இந்தியக் கரடிப் பூனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கரடிப் பூனை

Binturong (or) Bear cat-Arctictis binturong (Raffles)


பூனைக்குடும்பத்தைச் சார்ந்த மற்ற பூனைகள் போல அல்லாமல்,கரடி போல இருப்பதாலும்,அடர்ந்த மயிர்க்கால்களும் உடையதால் இது கரடிப்பூனை என வழங்கப்படுகிறது.

இது அடர்ந்த காடுகளில்,2000 மீட்டர் உயரமுள்ள பகுதிகளில் வசிக்கும்.கருமையான முடிகொண்ட தோலுள்ள இப்பூனையின் உடலில் வெள்ளை அல்லது மங்கிய மஞ்சள் நிறமுடைய முடிகளும் இருப்பதால்,நரைத்தது போல் தோன்றும்.

மரத்தில் வசிக்க வல்லது.இது ஒரு இரவாடி.பகல்பொழுதில் மரப்பொந்துகளில் தலையை வாலுக்கடியில் சுருட்டி வைத்து தன்னை உருமறைப்பு செய்துகொண்டு உறங்கும்.

மலைகள் அதிகம்உள்ள அஸ்ஸாம்,சிக்கிம் காடுகளில் கரடிப்பூனை வசிக்கிறது.அடர்ந்த மரங்களினூடே இது மெதுவாக ஆனால் திறமையாக இடம்பெயர்ந்து செல்லக்கூடியது.

இது சிறிய வகைப் பாலூட்டிகள்,பறவைகள்,மீன்,மண்புழுக்கள்,பூச்சிகள் மற்றும் பழங்களைத் தின்று வாழும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியக்_கரடிப்_பூனை&oldid=2335772" இருந்து மீள்விக்கப்பட்டது