இத்தாச்சி கோபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆள்கூற்று: 1°17′03.08″N 103°51′08.72″E / 1.2841889°N 103.8524222°E / 1.2841889; 103.8524222

இத்தாச்சி கோபுரம்
Hitachi Tower, Dec 05.JPG

இத்தாச்சி கோபுரமும் அதன் அருகே வலப்புறம் அமைந்த டங் மையமும்


தகவல்
அமைவிடம் ராஃபிள்சு இடம், நகர மையம், சிங்கப்பூர்
நிலை பயன்பாட்டில் உள்ளது
பயன்பாடு வணிகம்
உயரம்
கூரை 179 m, 588 ft (179 m)
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை 37
நிறுவனங்கள்
கட்டிடக்கலைஞர் மர்பி/சான், கூட்டிணைக்கப்பட்ட கட்டிடக்கலைஞர்கள், Architects 61 Pte Ltd

இத்தாச்சி கோபுரம் (Hitachi Tower) சிங்கப்பூரின் மைய வணிகப் பகுதியில் அமைந்துள்ள ஒரு வானளாவி ஆகும். இது ராஃபிள்ஸ் இடப் பகுதியில் உள்ள 16 கோலியர் கப்பல்துறை என்னும் இடத்தில் உள்ளது. இதிலிருந்து சுமார் 100 மீட்டர்கள் தொலைவில், செவ்ரான் மாளிகை, சேஞ்ச் அலீ, டங் மையம், த ஆர்க்கேட் ஆகிய கட்டிடங்கள் அமைந்துள்ளன. கிளிபர்ட் இறங்குதுறையைப் பார்த்தபடி இருக்கும் இக் கட்டிடத்தில் இருந்து, மரீனா குடாவின் விரிவுக் காட்சியைக் காண முடியும். இக் கட்டிடத்தில் இருந்து ராஃபிள்ஸ் இடம் பொதுமக்கள் போக்குவரத்துத் தொகுதி நிலையத்துக்கு நிலக்கீழ் இணைப்பு வழி ஒன்றும் உள்ளது.

இதன் உச்சியில் உள்ள 13 மீட்டர்கள் உயரமான தண்டுப் பகுதியுடன் சேர்த்து இக் கட்டிடத்தின் மொத்த உயரம் 179 மீட்டர்கள் ஆகும். 37 மாடிகளைக் கொண்ட இத்தாச்சிக் கோபுரம், 25,980 சதுர மீட்டர்கள் (279,600 சதுர அடிகள்) வாடகைக்கு விடத்தக்க தளப்பரப்பை உள்ளடக்குகிறது. இதில் உள்ள நிறுவனங்களுள் இத்தாச்சி, அமெரிக்கன் எக்சுப்பிரசு ஆகியவ அடங்குகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இத்தாச்சி_கோபுரம்&oldid=1674141" இருந்து மீள்விக்கப்பட்டது