1979 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்
தோற்றம்
(இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1979 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| |||||||||||||||||
| |||||||||||||||||
| |||||||||||||||||
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1979 என்பது ஆண்டின் மத்தியில் இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்றது. இந்தப் பதவிக்கு முன்னாள் இந்தியத் தலைமை நீதிபதி முகம்மது இதயத்துல்லா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டிருந்தால், ஆகத்து 27, 1979 அன்று தேர்தல் நடந்திருக்கும்.
அட்டவணை
[தொகு]தேர்தல் அட்டவணை 23 சூலை 1979 அன்று இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.[2]
| வ. எண் | வாக்கெடுப்பு நிகழ்வு | தேதி | |
|---|---|---|---|
| 1. | வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி | 6 ஆகத்து 1979 | |
| 2. | வேட்புமனு பரிசீலனைக்கான தேதி | 7 ஆகத்து 1979 | |
| 3. | வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி | 9 ஆகத்து 1979 | |
| 4. | வாக்கெடுப்பு தேதி | 27 செப்டம்பர் 1979 | |
| 5. | எண்ணும் தேதி | இல்லை | |
முடிவுகள்
[தொகு]முகம்மது இதயத்துல்லா 1979 ஆகத்து 9 அன்று துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இவர் 31 ஆகத்து 1979 அன்று பதவியேற்றார்.[2]