உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலர்
தற்போது
இராஜிவ் சிங் ரகுவன்சி
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
அரசமைப்புக் கருவிமருந்து அழகுசாதனங்கள் சட்டம், 1940

இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலர் (Drugs Controller General of India) என்பவர் இந்திய அரசின் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் துறைத் தலைவர் ஆவார். இவர் இந்தியாவில் இரத்தம் மற்றும் இரத்தப் பொருட்கள், IV திரவங்கள், தடுப்பூசிகள், சீரம் போன்ற குறிப்பிட்ட வகை மருந்துகளின் உரிமங்களை அங்கீகரிப்பதற்குப் பொறுப்பாவார். இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலரின் பணி, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் வருகிறது.[1] இந்தியாவில் மருந்துகளின் உற்பத்தி, விற்பனை, இறக்குமதி, விநியோகத்திற்கான தரநிலைகளையும் இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலர் கட்டுப்படுத்துகிறார்.

செயல்பாடு

[தொகு]

இந்தியாவில் மருந்துகளின் உற்பத்தி, விற்பனை, இறக்குமதி மற்றும் விநியோகம் ஆகியவற்றின் தரத்தையும் இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் வகுக்கிறது.

  • தேசிய தரநிலையைத் தயாரித்து பராமரித்தல்.
  • மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தை அமல்படுத்துவதில் சீரான தன்மையைக் கொண்டுவருதல்.
  • மாநில மருந்து கட்டுப்பாட்டு ஆய்வகங்கள் மற்றும் பிற நிறுவனங்களால் நியமிக்கப்பட்ட மருந்து பகுப்பாய்வாளர்களுக்கு பயிற்சி வழங்குதல்
  • மத்திய மருந்து தரநிலை கட்டுப்பாட்டு அமைப்பின் மாதிரிகளாகப் பெறப்பட்ட அழகுசாதனப் பொருட்களின் பகுப்பாய்வு.

இந்திய அரசாங்கத்தால் மருத்துவ சாதன விதிகள் 2017 அறிவிக்கப்பட்டதன் மூலம், இந்த விதிகளின் கீழ் வரும் மருத்துவ சாதனங்களுக்கு இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் மத்திய உரிமம் வழங்கும் ஆணையமாக செயல்படும். வகுப்பு அ முதல் வகுப்பு ஈ வரையிலான நான்கு வகை மருத்துவ சாதனங்களில், வகுப்பு இ மற்றும் வகுப்பு ஈ சாதனங்களுக்கு நேரடி உரிமம் வழங்கும் ஆணையமாக இருக்கும். அதே நேரத்தில் மாநில மருந்து கட்டுப்பாட்டாளர்கள் மூலம் வகுப்பு அ மற்றும் ஆ சாதனங்களுக்கான உரிமத்தை ஒருங்கிணைக்கும். இவர்கள் மாநில உரிமம் வழங்கும் ஆணையமாகச் (மாஉஆ) செயல்படுவார்கள்.[2]

ஆளுகை

[தொகு]

பிப்ரவரி 1, 2023 அன்று இந்திய அரசு மருத்துவர் இராஜீவ் சிங் இரகுவன்சியை இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமை அலுவலராக நியமித்தது. முன்னதாக அரசு ஆகத்து 14, 2019 அன்று மருத்துவர் வி. ஜி. சோமானியை இந்திய மருந்து கட்டுப்பாட்டு அலுவலராக நியமித்தது. பிப்ரவரி 2018இல் நியமிக்கப்பட்ட இடைக்கால அலுவலரான ஈசுவர ரெட்டிக்குப் பிறகு மருத்துவர் வி. ஜி. சோமானி நியமிக்கப்பட்டார். நாட்டில் விற்கப்படும் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களின் தரத்தை உறுதி செய்தல், புதிய மருந்துகளை அங்கீகரித்தல் மற்றும் மருத்துவ பரிசோதனைகளை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள இந்திய மருந்து ஒழுங்குமுறை அமைப்பான மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பிற்கு இவர் தலைமை தாங்குகிறார்.[3][4]

மண்டல அலுவலகங்கள்

[தொகு]

மத்திய அரசு மும்பை, கொல்கத்தா, சென்னை, காசியாபாத், ஐதராபாத்து, அகமதாபாது,[5] ஆகிய இடங்களில் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் 6 மண்டல அலுவலகங்களை நிறுவியுள்ளது. பல்வேறு துணை மண்டல அலுவலகங்கள் மற்றும் துறைமுக அலுவலகங்கள், மாநில கட்டுப்பாட்டு நிர்வாகத்துடன் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயல்பட்டு மருந்துச் சட்டத்தின் சீரான அமலாக்கத்தைப் பாதுகாப்பதில் உதவுகின்றன.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. CENTRAL DRUGS STANDARD CONTROL ORGANIZATION (accessed on 18 Oct 2014) archived 2014.10.23
  2. "Medical Device Rules G.S.R. 78 (E)" (PDF).
  3. 4 SEP 2012, ET BUREAU, Economic Times Pharmaceutical companies told to submit safety reports on new drugs every 6 months (accessed on 4 Sept 2012)
  4. "Govt appoints VG Somani as new Drug Controller General". Moneycontrol. 14 August 2019.
  5. "Introduction". cdsco.gov.in. Retrieved 2020-12-25.
  6. "Zonal Offices - CDSCO". www.cdsco.gov.in. MoHFW, Government of India.

வெளி இணைப்புகள்

[தொகு]