உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியக் கனேடியர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியக் கனேடியர்கள்
கனடாவில் இந்திய வம்சாவளியினர் வாழும் பகுதிகள் (2016)
மொத்த மக்கள்தொகை
1,858,755
இது 2021ஆம் ஆண்டின் கனடா மக்கள் தொகையில் 5.1%
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
ஒன்ராறியோ வான்கூவர், ஒட்டாவா கால்கரி, மொண்ட்ரியால், அப்போட்ஸ்போர்டு, வினிப்பெக், எட்மன்டன், ஆமில்டன்
மொழி(கள்)
கனேடிய ஆங்கிலம், கனேடிய பிரஞ்சியம்
சிறுபான்மை மொழிகள் பஞ்சாபி, இந்தி, உருது, தமிழ், குஜராத்தி மற்றும் இந்தியாவின் பிற மொழிகள்
சமயங்கள்
பெரும்பான்மை:
சீக்கியம் (36%)
இந்து சமயம் (32%)
சிறுபான்மையினர்:
கிறித்தவம் (12%)
இசுலாம் (11%)
சமயமற்றவர்கள் (8%)
பௌத்தம் (0.1%)
யூதம் (0.1%)
தொல்குடி சமயத்தினர் மற்றும் பிறர் (0.01%)
சரதுசம், சமணம் மற்றும் பிறர் (0.7%)
தொடர்புள்ள இனக்குழுக்கள்
ஆசியக் கனேடியர்கள், தெற்காசிய கனேடியர்கள், இந்திய அமெரிக்கர், பிரித்தானிய இந்தியர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள்

இந்தியக் கனேடியர்கள் (Indian Canadians), இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டு, குடியுரிமையுடன் கனடாவில் வாழ்பவர்கள் ஆவார். கனடியப் பழங்குடி மக்களிடமிருந்து பிரித்து அறிவதற்காக, இந்தியக் கனேடியர்களை தெற்காசியா கனேடியர்கள் என்றும், ஆசியக் கனேடியர்கள் என்றும் அழைப்பர். 2021 கனடாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, ஐரோப்பியர் அல்லாதவர்களில், இந்திய வம்சாவளி கனேடியர்கள் பெரும்பான்மையாக இருந்தனர்.[1][2] மேலும் இந்திய வம்சாவளியினர் கனடாவில் வேகமாக வளர்ந்து வரும் இனமாக உள்ளனர்.[3][2]புலம் பெயர்ந்த இந்தியர்களைக் கொண்ட நாடுகளில் கனடா ஏழாவது இடத்தில் உள்ளது. கனடாவின் பத்து மாகாணங்களில், ஒன்ராறியோ மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணங்களில் இந்தியக் கனேடியர்கள் அடர்த்தியாகவும், ஆல்பர்ட்டா மற்றும் கியூபெக் மாகாணங்களில் மிகக்குறைந்த அளவில் வாழ்கின்றனர்.

இந்திய வம்சாவளியைக் கொண்ட கனடியர்களை குறிக்கும் கிழக்கு இந்தியர்கள் என்ற சொல், கனடிய பூர்வகுடி மக்களுடளிடமிருந்து வேறுபடுத்தி பார்க்கப் பயன்படுத்தப்படுகிறது.2021ஆம் ஆண்டின் கனடா மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்திய வம்சாவளியினர், ஐரோப்பியரல்லாத பெரும் இனக்குழுவினராக உள்ளனர். மேலும் கனடாவில் வேகமாக வளர்ந்து வரும் இனத்தவர்களாக உள்ளனர்.[4][2]

கனடா உலகின் ஏழாவது பெரிய புலம்பெயர்ந்த இந்தியர்களைக் கொண்டுள்ளது. கன்டாவின் பத்து மாகாணங்களில் ஒன்ராறியோ மற்றும் பிரிட்டிசு கொலம்பியா மாகாணங்களில் இந்தியக் கனடியர்களில் அடர்த்தியாகவும் மற்றும் ஆல்பர்ட்டா மற்றும் கியூபெக் மாகாணங்களில் சிறு அளவிலும் வாழ்கின்றனர். கனடாவில் வேகமாக வளர்ந்து வரும் சமூகங்களில் கனேடிய இந்தியச் சமூகம் உள்ளது. பெரும்பாலான கனேடிய இந்தியர்கள் இந்தியாவில் பிறந்தவர்கள் ஆவார்.[2]

சொற்பிறப்பியல்

[தொகு]

கனடாவில் தெற்காசியா வம்சாவளியினரைக் குறிக்க தெற்காசியர்கள் என்றும், இந்தியர்களைக் குறிக்க கிழக்கிந்தியர்கள் என்றும் குறிப்பிடுகின்றனர்.[5]

1962ஆம் ஆண்டில் பாகிஸ்தானிய கனேடியர்கள் மற்றும் இலங்கைக் கனேடியர்களை தனித்தனி இனக்குழுவினராக வகுத்தனர். அதற்கு முன்னர் அவர்களை கிழக்கு இந்தியர்கள் என்று கணக்கிடப்பட்டனர்.[6]2001 ஆம் ஆண்டு மக்கண் தொகை கணக்கெடுப்பின் போது , கிழக்கு இந்திய வம்சாவளியைக் கோரும் வெளிநாட்டில் பிறந்தவர்களில் பாதி பேர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள். மற்றவர்கள் வங்காளதேசம், கிழக்கு ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் இலங்கையிலிருந்து வந்தவர்கள் ஆவார்.[2][7]

"The Sikh Diaspora in Vancouver: Three Generations Amid Tradition, Modernity, and Multiculturalism" என்ற நூலின் ஆசிரியரான எலிசபெத் கமலா நாயர், "இந்தியக் கனடியர்கள்" என்பதை கனடாவில் பிறந்த இந்தியத் துணைக்கண்டத்து வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று வரையறுத்தார்.[8] "The Ongoing Journey: Indian Migration to Canada" என்ற நூலின் ஆசிரியரான கவிதா ஏ. சர்மா என்பவர், "இந்தியக்-கனடியர்கள்" என்ற சொல்லை, கனடா குடியுரிமை பெற்ற இந்தியாவைச் சேர்ந்த பூர்வீக மக்களை மட்டுமே குறிக்க பயன்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.[9]

"Methodological Dilemmas Experienced in Researching Indo-Canadian Young Adults’ Decision-Making Process to Study the Sciences" என்ற நூலின் ஆசிரியரான பிரியா எஸ். மணி, எனும் எழுத்தாளர் "இந்தியக்-கனடியர்கள்" என்பதை தெற்காசியாவிலிருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்த நபர்களின் குழந்தைகள் என்று வரையறுக்கிறார்.[10] வித்யாரினி சுமர்தோஜோ தனது முனைவர் பட்ட ஆய்வறிக்கையில், "'தெற்காசியா மக்கள் பழுப்பு நிறத் தோல் கொண்ட இனக்குழுவினரைக் குறிக்கும் என்கிறார்.[11]:7

தெற்காசியர்களிடையே இனக்குழுக்கள் மற்றும் பிறப்பிடங்களில் பன்முகத்தன்மை இருந்தபோதிலும், முன்னர் 'தெற்காசியர்' என்ற சொல் 'இந்தியர்' என்பதற்கு ஒத்ததாகவே பயன்படுத்தப்பட்டது.[12] கனடிய கலைக்களஞ்சியம், அதே மக்கள்தொகையை "தெற்காசியர்கள், இந்தோ-கனடியர்கள் அல்லது கிழக்கு இந்தியர்கள்" என்று குறிப்பிடுவதாகவும், 'தெற்காசியர்கள்' என்று குறிப்பிடப்படும் மக்கள் இந்தச் சொல்லை ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் 'ஐரோப்பியர்' என்ற அடையாளத்துடன் பார்க்கும் விதத்தில் பார்க்கிறார்கள் என்றும் கூறிகிறது.[13] நாயரின் கூற்றுப்படி, "கனடாவில் பிறந்த தெற்காசியர்கள் என்ற சொல்லை விரும்பவில்லை. ஏனெனில் அது அவர்களை மற்ற கனடியர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது." என்று குற்றம் சாட்டினார்.[8] Geographical Identities of Ethnic America: Race, Space, and Place எனும் நூலின் ஆசிரியரான மார்த்தா எல். ஹென்டர்சன் என்பவர், 'தெற்காசியா' எனும் சொல் "தெற்காசியர்களுக்கும், முதன்மையாக கனடியர்களுக்கும் இடையிலான தொடர்புகளில் மட்டுமே வரையறுக்கும் எல்லையாக பொருளாக உள்ளது என்று வாதிடுகிறார்.

அதிகமாக வாழும் மாநிலங்களும் நகரங்களும்

[தொகு]

இந்தியக் கனேடியர்கள் ஒன்ராறியோ மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணங்களில் அடர்த்தியாகவும்; ஆல்பர்ட்டா மற்றும் கியூபெக் மாகாணங்களில் பரவலாகவும் வாழ்கின்றனர். அதிகமாக வாழும் நகரங்களில் குறிப்பிடத்தக்கவைகள் ஒன்ராறியோ வான்கூவர், ஒட்டாவா கால்கரி, மொண்ட்ரியால், அப்போட்ஸ்போர்டு, வினிப்பெக், எட்மன்டன் மற்றும் ஆமில்டன் ஆகும்.

மக்கள் தொகை வரலாறு

[தொகு]
இந்தியக் கனேடிய மக்கள் தொகை வரலாறு (1901–2021)
ஆண்டு மக்கள் தொகை %
1901 >100 0.002%
1911 2,342 0.032%
1921 1,016 0.012%
1931 1,400 0.013%
1941 1,465 0.013%
1951 2,148 0.015%
1961 6,774 0.037%
1971 67,925 0.315%
1981 165,410 0.687%
1986 261,435 1.045%
1991 423,795 1.57%
1996 638,345 2.238%
2001 813,730 2.745%
2006 1,072,380 3.433%
2011 1,321,360 4.022%
2016 1,582,215 4.591%
2021 1,858,755 5.117%

2021ஆம் ஆண்டின் கனடா மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியக் கனேடியர்களின் மக்கள் தொகை ஏறத்தாழ1.86 மில்லியன் ஆகும். இது கனடாவின் மொத்த மக்கள் தொகையில 5.1% ஆகும்.

சமயம்

[தொகு]

இந்தியக் கனேடியர்களில் சீக்கிய சமயத்தை 36%, இந்து சமயத்தை 32%, கிறித்துவத்தை 12%, இசுலாத்தை 11%, சமயமற்றவர்கள் 8%, இறைமறுப்பாளர்கள் 8% மற்றும் சமணம், பௌத்தம் & சரதுசத்தை பின்பற்றுபவர்கள் 1% உள்ளனர்.

மொழிகள்

[தொகு]

இந்தியக் கனேடியர்கள் ஆங்கிலம், பிரஞ்சியம், பஞ்சாபி, இந்தி, உருது, தமிழ், குஜராத்தி மற்றும் இந்தியாவின் பிற மொழிகளைப் பேசுகின்றனர்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Government of Canada, Statistics Canada (2023-11-15). "Census Profile, 2021 Census of Population". www12.statcan.gc.ca. Retrieved 2024-10-25.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; 2007Report என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. Government of Canada, Statistics Canada (2023-11-15). "Census Profile, 2021 Census of Population". www12.statcan.gc.ca. Retrieved 2024-10-25.
  4. Government of Canada, Statistics Canada (2023-11-15). "Census Profile, 2021 Census of Population". www12.statcan.gc.ca. Retrieved 2024-10-25.
  5. Nayar, Kamala Elizabeth. The Sikh Diaspora in Vancouver: Three Generations Amid Tradition, Modernity, and Multiculturalism. University of Toronto Press, 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0802086314, 9780802086310, p. 235. "3 'East Indians' refers to people whose roots are specifically in India. Although there is no country called East India, the British gave and used the term 'East India.' The British and Canadians commonly used the term 'East Indian' during the early period of Indian migration to Canada." and "4 'South Asians' is a very broad category as it refers to people originally in the geographical area of South Asia, including India, Pakistan, Bangladesh, and Sri Lanka. 'South Asians' also refers to Indians who have migrated to other parts of the world such as Fiji, Malaysia, Hong Kong, and East Africa."
  6. Ames, Michael M. & Joy Inglis. 1974. "Conflict and Change in British Columbia Sikh Family Life" (பரணிடப்பட்டது 2015-07-11 at the வந்தவழி இயந்திரம்). In British Columbia Studies, Vol. 20. Winter 1973-1974. CITED: p. 19.
  7. ("The East Indian Community in Canada". Archived from the original on January 4, 2015. Retrieved July 8, 2010.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)). Statistics Canada. Retrieved on November 10, 2014. "That year, roughly half of all foreign-born Canadians of East Indian origin were from India, while smaller numbers were from Pakistan, Bangladesh and Sri Lanka, as well as East Africa"
  8. 8.0 8.1 Nayar, Kamala Elizabeth. The Sikh Diaspora in Vancouver: Three Generations Amid Tradition, Modernity, and Multiculturalism. University of Toronto Press, 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0802086314, 9780802086310. p. 236. See: "9 The term 'Indo-Canadians' came into use in the 1980s as a result of the Canadian government's policy and ideology of multiculturalism. It refers to Canadian-born people whose origins are on the Indian subcontinent." and "9 The term 'Indo-Canadians' came into use[...]"
  9. Sharma, Kavita A. The Ongoing Journey: Indian Migration to Canada. Creative Books, 1997. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8186318399, 9788186318393. p. 16. "Notes 1 Indians are variously designated as East Indians, South Asians and Indo- Canadians. The terms are used interchangeably throughout this book except that 'Indo-Canadian' has been used for only those Indians who have acquired Canadian citizenship".
  10. Mani, Priya S. (University of Manitoba). "Methodological Dilemmas Experienced in Researching Indo-Canadian Young Adults’ Decision-Making Process to Study the Sciences." International Journal of Qualitative Methods 5 (2) June 2006. PDF p. 2/14. "The term South Asian refers to the Statistics Canada classification, which includes young adults who identify as Sikh, Hindu, or Muslim religious background (Statistics Canada, 2001). In this article, the term Indo-Canadian refers to children of South Asian immigrants."
  11. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Sumartojop7 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  12. Henderson, Martha L. Geographical Identities of Ethnic America: Race, Space, and Place. University of Nevada Press, 2002. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0874174872, 9780874174878. p. 65.
  13. "South Asians" (பரணிடப்பட்டது நவம்பர் 10, 2014 at the வந்தவழி இயந்திரம்). The Canadian Encyclopedia. Retrieved on November 10, 2014.

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியக்_கனேடியர்கள்&oldid=4226630" இலிருந்து மீள்விக்கப்பட்டது