இத்ரிசு தேபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இத்ரிசு தேபி
Idriss Déby
إدريس ديبي
2014 இல் தேபி
6-வது சாட் அரசுத்தலைவர்
பதவியில்
2 திசம்பர் 1990 – 20 ஏப்ரல் 2021
முன்னையவர்இசேனே ஆப்ரே
ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவர்
பதவியில்
30 சனவரி 2016 – 30 சனவரி 2017
முன்னையவர்இராபர்ட் முகாபே
பின்னவர்அல்ஃபா கொண்டே[1]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1952-06-18)18 சூன் 1952
பாடா, பிரெஞ்சு எக்குவட்டோரியல் ஆப்பிரிக்கா (இன்று சாட்)
இறப்பு20 ஏப்ரல் 2021(2021-04-20) (அகவை 68)
திபெசுத்தி, சாட்
காரணம் of deathகளச்சாவு
அரசியல் கட்சிதேசப்பற்றுள்ள இரட்சணிய இயக்கம்
துணைவர்இன்டா (தி. 2005)[2][3]
பிள்ளைகள்
 • மகமத்
 • பிராகிம்
சமயம்இசுலாம்
இனம்சகாவா
Military service
பற்றிணைப்பு சாட்
கிளை/சேவை சாட் இராணுவம்
சேவை ஆண்டுகள்1976–2021
தரம்படைத்தலைவர்

இத்ரிசு தேபி இத்னோ (Idriss Déby Itno; அரபு மொழி: إدريس ديبي‎; 18 சூன் 1952 – 20 ஏப்ரல் 2021) சாட் நாட்டின் அரசியல்வாதியும், இராணுவ அதிகாரியும் ஆவார். இவர் 1990 முதல் இறக்கும் வரை சாட் நாட்டின் அரசுத்தலைவராகப் பதவியில் இருந்தார். இவர் படை ஒன்றிற்குத் தலைமை தாங்கிச் செல்லும் போது கொல்லப்பட்டார்.[4] இத்ரிசு ஆளும் தேசப்பற்றுள்ள இரட்சணிய இயக்கத்தின் தலைவரும் ஆவார். இவர் சகாவா இனக்குழுவின் பிதாயத் வம்சத்தைச் சேர்ந்தவர். 1990 திசம்பரில் அன்றைய அரசுத்தலைவராக இருந்த இசேனே ஆப்ரே இற்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டு ஆட்சியைக் கைப்பற்றினார். அதற்குப் பின்னர் இவரது ஆட்சிக்கு எதிராக இடம்பெற்ற பல கிளர்ச்சிகளையும், இராணுவப் புரட்சிகளையும் முறியடித்து ஆட்சியில் தொடர்ந்தார். 1996, 2001 அரசுத்தலைவர் தேர்தல்களில் வெற்றி பெற்றார். ஒரு அரசுத்தலைவரின் பதவிக்கால எல்லை நீக்கப்பட்டதை அடுத்து, 2006, 2011, 2016, 2021 தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் முஅம்மர் அல் கதாஃபியின் உலகப் புரட்சி மையத்தில் படித்துப் பட்டம் பெற்றார்.[5] தெபியின் பல தசாப்த கால ஆட்சியை பல பன்னாட்டு ஊடகங்கள் சர்வாதிகார ஆட்சியாக விவரித்தன.[6][7][8]

இறப்பு[தொகு]

இவர் 2021 ஏப்ரல் 20 அன்று "பாக்ட்" கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகத் தனது படைகளுக்குத் தலைமை தாங்கிச் சென்ற போது துப்பாக்கிக் குண்டுகள் தாக்கி களச்சாவு அடைந்ததாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.[9] இறக்குப் போது இவருக்கு அகவை 68 ஆகும்.[10][11][12] இவரது இறப்பை அடுத்து சாட் நாட்டின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு,[11] இவரது மகன் மகமத் தேபி இத்னோ தலைமையில் இடைக்கால இராணுவப் பேரவை அமைக்கப்பட்டது.[13] அத்துடன் சாட் அரசும் கலைக்கப்பட்டது.[14][15]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Guinea President Alpha Conde elected AU chair succeeding Deby". The Star Kenya. 30 January 2017. Archived from the original on 13 January 2020. பார்க்கப்பட்ட நாள் 30 January 2017.
 2. "Chad president weds Janjaweed chief daughter". Wayback Machine. 21 January 2012. Archived from the original on 25 January 2012.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)
 3. "Chad: President Idriss Déby is killed in battle, after ruling for 30 years". The Africa Report.com. 20 April 2021. Archived from the original on 20 April 2021. பார்க்கப்பட்ட நாள் 20 April 2021.
 4. "BREAKING: Chad president assassinated by militants from North". EgyptToday. 2021-04-20. Archived from the original on 20 April 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-04-20.
 5. Douglas Farah (4 March 2011). "Harvard for Tyrants". The Foreign Policy. Archived from the original on 5 November 2014. பார்க்கப்பட்ட நாள் 7 March 2017.
 6. "Chad's authoritarian Deby unwilling to quit". Deutsche Welle (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 8 April 2016. Archived from the original on 8 November 2020. பார்க்கப்பட்ட நாள் 4 August 2020.
 7. Haynes, Suyin (28 March 2019). "This African Country Has Had a Yearlong Ban on Social Media. Here's What's Behind the Blackout". Time. Archived from the original on 8 August 2020. பார்க்கப்பட்ட நாள் 4 August 2020.
 8. Werman, Marco (5 June 2012). "ExxonMobil and Chad's Authoritarian Regime: An 'Unholy Bargain'". The World (in ஆங்கிலம்). Public Radio International. Archived from the original on 22 October 2020. பார்க்கப்பட்ட நாள் 4 August 2020.
 9. "Chadian President Idriss Déby has died of injuries suffered on the frontline (army)". France 24. 20 April 2021. Archived from the original on 20 April 2021. பார்க்கப்பட்ட நாள் 20 April 2021.
 10. Takadji, Edouard; Larson, Krista (April 20, 2021). "Rebels vow to take capital after Chadian president killed". CTV News. அசோசியேட்டட் பிரெசு (Bell media) இம் மூலத்தில் இருந்து 20 April 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210420203549/https://www.ctvnews.ca/world/rebels-vow-to-take-capital-after-chadian-president-killed-1.5394294. 
 11. 11.0 11.1 "Chad President Idriss Deby dies on front lines, according to an army statement". Deutsche Welle. 20 April 2021. Archived from the original on 20 April 2021. பார்க்கப்பட்ட நாள் 20 April 2021.
 12. "Chad President Idriss Deby dies on front lines, says army spokesman". Reuters. 20 April 2021. Archived from the original on 20 April 2021. பார்க்கப்பட்ட நாள் 20 April 2021.
 13. "Chad Sets Up Transitional Military Council Headed By Son Of Late President – Reports". UrduPoint (in ஆங்கிலம்). Archived from the original on 20 April 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-04-20.
 14. Reuters (April 20, 2021). "Chad President Idriss Deby killed on frontline, son to take over". Thomas Reuters News. https://news.trust.org/item/20210420111727-lvy4q/. பார்த்த நாள்: April 20, 2021. 
 15. "Chad's President Idriss Déby dies after clashes with rebels" (in en-GB). BBC News. 2021-04-20 இம் மூலத்தில் இருந்து 20 April 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210420200202/https://www.bbc.com/news/world-africa-56815708. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இத்ரிசு_தேபி&oldid=3135561" இலிருந்து மீள்விக்கப்பட்டது