இத்தி தியாகி
இத்தி தியாகி | |
---|---|
2018 நாரி சக்தி விருது பெறும் இத்தி தியாகி | |
தேசியம் | இந்தியர் |
கல்வி | தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி |
பணி | வடிவமைப்பாளர் |
அறியப்படுவது | சீமைக்காரையை பயன்படுத்தி வடிவமைக்கும் வடிவமைப்பாளர் |
வாழ்க்கைத் துணை | சோமேசு சிங் |
இத்தி தியாகி (Iti Tyagi) ஒரு இந்திய வடிவமைப்பாளரும் சமூக தொழில்முனைவோருமாவார். 2015ஆம் ஆண்டில், கைவினைப் பொருட்களைத் தயாரிக்கும் கைவினைஞர்களை நேரடியாக வாங்குபவர்களுடனும் வாடிக்கையாளர்களுடனும் இணைப்பதை நோக்கமாகக் கொண்ட கைவினை கிராமத்தை இவர் நிறுவினார். பெண்களை மேம்படுத்துவதற்கான இவரது பணிக்காக 2018 நாரி சக்தி விருதைப் பெற்றார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]இத்தி தியாகி தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரியில் உடையலங்காரம் மற்றும் ஆடை தொழில்நுட்பம் பயின்றார்.[1] பின்னர் இலண்டனில் உள்ள கேஎல்சி உடையலங்கார கல்லூரியில் உட்புற வடிவமைப்பைப் படித்தார்.[2]
தொழில்
[தொகு]இவர், உலோக வேலை, மரவேலை, கண்ணாடியில் ஊதுதல் , பூத்தையல் ஆகிய துறைகளில் வடிவமைப்பாளராக உள்ளார். மேலும் இத்துறைகளின் நிலையான வளர்ச்சியிலும் ஆர்வம் காட்டுகிறார்.[3] 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில், சீமைக்காரை பயன்பாட்டை மையமாகக் கொண்ட இரண்டு கிராஃப்ட் பெட்டன் அலங்கார சேகரிப்புகளில் இவரது பணி இடம்பெற்றது.[4][5] இது கிராஃப்ட் பெட்டனின் தில்லி கன்காட்சிக்கு பொருட்களை தயாரிக்கும் மூல தயாரிப்பாளர்களுக்கான 2020 கூட்டாண்மைக்கு வழிவகுத்தது.[6] 2019 ஆம் ஆண்டில், லூயிஸ் குயின்ஸ் பாணியில் சீமைக்காரையிலிருந்து தயாரிக்கப்பட்ட மேசையை இவர் காட்சிப்படுத்தினார்.[2] இவர் தேசிய வடிவமைப்பு நிறுவனத்திலும், தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார்.[1]
கைவினைப்பொருட்கள் செய்யும் நபர்களை நேரடியாக வாங்குபவர்களுடன் தொடர்பு கொள்வதை நோக்கமாகக் கொண்டு, 2015 ஆம் ஆண்டில் தனது கணவர் சோமேசு சிங்குடன் சமூக நிறுவன கைவினை கிராமத்தைத் தொடங்கினார்.[7][8][9] இவர் இந்தியா கைவினை வாரம், சர்வதேச கைவினை நாள் மற்றும் சர்வதேச கைவினை விருதுகளை அமைத்தார்.[8] இந்திய கைவினைத் தொழில்களின் வருமானம் 2024ஆம் ஆண்டுக்குள் $ 60 பில்லியனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2018-2019 நிதியாண்டில், கைவினை கிராமத்தின் வருவாய் ₹ 26,700,000 ஆகும்.[8] கைவினை கிராமம் மூலம், தியாகி பாலகட்டி, பிரோசாபாத், கச்சு, மொராதாபாத் ,சகாரன்பூர் ஆகிய இடங்களில் இருந்து கைவினைத் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்தார்.[10]
கோவிட் -19 தொற்றுநோய்களின் போது, தியாகி 50% இயற்கை மற்றும் 50% செயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் சுகாதார நிபுணர்களுக்கான சுய பாதுகாப்பு சாதனங்களை (PPE) வடிவமைத்தார். சாதாரண உடைகள் 100% செயற்கையாக இருப்பதால், இந்த உடைகள் அகற்றப்படும்போது குறைவான சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.[11] இந்தியா கைவினை வாரத்தின் மூன்றாவது பதிப்பு இணையதளத்தில் 2020இல் வெளியிடப்பட்டது.[12]
2021ஆம் ஆண்டில் இந்திய கைவினை வாரம் பிரிட்டிசு அமைப்புக் கட்டிடம் மற்றும் புது தில்லியில் உள்ள பிகானர் ஹவுஸ் ஆகியவற்றில் நேரில் காணும் நிகழ்வாக மாறியது. இது பிரித்தானிய கவுன்சிலுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.[13]
விலங்கு உரிமைகள்
[தொகு]செல்லப்பிராணிகள் மற்றும் அவற்றின் உரிமையாளர்களின் உரிமைகளை ஊக்குவிக்கும் குழுவான செல்லப்பிராணி பெற்றோர் சங்கத்தை தியாகி நிறுவினார். குருகிராம் மற்றும் புதுடெல்லியில் வசிக்கும் ஒரு நாய் உரிமையாளராக தனது அனுபவங்கள் இவருக்கு ஊக்கமளித்தன.[14] இந்தக் குழு தெரு நாய்களைப் பராமரிக்கிறது. விலங்கு நலனை ஊக்குவிக்கிறது. குடியிருப்போர் நலச் சங்கங்களுடனான கருத்து வேறுபாடுகளில் உரிமையாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.[14][15]
விருதுகளும் அங்கீகாரமும்
[தொகு]பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் இவரது பணியை அங்கீகரித்த இந்தியக் குடிய்ரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், 2019ஆம் ஆண்டு அனைத்துலக பெண்கள் நாளன்று தியாகிக்கு நாரி சக்தி விருதை வழங்கினார்.[10] அதைப் பெற்ற பிறகு, "ஒவ்வொரு பெண்ணும் தங்கள் கூட்டிலிருந்து வெளியே வர வேண்டும். ஒரே மாதிரியாக இருப்பதை உடைக்க வேண்டும்" என்று இவர் கூறினார்.[10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Staff writer (23 October 2019). "Craft Cues". Sakal Times. http://www.bindugopalrao.com/iti-tyagi-founder-of-india-craft-week-icw/.
- ↑ 2.0 2.1 Bose (17 February 2019). "Storytelling with cement: Designers are increasingly experimenting with cement". The Financial Express. https://www.financialexpress.com/lifestyle/designers-increasingly-experimenting-with-cement-creating-masterpieces/1489902/.
- ↑ "Concrete love". The Asian Age. 26 November 2017. https://www.asianage.com/life/art/261117/concrete-love.html.
- ↑ "Let’s talk about Bauhaus: new interpretations of cement". Architectural Digest India. 12 May 2017. https://www.architecturaldigest.in/content/let-talk-bauhaus-new-interpretations-cement/#s-cust0.
- ↑ "Set in stone". India Today. 12 January 2018. https://www.indiatoday.in/magazine/supplement/story/20180122-design-cement-art-1143846-2018-01-12.
- ↑ "Who says cement is grey and stodgy?". The Hindu. 21 February 2020. https://www.thehindubusinessline.com/catalyst/who-says-cement-is-grey-and-stodgy/article30877722.ece.
- ↑ Shankar, Avantikar (18 December 2019). "Delhi: Here’s a recap of India Craft Week that celebrated traditional craft practitioners from across the country". Architectural Digest India. https://www.architecturaldigest.in/content/delhi-heres-a-look-back-at-india-craft-week-that-celebrated-traditional-craft-practitioners-from-across-the-country/#s-cust0.
- ↑ 8.0 8.1 8.2 BW Online Bureau (14 March 2020). "Making Of A Craft Ecosystem". BW Businessworld. http://www.businessworld.in/article/Making-Of-A-Craft-Ecosystem/14-03-2020-186190/.
- ↑ Staff writer (3 December 2018). "Craft Village has been established to bridge the gap between rural and urban communities: Iti Tyagi". The Indian Express. https://indianexpress.com/article/lifestyle/art-and-culture/kalamkari-kalamkari-artists-art-and-craft-india-craft-week-iti-tyagi-5475331/.
- ↑ 10.0 10.1 10.2 Staff writer (11 March 2019). "Iti Tyagi honoured with Nari Shakti Puraskar". The Statesman. https://www.thestatesman.com/cities/delhi/iti-tyagi-honoured-nari-shakti-puraskar-1502738080.html.
- ↑ Kashyaap, Sindhu (19 July 2020). "How Delhi’s Craft Village is ensuring COVID warriors have ‘concrete’ PPE amidst the pandemic" (in en-IN). Yahoo News. https://in.finance.yahoo.com/news/delhi-craft-village-ensuring-covid-235000726.html.
- ↑ "Delhi's India crafts week goes digital amid coronavirus". The New Indian Express. https://www.newindianexpress.com/cities/delhi/2020/may/01/delhis-india-crafts-week-goes-digital-amid-coronavirus-2137767.html.
- ↑ "RARE India partners with the India Craft Week 2021". Hotelier India. 16 Feb 2021. https://www.hotelierindia.com/business/13569-rare-india-partners-with-the-india-craft-week-2021.
- ↑ 14.0 14.1 Saksena, Shalini (17 March 2019). "Women of substance" (in en). The Pioneer. https://www.dailypioneer.com/2019/sunday-edition/women-of-substance.html.
- ↑ Tuli, Aanchal (29 May 2014). "A daily battle faced by pet owners in Gurgaon – Times of India" (in en). The Times of India. https://timesofindia.indiatimes.com/life-style/relationships/pets/A-daily-battle-faced-by-pet-owners-in-Gurgaon/articleshow/35677084.cms.