இந்தியக் காப்பி வாரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியக் காப்பி வாரியம் (Coffee Board of India) என்பது இந்தியாவில் காப்பி உற்பத்தியை மேம்படுத்துவதற்காக இந்திய அரசாங்கத்தின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் அமைப்பு இதுவாகும். இதன் தலைமை அலுவலகம் பெங்களூரில் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

இந்தியக் காப்பி வாரியம் 1942ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றச் சட்டத்தால் நிறுவப்பட்டது. 1995 வரை காப்பி வாரியம் பல விவசாயிகள் உற்பத்தி செய்த காபியினை மொத்தமாகச் சேர்த்து விநியோகம் மற்றும் விற்பனை செய்தது. இதன் பின்னர் இந்தியாவில் பொருளாதார தாராளமயமாக்கல் காரணமாகக் காப்பி சந்தைப்படுத்தல் தனியார்த் துறை நடவடிக்கையாக மாறியது.[1]

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் காப்பி விற்பனை மற்றும் நுகர்வு ஊக்குவித்தல், காப்பி ஆராய்ச்சி நடத்துதல், சிறு காப்பி உற்பத்தியாளர்களுக்கு நிதி உதவி, தொழிலாளர்களின் பணி நிலைமைகளைப் பாதுகாத்தல் மற்றும் விற்கப்படாத காப்பி உபரி நிர்வகித்தல் ஆகியவை காப்பி வாரியத்தின் முக்கியக் கடமையாக உள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Coffee Board of India - About Us". indiacoffee.org. 2011. Archived from the original on 25 December 2008. பார்க்கப்பட்ட நாள் 22 October 2011.
  2. John, K.C.; Kevin, S. (2004). Traditional Exports of India: Performance and Prospects. Delhi, India: New Century Publications. பக். 117. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7708-062-8. 

 

John, K.C.; Kevin, S. (2004). Traditional Exports of India: Performance and Prospects. Delhi, India: New Century Publications. p. 117. ISBN 81-7708-062-8.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியக்_காப்பி_வாரியம்&oldid=3199706" இலிருந்து மீள்விக்கப்பட்டது