இந்தர்பிர் சோதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தர்பிர் சோதி
Ish Sodhi
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்இந்தர்பிர் சிங் சோதி
பிறப்பு31 அக்டோபர் 1989 (1989-10-31) (அகவை 34)
லூதியானா, இந்தியா
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கைக் கழல் திருப்பம்
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 262)9 அக்டோபர் 2013 எ. வங்காளதேசம்
கடைசித் தேர்வு26-30 நவம்பர் 2014 எ. பாக்கித்தான்
இ20ப அறிமுகம் (தொப்பி 64)5 சூலை 2014 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி இ20ப6 சூலை 2014 எ. மேற்கிந்தியத் தீவுகள்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2012–இன்றுவடக்கு மாகாணங்கள் அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே இ20ப மு.த. ப.அ
ஆட்டங்கள் 11 2 30 22
ஓட்டங்கள் 337 0 1041 101
மட்டையாட்ட சராசரி 25.92 24.20 14.42
100கள்/50கள் 0/2 0/0 0/7 0/0
அதியுயர் ஓட்டம் 63 0* 82* 29
வீசிய பந்துகள் 2254 30 5777 1035
வீழ்த்தல்கள் 27 2 81 27
பந்துவீச்சு சராசரி 52.81 25.50 45.67 30.40
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 3 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 -
சிறந்த பந்துவீச்சு 4/96 1/16 5/27 4/10
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/– 0/– 9/– 6/–
மூலம்: CricketArchive, ஆகத்து 19 2014

ஈஷ் சோதி (Ish Sodhi) என அழைக்கப்படும் இந்தர்பிர் சிங் சோதி (Inderbir Singh Sodhi, பிறப்பு: அக்டோபர் 31 ,1992), நியூசிலாந்தின் துடுப்பாட்ட வீரர் ஆவார்.[1] இவர் வலக்கைக் கழல் திருப்ப பந்து வீச்சாளராவார். இவர் நியூசிலாந்து அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் வலது கை துடுப்பாளரும், வலதுகை புறத்திருப்பம் பந்துவீச்சாளரும் ஆவார். இவர் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் வடக்கு மத்திய மாகாண துடுப்பாட அணி ஆகிய அணிகளில் உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடினார். இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். மேலும் இவர் ஓக்லாந்து 17 வயதிற்கு உட்பட்ட அணி ,19 வயதிற்கு உட்பட்ட அணி மற்றும் நியூசிலாந்து ஏ அணிகளிலும் இவர் விளையாடியுள்ளார்.[1][2] சனவரி 2010 இல் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறந்த பன்னாட்டு இருபது20 பந்துவீச்சாளருக்கான தரவரிசையில் இவர் முதல் இடத்தில் இருந்தார்.[3]

சர்வதேச போட்டிகள்[தொகு]

தேர்வுத் துடுப்பாட்டம்[தொகு]

2013 ஆம் ஆண்டில் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது.அக்டோபர் 9 இல் சிட்டகொங்கில் நடைபெற்ற வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[2] இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 5 பந்துகளில் 1 ஓட்டம் எடுத்து சகீப் அல் அசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.[4] பின் பந்துவீச்சில் 29 ஓவர்கள் வீசி 112 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தார். இதில் 3 ஓவர்களை மெய்டனாக வீசினார். மேலும் இவர் 2 இலக்கினைக் கைப்பற்றினார்.இவரின் பதுவீச்சு சராசரி 3.88 ஆகும்.இரண்டாவது ஆட்டப் பகுதியில் 12 பந்துகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 22 ஓட்டங்கள் எடுத்தார்[5]. பந்துவீச்சில் 10 ஓவர்கள் வீசி 57 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 1 இலக்குகளைக் கைப்பற்றினார். இதில் 1 ஓவரை மெய்டனாக வீசினார். இந்தப் போட்டி சமனில் முடிந்தது.

2018 ஆம் ஆண்டில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது.[6] ஏப்ரல் 3 இல் கிறிட்சர்ச் நடைபெற்ற இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 7 பந்துகளில் 1 ஓட்டங்கள் எடுத்து ஸ்டூவர்ட் பிரோட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.[7] பின் பந்துவீச்சில் 5 ஓவர்கள் வீசி 31 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இதில் 7 ஓவர்களை மெய்டனாக வீசினார். இவரின் பதுவீச்சு சராசரி 6.20 ஆகும். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 7 பந்துகளில் 1 ஓட்டங்கள் எடுத்தார். பின் பந்துவீச்சில் 11 ஓவர்கள் வீசி 46 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தார். இந்தப் போட்டி சமனில் முடிந்தது.[8]

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்[தொகு]

ஆகஸ்டு 4, 2015 இல் ஹராரேவில் நடைபெற்ற சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்[2].இந்தப் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 65 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இதில் 1 ஓவரை மெய்டனாக வீசினார். இவரின் பந்துவீச்சு சராசரி 6.50 ஆகும். இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 7 இலக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.[9]

பன்னாட்டு இருபது20[தொகு]

இவர் ரூசோவில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 3ஓவர்கள் வீசி 1 இலக்கினைக் கைப்பற்றினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Players / New Zealand / Ish Sodhi". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 October 2013.
  2. 2.0 2.1 2.2 "Ish Sodhi", Cricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-24
  3. "Munro and Sodhi on top of the world" (in en). https://www.icc-cricket.com/media-releases/587573. 
  4. "1st Test, New Zealand tour of Bangladesh at Chittagong, Oct 9-13 2013 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-24
  5. "1st Test, New Zealand tour of Bangladesh at Chittagong, Oct 9-13 2013 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-24
  6. "2nd Test, England tour of Australia and New Zealand at Christchurch, Mar 30-Apr 3 2018 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-24
  7. "2nd Test, England tour of Australia and New Zealand at Christchurch, Mar 30-Apr 3 2018 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-24
  8. "2nd Test, England tour of Australia and New Zealand at Christchurch, Mar 30-Apr 3 2018 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-24
  9. "1st ODI, New Zealand tour of Zimbabwe and South Africa at Harare, Aug 2 2015 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-24

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தர்பிர்_சோதி&oldid=3968732" இலிருந்து மீள்விக்கப்பட்டது