இந்தக் கோடையை எப்படிக் கழித்தேன் (திரைப்படம்)
இந்த கோடையை எப்படிக் கழித்தேன் | |
---|---|
![]() அட்டை | |
இயக்கம் | அலெக்சி போப்போகிரேப்சுகி |
தயாரிப்பு | ரமான் போரிசெவிச் |
கதை | அலெக்சி போப்போகிரேப்சுகி |
இசை | டிமிட்ரி கத்கனோவ் |
நடிப்பு | கிரிகோரி டோபிரிகின் செர்கி புசுகிபலிசு |
ஒளிப்பதிவு | பாவெல் கோசுடோமரோவ் |
படத்தொகுப்பு | இவான் லெபெதெவ் |
விநியோகம் | பவரியா பிலிம் இண்டர்நேசனல் |
வெளியீடு | 17 பெப்ரவரி 2010(60வது பன்னாட்டுத் திரைப்பட விழா, பெர்லின்]]) 1 ஏப்ரல் 2010 (ரசியா) |
ஓட்டம் | 124 நிமிடங்கள் |
நாடு | உருசியா |
மொழி | உருசிய மொழி |
இந்த கோடையை எப்படிக் கழித்தேன் (உருசியம்: Как я провёл этим летом, கக் யா பிரவியோல் ஏத்திம் லியெத்தம், How I Ended This Summer) என்பது 2013 ஆம் ஆண்டு வெளியான உருசியத் திரைப்படம். அலெக்சி போப்போகிரேப்சுகியின் இயக்கத்தில் உருவானது. அறுபதாவது பன்னாட்டுத் திரைப்பட விழாவில் தங்கக் கரடி (Golden Bear) விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.[1]
கதை[தொகு]
தனித்திருக்கும் ஆர்க்டிக் தீவில், வானியல் ஆய்வுக் கழகத்தில், செர்கி என்ற மேல்நிலைப் பணியாளரும், அவரின் கீழ் பாவெல் என்பவரும் வேலை செய்கின்றனர். செர்கி மீன்பிடிக்கச் சென்ற சமயம், பாவெல்லுக்கு, செர்கியின் குடும்பத்தினர் விபத்தில் உயிரிழப்பதாகத் தகவல் வெளியாகிறது. இதை சொல்லியாக வேண்டிய சூழ்நிலையிலும் சொல்லாதிருக்கிறான். [2]
விருதுகள்[தொகு]
- 60வது பன்னாட்டுத் திரைப்பட விழா, பெர்லின் [3]
- சிறந்த நடிகர்களுக்கான சில்வர் பியர் விருது - கிரிகோரி டோபிரிகின், செர்கி புசுகேபாலிசு
- சிறந்த படப்பிடிப்பிற்கான விருது - பாவெல் கோசுடோமரோவ்
- 7வது கோல்டன் அபிரிகாட் பன்னாட்டுத் திரைப்பட விழா[4]
- எசுமெரியல் ஜூரி விருது
- 2010 லண்டன் திரைப்பட விழா[5]
- சிறந்த திரைப்படமாக தெர்வு செய்யப்பட்டது
- சிக்காகோ, பன்னாட்டுத் திரைப்பட விழா[6]
- கோல்டு ஹூகோ - சிறந்த திரைப்படம்
- கோல்டன் ஈகிள் விருது[7]
சான்றுகள்[தொகு]
- ↑ "60th Berlin International Film Festival: Programme". berlinale.de. 2015-01-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-10-16 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Review by Kirk Honeycutt". The Hollywood Reporter. 2010-10-14. Archived from the original on 2010-09-23. https://web.archive.org/web/20100923063932/http://www.hollywoodreporter.com/hr/film-reviews/how-i-ended-this-summer-film-review-1004068515.story.
- ↑ "Prizes of the International Jury". 2013-10-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-10-22 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Golden Apricot International Film Festival". gaiff.am. 2013-05-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-06-16 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Festival award winners announced". bfi.org.uk. 2010-10-31 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-01-08 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "46th Chicago International Film Festival Award Winners Announced". 2011-05-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-10-22 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "How I Ended This Summer Wins Top Golden Eagle Award". 2011-07-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-10-22 அன்று பார்க்கப்பட்டது.