இந்தியத் திட்ட உணவுக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தியத் திட்ட உணவுக் கழகம்(THE INDIAN DIETETIC ASSOCIATION)

அறிமுகம்[தொகு]

இந்தியத் திட்ட உணவுக் கழகம் கி.பி.1963ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.இது திட்ட உணவு வல்லுநர்கள், மருத்துவ விஞ்ஞானிகள் ஆகியோரைச் சேர்த்து நிறுவப்பட்டது.

நோக்கங்கள்[தொகு]

  • ஊட்டச்சத்துக் கல்வியை ஊக்குவிப்பது.
  • ஊட்டச்சத்து, திட்ட உணவு தொடர்பான கல்வி கற்பித்தல்.
  • ஆராய்ச்சி,பயிற்றுவித்தலில் ஈடுபடுவது.
  • திட்ட உணவு வல்லுநரின் நலத்தைக் காப்பது.

குறிக்கோள்கள்[தொகு]

ஊட்டச்சத்து, திட்ட உணவு தொடர்பான ஆராய்ச்சி, பணிகளை மேம்படுத்துவதும், அறிவியல் இதழ்களை வெளியிடுவதும், திட்ட உணவு வல்லுநர்கள் தொடர்பான தேர்வுகளை நடத்துவதும், சிறப்புப் பேரவைகளை வருடத்திற்கு ஒருமுறை கூட்டுவதும், இந்தியத் திட்ட உணவுக் கழக உறுப்பினர்களின் நலத்தைக் காப்பதும், அயல்நாட்டில் உள்ள திட்ட உணவுக் கழகங்களுடன் இணைந்து செயல்படுவதும் இந்திய உணவுத் திட்டக் கழகத்தின் குறிக்கோள்கள் ஆகும்.

செயல்பாடுகள்[தொகு]

  • புகழ்வாய்ந்த அறிவியல் அறிஞர்கள் மூலம் கருத்தரங்குகள் அமைப்பது.
  • சிறப்பு பேரவைகள் ஊட்டச்சத்து, திட்டஉணவு குறித்த அறிவைப் பரப்பும் மன்றங்களாகச் செயல்படுவது.
  • ஊட்டச்சத்துக் கல்வியின் எல்லைகளை விரிவுபடுத்துவது.
  • ஊட்டச்சத்துக் குறைவைப் போக்குவது.
  • கல்வியின் அனைத்து நிலைகளிலும் ஊட்டச்சத்துக் கல்வியை அமைப்பது.
  • திட்டஉணவு குறித்த பாடத்திட்டம் அமைப்பது.[1]

மேற்கோள்[தொகு]

  1. சத்துணவியல்,மேல்நிலை இரண்டாம் ஆண்டு.. மருத்துவமனையில் திட்ட உணவு அமைப்பு முறை: தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம்,சென்னை. 2013.