இந்தியக் கணித வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தியக்கணித வரலாறு

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு" - திருவள்ளுவர் என்று கூறி கணிதத்தின் முக்கியத்துவத்தை திருவள்ளுவர் 2000 வருடங்களுக்கு முன்பே நிலைநிறுத்தியுள்ளார். திருக்குறளில் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, "அறு", "எழு", "எண்", பத்து, "கோடி" ஆகிய எண்கள் அல்லது தொகையீடுகள் அங்காங்கே பயன்படுத்தப்பட்டுள்ளன. எனினும் "தொண்டு" அல்லது "தொன்பது" பயன்படுத்தப்படவில்லை.

தமிழ் எண்ணுருக்கள், தமிழில் பூச்சியத்துக்கு குறியீடு இல்லை. எண்களை எழுதுவதில் இடமதிப்புத் திட்டத்தையும் பூச்சியம் என்ற கருத்தையும் உருவாக்கி வருங்காலக்கணிதக்குறியீட்டுமுறைக்கு அடிகோலிட்டது பழையகால இந்தியா. இதைத்தவிர இந்தியக் கணிதவியலர்கள் (ஆரியபட்டர், பிரம்மகுப்தர், பாஸ்கராச்சாரியர், இன்னும் பலர்) மேற்கத்தியநாடுகள் மறுமலர்ச்சியடைந்து அறிவியலில் வளர்வதற்கு முன்னமேயே பலதுறைகளில் முன்னேற்றம் கண்டிருந்தனர். வேதகாலத்துக்கணிதத்தின் கணிப்பு முறைகள் சுல்வசூத்திரங்களின் வடிவியல்

சூனியமும் இடமதிப்புத் திட்டமும்

எண்களின் அடிப்படைகளைப்பற்றி ஜைனர்கள் பாக்சாலி கையெழுத்துப்பிரதிகளின் சமன்பாடுகள் வானவியல் கேரளத்தில் நுண்கணிதத்தின் முதல் கண்டுபிடிப்புகள் இவையெல்லாம் இந்தியக்கணிதத்தின் சிறப்புகள்.

கணிதம் என்றால் என்ன?[தொகு]

எண்களை வைத்துக்கொண்டு உண்டாக்கப்பட்ட கணிப்பியலோ (arithmetic) வடிவங்களை வைத்துக்கொண்டு உண்டாக்கப்பட்ட வடிவியலோ இவைதான் கணிதவியல் என்று நினைப்போர் பலர். இன்னும் சிலர் எண்களுக்குப் பதிலாக குறிப்பீடுகளை வழங்கி அவைகளையும் எண்கள்போல் கணிப்புகள் செய்யும் இயற்கணிதம் தான் கணிதத்தின் முக்கிய பாகம் என்பர். மற்றும் சிலர் வடிவங்களை அலசி ஆராயும் வடிவியல் வளர்ச்சி தான் கணிதத்தின் இயல்பு என்று கூறுவர். ஆனால் கணிதம் இதையெல்லாம் தாண்டிய ஒன்று.

தற்காலத்திய கணிதத்தின் வரலாறு[தொகு]

14 வது நூற்றாண்டில் தொடங்கி, சென்ற ஆறு நூற்றாண்டுகளில் கணிதத்தின் வளர்ச்சியைத் தெரிந்துகொள்ள கணிதவியலாளர்கள் பலரின் வரலாறுகளே தக்க சான்றுகள். ஃபெர்மா, நியூட்டன், ஆய்லர், காஸ், கால்வா, ரீமான், கோஷி, ஏபல், வியர்ஸ்ட்ராஸ், கெய்லி, கேன்ட்டர், ஹில்பர்ட், இப்படி இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கு கொண்டு உருவாக்கப்பட்ட கணிதம் இன்றைய கணிதம்.

கணிதம் சம்பந்தமான பல்வேறு துணைப் பிரிவுகள்[தொகு]

கணிதத்தின் தற்காலப் பிரிவுகளைப் பற்றி பட்டியலிடவேண்டுமானால் அப்பட்டியலில் 100 தாய்ப்பிரிவுகளாவது இருக்கும். இப்பிரிவுகளுக்குள் மிகவும் வியப்பு தரும் உறவுகள் உண்டு. இவைகளிலெல்லாம் கணிதத்திற்கென்றே தனித்துவம் வாய்ந்த மரபும் குறிப்பிடத்தக்கது. இம்மரபுதான் கணிதத்தை மற்ற அறிவியல் துறைகளிலிருந்து பிரித்துக் காட்டுகிறது.இவைதவிர, கணிதத்தின் அடிப்படைகளுக்கும் மற்ற துறைகளுக்குமான தொடர்பை தருக்கவியலும் ஆய்கின்றது. மேலும் புள்ளியியல் போன்ற நேரடியாகப் பயன்படும் கணிதத் துறைகளும் உண்டு

அளவு (Quantity)[தொகு]

எண்கணிதம்

அளவியல்

இயல்எண்கள்

முழு எண்கள்

விகிதமுறு எண்கள்

மெய்யெண்கள்

செறிவெண்கள்

அமைப்பு (Structure)[தொகு]

இயற்கணிதம்

எண் கோட்பாடு

நுண்புல இயற்கணிதம்

குலக் கோட்பாடு (Group Theory) Order theory

வெளி (Space)[தொகு]

வடிவவியல்

முக்கோணவியல்

வகையீட்டு வடிவவியல் (Differential geometry)

இடவியல்

பகுவல்

மாற்றம் (Change)[தொகு]

நுண்கணிதம்

திசையன் நுண்கணிதம்

வகையீட்டு சமன்பாடுகள்

இயங்கியல் அமைப்புகள் (Dynamical systems)

ஒழுங்கின்மை கோட்பாடு

கணித அடித்தளங்கள்[தொகு]

தருக்கவியல் (கணிதம்)

கணக் கோட்பாடு, கணம் (கணிதம்)

விகுதிக் கோட்பாடு (Category theory)

இலக்கமியல் கணிதம்[தொகு]

சேர்வியல்

கணிமைக் கோட்பாடு

வரைவியல் (Cryptography)

கோலக்கோட்பாடு (Graph theory)

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியக்_கணித_வரலாறு&oldid=2721652" இருந்து மீள்விக்கப்பட்டது