உள்ளடக்கத்துக்குச் செல்

இத்தாலியத் துடுப்பாட்ட அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இத்தாலி
விளையாட்டுப் பெயர்(கள்)கிளி அசூரி (மொ.'நீலங்கள்')
சார்புஇத்தாலியத் துடுப்பாட்ட வாரியம்
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்உவைன் மாட்சென்[1] (T20I)
மார்க்கசு காம்போபியானோ (பட்டியல் அ)
பயிற்றுநர்யோன் டேவிசன்
வரலாறு
இருபது20 அறிமுகம்எ.  ஓமான் துபாய்; 13 மார்ச் 2012
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
ஐசிசி நிலைஇணைப்பு (1984)
இணை உறுப்பினர் (1995)
ஐசிசி மண்டலம்ஐரோப்பா
ஐசிசி தரம்தற்போது [2]Best-ever
இ20ப28-ஆவது22-ஆவது (16 சூன் 2019)
பன்னாட்டுத் துடுப்பாட்டம்
முதல் பன்னாட்டுஎ.  டென்மார்க் பாக்சுவார்ட்; 15 சூலை 1989
பன்னாட்டு ஒருநாள் போட்டிகள்
உலகக்கிண்ணத் தகுதி-காண் போட்டிகள்2 (முதலாவது 1997 இல்)
சிறந்த பெறுபேறுமுதல் சுற்று (1997, 2001)
பன்னாட்டு இருபது20கள்
முதலாவது ப20இஎ.  செருமனி உத்ரெக்ட்; 25 மே 2019
கடைசி ப20இஎ.  அயர்லாந்து துபாய்; 23 சனவரி 2026
இ20ப(கள்)விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் [3]3724/12 (0 சமம், 1 முடிவில்லை)
நடப்பு ஆண்டு [4]10/1 (0 சமம், 0 முடிவில்லை)
ப20 உலகக்கிண்ணப் போட்டிகள்1 (first in 2026)
சிறந்த பெறுபேறுTBD
உலக இ20 தகுதுகாண் போட்டிகள்4 (முதலாவது 2012 இல்)
சிறந்த பெறுபேறு2-ஆம் இடம் (2025)

பட்டியல் அ & இ20ப ஆடை

இற்றை: 23 சனவரி 2026

இத்தாலி ஆண்கள் துடுப்பாட்ட அணி (Italy men's national cricket team) என்பது ஆண்கள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் இத்தாலியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். இவ்வணி 1995 முதல் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் இணை உறுப்பினராக இருந்து வருகின்றது, முன்பு 1984 முதல் ஒரு துணை உறுப்பினராக இருந்தது. இத்தாலி தேசியத் துடுப்பாட்ட அணி இத்தாலியத் துடுப்பாட்ட வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

வரலாறு

[தொகு]

இத்தாலியத் துடுப்பாட்ட வாரியம் 1980-இல் உருவாக்கப்பட்டது,.[5] இவ்வாரியம் 1984-இல் ஐ.சி.சியின் இணைப்பு உறுப்பினரானது, 1995-இல் இணை உறுப்பினரானது.[6] இத்தாலிய அணியின் முதல் சாதனைப் போட்டி ஆகத்து 1984 இல் அவர்களின் முதல் ஐக்கிய இராச்சிய சுற்றுப்பயணத்தில் உள்ளூர் இலண்டன் அணிகளுக்கு எதிராக ஒரு வாரம் விளையாடியது, வடக்கு மிடில்செக்சுக்கு எதிரான கடைசிப் போட்டியில் முதலாவது வெற்றியைக் கண்டனர். முதல் பன்னாட்டுப் போட்டி 1989 இல் டென்மார்க்கிற்கு எதிராக சமநிலையில் முடிந்தது.

ஏப்ரல் 2018 இல், ஐ.சி.சி அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் முழுமையான பன்னாட்டு இருபது20 (இ20ப) தகுநிலையை வழங்க முடிவு செய்தது. எனவே, 2019 சனவரி 1 முதல் இத்தாலி உட்பட்ட பிற ஐ.சி.சி உறுப்பினர்களிடையே நடைபெற்ற அனைத்து இருபது20 போட்டிகளும் இ20ப தகுநிலையைப் பெற்றன.[7]

செப்டம்பர் 2018 இல், இத்தாலி 2018–19 ஐ.சி.சி உலக இருபது20 ஐரோப்பா தகுதிச் சுற்றின் குழு B இலிருந்து போட்டியின் பிராந்திய இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.[8]

இத்தாலி அணி தமது முதலாவது இ20ப போட்டியை செருமனிக்கு எதிராக மே 2019 இல் விளையாடியது.

25 மே 2019
11:00
ஆட்டவிபரம்
செருமனி 
53 (16 நிறைவுகள்)
 இத்தாலி
57/3 (8.4 நிறைவுகள்)
அகமது வார்தாக் 20* (27)
மைக்கேல் ரோசு 4/15 (4 நிறைவுகள்)
ஜோய் பெரேரா 21 (10)
இசதுல்லா தவ்லத்சை 2/17 (4 நிறைவுகள்)
இத்தாலி 7 இலக்குகளால் வெற்றி
உத்ரெக்ட்
நடுவர்கள்: ரிசுவான் அக்ரம் (நெத), ஊப் ஜான்சென் (நெத)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற செருமனி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • இத்தாலியின் முதலாவது இ20ப போட்டி ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Italy axe captain Joe Burns for Men's T20 World Cup 2026". Cricbuzz. Retrieved 20 December 2025.
  2. "ICC Rankings". International Cricket Council.
  3. "T20I matches - Team records". ESPNcricinfo.
  4. "T20I matches - 2019 Team records". ESPNcricinfo.
  5. "Article about Italian cricket". Archived from the original on 13 February 2006. Retrieved 15 March 2006.
  6. Italy at CricketArchive
  7. "All T20 matches between ICC members to get international status". பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை. 26 April 2018. Retrieved 1 September 2018.
  8. "Italy secure place in European final". Cricket Europe. Archived from the original on 3 September 2018. Retrieved 2 September 2018.

வெளி இணைப்புகள்

[தொகு]