இந்தியக் குள்ள நரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்தியக் குள்ள நரி
Indian Fox at Little Rann of Kutch.jpg
Female at den site in the Little Rann of Kutch
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: ஊனுண்ணி
குடும்பம்: நாய்க் குடும்பம்
பேரினம்: Vulpes
இனம்: V. bengalensis
இருசொற் பெயரீடு
Vulpes bengalensis
(George Shaw, 1800)
Vulpes-bengalensis-map.png
Range map
வேறு பெயர்கள்

Canis kokree
Canis rufescens
Canis indicus
Vulpes xanthura

இந்தியக் குள்ள நரி அல்லது வங்க நரி (Bengal fox) என்பது ஒரு குள்ள நரி ஆகும். இவை இந்தியத் துணைக்கண்டத்தின் இமயமலை அடிவாரத்தில் நேபாளத்தில் இருந்து தென் இந்தியாவரைக் காணப்படுகின்றன.[2] மேலும் தெற்கு மற்றும் கிழக்கு பாக்கித்தான், தென்கிழக்கு வங்கதேசம் போன்ற இடங்களில் காணப்படுகிறன்றன.[3][4][5] இவை பகளில் தூங்கிவிட்டு இரவில் தனித்தோ, கூடியோ வேட்டையாடக்கூடியன.

தோற்றம்[தொகு]

இவை சிறிய நரிகள், நீண்ட முக்கோண வடிவ காதுகளும், அடர்ந்த கருப்பு முனை கொண்ட வாலும், கொண்டவை. இவற்றின் வால் அதன் உடல் நீளத்தில் 50 முதல் 60% வரை இருக்கும். இவை சாம்பல் நிறத்தில் ஒல்லியான கால்களுடனும் இருக்கும். இவற்றின் தலை முதல் உடலின் நீளம் 18 அல்குளம் (46 செமீ), இதன் வால் 10 அங்குளம் (25 செமீ) நீளம் இருக்கும். எடை 5 இல் இருந்து 9 பவுண்ட் (2.3 இல் இருந்து 4.1 கிலோ).[3] இவை எலிகள், ஊர்வன, நண்டுகள், கரையான், பழங்கள் ஆகியவற்றை உண்டு வாழும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியக்_குள்ள_நரி&oldid=2552686" இருந்து மீள்விக்கப்பட்டது