிழர்களின் உணர்வுகளைகளை மட்டுமல்லாமல், தமிழக மக்களின் உணர்வுகளையும் புண்படுத்துகிறது. இதை ஒளிபரப்ப அனுமதித்தால், அது மாநிலத்தில் நல்லிணக்கத்துக்கு பேணுவதற்கு பாதகமாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.[90] இருப்பினும், இந்தத் தொடர் எந்த தாமதமும் இல்லாமல் ஒளிபரப்பபட்டது.[91]

மேதகு (2021)

[தொகு]

இந்தப் படம் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது.[92]

ஜகமே தந்திரம் (2021)

[தொகு]

கார்த்திக் சுப்பராஜின் ஜகமே தந்திரம் (2021) திரைப்படம், 2009 ஆம் ஆண்டு ஈழப் போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து அண்மையில் லண்டனுக்கு குடிபெயர்ந்த இலங்கைத் தமிழ் குடியேறிகளின் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டிருந்தது. இந்தப் படத்தின் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா இலட்சுமி லண்டனில் அகதியாக குடியேறிய ஒரு பார் பாடகியாக நடித்தார், அவர் தன் உறவினர் அஸ்வந்த் அசோக்குமாருடன் நடித்தார். ஜோஜு ஜார்ஜ், கலையரசன், தீபக் பரமேசு உள்ளிட்ட பல நடிகர்கள் லண்டனை தளமாகக் கொண்ட இலங்கை தமிழ் குண்டர்களாக நடித்தனர். அவர்கள் சக குடியேறிகளுக்கு உதவுவதிலும் சட்டவிரோத பொருட்களை கடத்துவதிலும் ஈடுபடுபவர்களாக நடித்தனர். கஜராஜ் நடித்த மற்றொரு கதாபாத்திரம் 1970 களில் இலங்கையை விட்டு வெளியேறிய ஒரு சமையல்காரர் வேடமாகும்.[93][94]

நவரசா (2021)

[தொகு]

நவரசா வலைத் தொடரில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'பீஸ்' என்ற பகுதி இடம்பெற்றது. அது இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது நடப்பதாக அமைக்கப்பட்டது. தொடரில் விடுதலைப் புலிகள் போராளிகளைக் காட்டுகிறது. இந்தப் பகுதி போரின் போது ஒரு சிறுவன் தனது நாயுடன் மீண்டும் இணைவது பற்றியது.[95]

ராக்கி (2021)

[தொகு]

அருண் மாதேஸ்வரன் இயக்கிய ராக்கி திரைப்படமானது, 17 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலையான ஒரு நிழலுலக மனிதன், தான் குழந்தைப் பருவத்தில் வாழ்ந்த வீட்டிற்குத் திரும்பிச் சென்று, காணாமல் போன தனது சகோதரி அமுதாவைத் தேடுவதை அடிப்படையாகக் கொண்டது. அதே நேரத்தில், தனது வன்முறையான கடந்த கால நினைவுகள், அவரைத் துன்புறுத்துகிறது. ராக்கி ஒரு இலங்கைத் தமிழர், தனது பாவங்களிலிருந்து மறைந்து வாழ தன் முறைப் பெண்ணுடன் தமிழீழத்திற்கு தப்பிச் செல்ல விரும்புகிறார்.

800 (2023)

[தொகு]

800 என்பது இலங்கை துடுப்பாட்ட வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமாகும்.[96]

சல்லியர்கள் (2024)

[தொகு]

ஈழப் போரின் இறுதிக் கட்டங்களை மையமாகக் கொண்ட இந்தப் படம், தமிழீழத்தில் ஒரு நிலத்தடி பதுங்கு குழியில் இருந்து செயல்படும் மருத்துவர் குழுவைப் பின்தொடர்கிறது. மோதலுக்கு இடையில், அவர்கள் தங்கள் கூட்டாளிகள் மற்றும் எதிரிகள் என இருதரப்பினருக்கும் மருத்துவ சேவையை வழங்குகின்றனர். அரசியல் சார்பைவிட விட மனிதாபிமான கடமைக்கு முன்னுரிமை அளிக்கிறனர். போரை எதிர்கொள்ளும்போது பரிவு, நெகிழ்திறம், நன்னெறி ஆகியவற்றின் கருப்பொருள்களை இந்தக் கதை ஆராய்கிறது, வரலாற்று நிகழ்வுகள் மற்றும் பண்பாட்டு விழுமியங்களிலிருந்து உத்வேகம் பெறுகிறது. இந்தப் படத்தை கருணாஸ் தயாரித்துள்ளார்.[97]

டூரிஸ்ட் பேமிலி (2025)

[தொகு]

டூரிஸ்ட் ஃபேமிலி படமானது இலங்கைப் பொருளாதார நெருக்கடியால் இந்தியாவில் தஞ்சம் புகுந்த இலங்கை தமிழ் குடும்பத்தைப் பற்றிய படமாகும்.[98]

பிரீடம் (2025)

[தொகு]

டூரிஸ்ட் ஃபேமிலி படமானது 1995 வேலூர் கோட்டை சிறை தகர்த்து தப்பிச் சென்ற இலங்கை அகதிகள் பற்றிய படமாகும்.[99] 2025 சூலை மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நிதி சிக்கல்கள் காரணமாக திரையரங்க வெளியீடு தள்ளிப் போடப்பட்டது.

பிற

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "For Kollywood, Eelam scripts a no-go zone". Times of India Blog. October 23, 2020. Archived from the original on November 28, 2021. Retrieved June 21, 2021.
  2. "Claims against The Family Man Season 2 of being 'anti-Tamil' are a farce; Raj & DK's show is true pan-Indian television". Firstpost. June 2, 2021. Archived from the original on June 24, 2021. Retrieved June 21, 2021.
  3. 3.0 3.1 3.2 3.3 "Portrayal of Eelam Tamils in mainstream Kollywood cinema". www.jdslanka.org. Archived from the original on 2021-06-24. Retrieved 2021-06-21.
  4. "Madras Cafe is not an honest film: Sri Lankan filmmaker". Firstpost. November 12, 2013. Archived from the original on June 24, 2021. Retrieved June 21, 2021.
  5. "An interview with Comedian Bonda Mani!". SBS Your Language. Archived from the original on 2021-06-24. Retrieved 2021-06-21.
  6. "Lankan pop singer A.E. Manoharan failed to shine as film actor ' Ceylon Manohar ' | Daily FT". www.ft.lk. Archived from the original on 2023-09-03. Retrieved 2023-12-22.
  7. "Actor-politician J K Rithesh dies at 46". April 14, 2019. Archived from the original on April 14, 2019. Retrieved June 21, 2021.
  8. "Happy Birthday Jai Akash: Surprising Facts About Neethane Enthan Ponvasantham's Surya". March 18, 2021. Archived from the original on June 24, 2021. Retrieved June 21, 2021.
  9. "Suresh the record man" இம் மூலத்தில் இருந்து September 27, 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210927080920/https://www.theglobeandmail.com/news/national/suresh-the-record-man/article18228928/. 
  10. "From the arena of life" இம் மூலத்தில் இருந்து October 17, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201017195206/https://www.thehindu.com/features/cinema/From-the-arena-of-life/article15538268.ece. 
  11. "Hosted by one.com". vashanth.com. Archived from the original on 2023-04-21. Retrieved 2021-06-22.
  12. "Sivaangi teams up with Asuran actor Teejay Arunasalam" இம் மூலத்தில் இருந்து 2022-04-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220407102120/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/sivaangi-teams-up-with-asuran-actor-teejay-arunasalam/articleshow/88022889.cms. 
  13. "Bigg Boss 3 Tharshan's dream turns reality! - Tamil News". 27 November 2019. Archived from the original on 7 April 2022. Retrieved 7 April 2022.
  14. "Someetharan". IMDb.
  15. "MGR Remembered – Part 10 – Ilankai Tamil Sangam". Archived from the original on 2016-09-08.
  16. 16.0 16.1 "The Accidental Actress: Inside the life of TV queen Radikaa Sarathkumar". The News Minute. February 15, 2016. Archived from the original on March 8, 2021. Retrieved June 21, 2021.
  17. "This NGO bats for Lankan refugee women". dtNext.in. October 8, 2020. Archived from the original on June 24, 2021.
  18. "Sabby, Shivani add diversity to 'The Bachelor' party". 23 February 2021. Archived from the original on 26 June 2021. Retrieved 26 June 2021.
  19. "Easy on the ears" இம் மூலத்தில் இருந்து June 24, 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210624202934/https://www.thehindu.com/features/metroplus/Easy-on-the-ears/article16185985.ece. 
  20. "'ஆபிஸ்' மதுமிலாவா இது? அதிர்ச்சியில் ரசிகர்கள்!". 29 July 2019. Archived from the original on 24 June 2021. Retrieved 21 June 2021.
  21. "Losliya Mariyanesan: I want to play memorable characters". Cinema Express. 14 September 2021. Archived from the original on 2022-04-07. Retrieved 2022-04-07.
  22. "'Ellam Mela Irukkaravan Paathuppan' is a futuristic film". 23 August 2019. Archived from the original on 2023-09-27. Retrieved 2023-12-22.
  23. "Thangalaan".
  24. "Indian influence in early Sri Lankan cinema | the Sundaytimes Sri Lanka". Archived from the original on 2021-06-28. Retrieved 2021-06-21.
  25. "MGR Remembered – Part 9 – Ilankai Tamil Sangam". Archived from the original on 2021-09-17. Retrieved 2021-06-22.
  26. "Vimukthi Jayasundara, the lone Sinhalese to have directed an Indian film". The New Indian Express. 12 February 2017. Archived from the original on 2021-06-24. Retrieved 2021-06-21.
  27. "Balu Mahendra, the filmmaker inspired by Pather Panchali, who changed South Indian movies". ThePrint. 20 May 2020. Archived from the original on 24 June 2021. Retrieved 21 June 2021.
  28. "Lyca accuses Ayngaran International director of cheating them". The News Minute. September 27, 2019. Archived from the original on June 24, 2021. Retrieved June 21, 2021.
  29. "K S Durai - Photos, Videos, Birthday, Latest News, Height In Feet - FilmiBeat". Archived from the original on 2021-12-27. Retrieved 2021-06-22.
  30. Raghunathan, Anu. "This Former Immigrant From Sri Lanka Just Made India's Most Expensive Movie". Forbes. Archived from the original on 2021-06-24. Retrieved 2021-06-21.
  31. "Pisasu 2". IMDb.
  32. "RAMESWARAM MOVIE REVIEW CAST CREW JEEVA BHAVANA MANIVANNAN SELVAM NIRU S N RAJA KATTRADHU TAMIL KANNATHIL MUTHAMITTAL SRILANKAN KOLLYWOOD movie wallpapers hot stills picture image gallery". Music by Srilankan Tamil Niru is laudable especially in the 'Ellaraiyum Ethipoga Poga' number, which is certain to take all the refugees on a nostalgic trail
  33. "India has emerged as an influential space for musicians: M.I.A". https://timesofindia.indiatimes.com/life-style/spotlight/india-has-emerged-as-an-influential-space-for-musicians-m-i-a/articleshow/106515620.cms. 
  34. "Sri Lankan hip hop artiste ADK: 'Lityananda is not Nithyananda'" இம் மூலத்தில் இருந்து June 24, 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210624201743/https://www.thehindu.com/entertainment/movies/sri-lankan-hip-hop-artiste-adk-lityananda-is-not-nithyananda/article31226903.ece. 
  35. "Arjun Coomaraswamy: Sri Lankan born R&B Artist in UK – UsLanka". October 8, 2013. Archived from the original on June 24, 2021. Retrieved June 21, 2021.
  36. "For the First Time! Mc Sai Feat. Simbu! – Santhora Tv". Archived from the original on 2022-05-19. Retrieved 2022-04-07.
  37. "BBC Asian Network - Ashanti Omkar, Kharesma Ravichandran". BBC (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 2022-06-23. Retrieved 2022-06-23.
  38. "BBC Asian Network - Ashanti Omkar, Inno Genga". BBC. Archived from the original on 2021-06-24. Retrieved 2021-06-21.
  39. "Meet Arivu and Dhee, the duo behind the viral protest song Enjoy Enjaami". Hindustan Times. March 19, 2021. Archived from the original on May 19, 2021. Retrieved June 21, 2021.
  40. "First Lankan to sing in mainstream Tamil cinema | Lanka Reporter". Lankareporter. January 19, 2017. Archived from the original on June 24, 2021. Retrieved June 21, 2021.
  41. "From Jaffna to Montreal, how Navz-47 escaped war and is making music to fight bullies". Edex Live (in ஆங்கிலம்). 19 August 2019. Archived from the original on 2022-08-12. Retrieved 2022-06-23.
  42. "The Indian Express - Google News Archive Search". news.google.com. Archived from the original on 2020-12-08. Retrieved 2021-06-21.
  43. Ebert, Roger (2005-07-17). "The Terrorist Movie Review & Film Summary (2000) | Roger Ebert". Rogerebert.com. Archived from the original on 2020-07-15. Retrieved 2020-06-25.
  44. Rajitha (21 September 2000). "Thenali: A Kisstory!". Rediff.com. Archived from the original on 26 October 2012. Retrieved 18 October 2012.
  45. Rasika (2000). "Good Teacher, Good Pupil". Chennai Online. Archived from the original on 3 November 2004. Retrieved 23 February 2018.
  46. "Uchithanai Mukarnthal review. Uchithanai Mukarnthal Tamil movie review, story, rating". IndiaGlitz.com. Archived from the original on 2022-04-07. Retrieved 2021-06-21.
  47. "Minnoviyam Star Tracks". October 17, 2000. Archived from the original on 2000-10-17.
  48. Rangan, Baradwaj. "How suffering turned a college lad into a Tamil superstar". The Caravan. Archived from the original on 2021-06-28. Retrieved 2021-06-21.
  49. "Kannathil Muthamittal Awards". Awards for Kannathil Muthamittal (A Peck on the Cheek). Archived from the original on 29 April 2008. Retrieved 19 November 2007.
  50. "Cyanide: Deserves much applause". rediff.com. 10 July 2006. Archived from the original on 9 July 2015. Retrieved 8 July 2015.
  51. "Aanivaer - "Tap Root" - Movie A Brief Eye View". Tamil Sydney. Archived from the original on 4 March 2016. Retrieved 9 May 2013.
  52. Rangarajan, Malathi (17 August 2007). "Window to a little-known world". தி இந்து இம் மூலத்தில் இருந்து 15 October 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071015102305/http://hindu.com/fr/2007/08/17/stories/2007081751390300.htm. பார்த்த நாள்: 9 May 2013. 
  53. "Snip-shot". Indian Express. 2011-03-09. Archived from the original on 2013-01-26. Retrieved 2012-06-27.
  54. "Kutrapathrikai Fan Reviews | Tamil Movie | User Reviews | Story | Oneindia.in". Popcorn.oneindia.in. 2007-03-23. Archived from the original on 17 February 2013. Retrieved 2012-06-27.
  55. "Film on Rajiv Gandhi assassination wins battle against censors". Monsters and Critics. 2006-12-02. Archived from the original on 2013-10-29. Retrieved 2012-06-27.
  56. "Rajiv Gandhi's death anniversary today, was assassinated in LTTE suicide bomb attack 29 years ago". Zee News. May 21, 2020. Archived from the original on June 24, 2021. Retrieved June 21, 2021.
  57. "தி இந்து : Friday Review Chennai / Film Review : Stunning visuals, that's about it -- Rameswaram". December 9, 2007. Archived from the original on 2007-12-09.
  58. "Thiruttu Payale Comedy Scenes | Jeevan | Vivek | Sonia Agarwal | Tamil Movie Comedy Scenes". YouTube. 16 November 2016. Archived from the original on 2021-06-24. Retrieved 2021-06-21.
  59. "Kalinga". Archived from the original on 6 October 2006. Retrieved 6 October 2006.
  60. "Mann review. Mann Tamil movie review, story, rating". IndiaGlitz.com.
  61. "ஒரு அகதிக்கு காதல் வரக்கூடாதா? [Can refugee's not love?] - Ilampuyal Tamil Movie - Vashanth Sellathurai - Poornitha - Karunas". YouTube. 6 July 2021. Archived from the original on 2022-03-12. Retrieved 2022-03-12.
  62. "Sivappu Mazhai". The New Indian Express. Archived from the original on 18 January 2022. Retrieved 3 May 2020.
  63. "Movie Review : Uchithanai Muharnthal". archive.ph. June 28, 2013. Archived from the original on 2013-06-28.
  64. Subhash K Jha (6 July 2009). "Sivan to make film on LTTE". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 3 December 2013. Retrieved 15 November 2013.
  65. 65.0 65.1 Subhash K Jha (11 June 2012). "Santosh Sivan, Shoojit Sircar set to capture LTTE". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 27 August 2012. Retrieved 15 November 2013.
  66. Ramnath, Nandini (March 31, 2014). "Santosh Sivan's 'Inam' pulled from cinemas after Tamil groups protest". mint. Archived from the original on June 24, 2021. Retrieved June 21, 2021.
  67. "After Protests, Five Inam Scenes Clipped". The New Indian Express. Archived from the original on 7 April 2014. Retrieved 31 March 2014.
  68. "Inam's screening to be pulled out after Vaiko's Protest". The New Indian Express. Archived from the original on 31 March 2014. Retrieved 31 March 2014.
  69. "Rajiv Gandhi lookalike from 'Madras Cafe' creates ripples". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 21 May 1991. Archived from the original on 16 August 2013. Retrieved 18 August 2013.
  70. Udita Jhunjhunwala (27 July 2013). "Shoojit Sircar : The neutral order". Livemint. Archived from the original on 31 August 2013. Retrieved 18 August 2013.
  71. "Does Madras Cafe show LTTE leader Prabhakaran? - Hindustan Times". August 15, 2013. Archived from the original on 2013-08-15.
  72. "Suriya plays a Sri Lankan Tamil in 'Masss'!". சிஃபி. Archived from the original on May 29, 2015.
  73. "Andhi Mazhai Megam is Kazhugu director's next". February 3, 2014. Archived from the original on 2014-02-03.
  74. "Sivappu (aka) Sivapu review". Behindwoods. October 16, 2015. Archived from the original on June 24, 2021. Retrieved June 21, 2021.
  75. Upadhyaya, Prakash (September 24, 2016). "Aandavan Kattalai review round-up: Critics give thumbs-up to Vijay Sethupathi-starrer". www.ibtimes.co.in. Archived from the original on June 24, 2021. Retrieved June 21, 2021.
  76. "The women of 'Chekka Chivantha Vaanam': Strong and bold or mere props for the men?". October 2018. Archived from the original on 2021-07-09. Retrieved 2021-07-02.
  77. "It's more fun imagining this film as a ten-part Netflix series". 27 September 2018. Archived from the original on 9 July 2021. Retrieved 2 July 2021.
  78. 78.0 78.1 "Sri Lankan conflict gets the attention of Kollywood directors" இம் மூலத்தில் இருந்து 2021-06-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210626114419/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/sri-lankan-conflict-gets-the-attention-of-kollywood-directors/articleshow/30908600.cms. 
  79. "இசைப்பிரியா பற்றிய கதை படத்துக்கு தடை: பின்னணி காரணம்!". 12 September 2015. Archived from the original on 24 June 2021. Retrieved 21 June 2021.
  80. "THAANDAVAM REVIEW - THAANDAVAM MOVIE REVIEW". www.behindwoods.com. Archived from the original on 2022-11-27. Retrieved 2022-06-23.
  81. "Opinion: Vijay's 'Kaththi' Dodges a Bullet. What About Others?". NDTV.com. Archived from the original on 2021-06-24. Retrieved 2021-06-21.
  82. "Madhura Naranga Review". 17 July 2015. Archived from the original on 26 April 2023. Retrieved 12 March 2022.
  83. Nyayapati, Neeshita (10 November 2017). "Okkadu Migiladu". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movie-reviews/okkadu-migiladu/movie-review/61592076.cms. பார்த்த நாள்: 20 June 2021. 
  84. "Ranam review: A flawed but technically astounding film". The New Indian Express. 8 September 2018. Archived from the original on 12 March 2022. Retrieved 12 March 2022.
  85. Menon, Thinkal (4 August 2018). "Kadal Kuthiraigal Movie Review {0.5/5}". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 10 March 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20230310130005/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/kadal-kuthiraigal/movie-review/65270167.cms. 
  86. "First Look: Bobby Simha as Velupillai Prabhakaran in Raging Tiger". November 26, 2018. Archived from the original on June 24, 2021. Retrieved June 21, 2021.
  87. Meendum Oru Mariyathai
  88. "In Family Man 2, three aspects that remind us of Tamil rebels". June 9, 2021. Archived from the original on June 12, 2021. Retrieved June 21, 2021.
  89. "Ban release of OTT show 'The Family Man 2' across India, Tamil Nadu govt urges Centre". The New Indian Express. 24 May 2021. Archived from the original on 2021-05-24. Retrieved 2021-05-28.
  90. "Tamil Nadu government seeks ban on release of 'The Family Man 2'" (in en-IN). தி இந்து. 2021-05-24 இம் மூலத்தில் இருந்து 2021-05-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210528050158/https://www.thehindu.com/news/national/tamil-nadu/tamil-nadu-government-seeks-ban-on-release-of-the-family-man-2/article34636364.ece. 
  91. "The Family Man 2 drops on Amazon Prime a day before schedule, fans celebrate on Twitter". Hindustan Times (in ஆங்கிலம்). 2021-06-03. Archived from the original on 2021-06-03. Retrieved 2021-06-04.
  92. Nasikethan (1 July 2021). "துணிச்சலுடன் வெளிவந்துள்ள மாவீரனின் தன் வரலாறு - மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல". தினமணி. Archived from the original on 6 August 2021. Retrieved 6 August 2021.
  93. Ramnath, Nandini (18 June 2021). "'Jagame Thandhiram' review: Dhanush is magnetic as the messiah of immigrants". Scroll.in. Archived from the original on 24 June 2021. Retrieved 21 June 2021.
  94. "Jagame Thandhiram movie review: Dhanush and Karthik Subbaraj's new film is a chore to sit through". Hindustan Times. June 18, 2021. Archived from the original on June 24, 2021. Retrieved June 21, 2021.
  95. "'Navarasa' review: A mixed bag with more misses than hits". தி இந்து. 6 August 2021. Archived from the original on 30 November 2021. Retrieved 30 November 2021.
  96. Mukhopadhyay, Sounak (2023-09-24). "Why Vijay Sethupathi pulled out of Muttiah Muralitharan's biopic '800'". mint (in ஆங்கிலம்). Archived from the original on 2023-10-08. Retrieved 2023-10-12.
  97. "Salliyargal". ஐ. எம். டி. பி இணையத்தளம்.
  98. Ramanujam, Srinivasa (2025-05-01). "‘Tourist Family’ movie review: This Sasikumar-Simran feel-good film leaves you all fuzzy" (in en-IN). தி இந்து. https://www.thehindu.com/entertainment/movies/tourist-family-movie-review-this-sasikumar-simran-feel-good-film-leaves-you-all-fuzzy/article69521030.ece. 
  99. "Freedom Movie Review: Confined by Its Own Righteousness". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (in ஆங்கிலம்). Retrieved 2025-07-11.
  100. "Ottrai Panai Maram Movie Review : A well-meaning but static portrait of war survivors". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
  101. "Methagu 2 - A crucial reclamation of history | Tamil Guardian". www.tamilguardian.com. Archived from the original on 2023-06-09. Retrieved 2023-12-22.
  102. "Yaadhum Oore Yaavarum Kelir review: VJS starrer has good intentions, lousy script". The News Minute. May 19, 2023. Archived from the original on May 20, 2023. Retrieved December 22, 2023.
  103. "Sorgavaasal". ஐ. எம். டி. பி இணையத்தளம்.