இந்தியக் கரடிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


இந்தியக் கரடிகள் Sloth bear

இந்தியாவில் பரவலாக காணக்கூடிய விலங்கினம்.இதற்கு கருப்பு வண்ண முடியும்,மார்பில் வெண்ணிற குறியும் இருக்கும்.தலை பெரியதாகவும்,மூஞ்சி துருத்திக்கொண்டும் இருப்பதால்,முகம் முக்கோண வடிவமாகத் தெரியும்.

கால்களில் தட்டையான பாதங்களும்,அவற்றின் முன்புறம் நீண்ட வெண்ணிற வளை நகங்களும் இருக்கும்.கரடியின் பாதச் சுவடுகள் பார்ப்பதற்கு மனிதனின் பாதச் சுவடுகள் போன்றே இருக்கும்.நீச்சல்&மரம் ஏறுவதில் வல்லவை.

பாறைகள் மிகுந்த இடங்கள் ,நீர் நிலைகளுக்கு அருகே உள்ள காடுகள் ஆகிய இடங்களில் ஏறக்குறைய இந்தியா முழுதும் இது காணப்படும்.இது இரவில் இரை தேடும் பழக்கம் கொண்டது.

காரி பிரவுன் என்கிற ஆராய்ச்சியாளர் இது 16 வெவ்வேறு விதமான சூழலில் 25 விதமான ஒலிகளை எழுப்புகிறது என்பதைத் தனது Great Bear Almanac என்கிற நூலில் பதிவு செய்துள்ளார்.

பழங்கள்,பூக்கள்,வேர்த்தண்டுகள்,தேன்,எறும்புகள்,முட்டைகளே இதன் பிரதான உணவாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியக்_கரடிகள்&oldid=2337086" இருந்து மீள்விக்கப்பட்டது