இத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இத்தா எண்ணிக்கை ,கணிப்பு ,(இடைக்கால காத்திருப்பு காலம்) என்பது சொல்லருத்தம் விவாகரத்துப் பெற்ற இஸ்லாமிய பெண் அல்லது கணவனை இழந்த இஸ்லாமிய பெண் குறிப்பிட்ட காலம் திருமணஞ் செய்யாமல் காத்திருக்கும் இடைக்காலத்தைக் குறிக்கின்றது. கணவன் இறந்துவிட்டாலோ, கணவனால் விவாகரத்துச் செய்யப்பட்டாலோ மனைவி கர்ப்பமாக இருக்கிறாளா, இல்லையா என்பதை அறிய இத்தகைய இடைக்கால காத்திருப்பு காலம் பயன்படுகிறது.[1]

இத்தாவின் கால அளவு[தொகு]

கர்ப்பிணியாயின்[தொகு]

இத்தா இருக்கும் பெண் கர்ப்பிணியாயின் அவள் குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை இத்தா இருக்க வேண்டும். கணவன் விவாகரத்து விட்டதற்காக இருக்கும் இத்தாவாக இருந்தாலும் சரி அல்லது கணவன் மரணித்ததற்காக இருக்கும் இத்தாவாக இருந்தாலும் சரி இதில் விதிவிலக்கில்லை.

இது குறித்து அல்குர்ஆனில் பின்வருமாறு கூறப்படுகின்றது;

“கர்ப்பிணிகளின் (இத்தாக்)காலம் அவர்கள் தமது குழந்தைகளைப் பெற்றுப் பிரசவிக்கும் வரையிலாகும்..” (65:3),(65:4)திரு குர்ஆன் வசனம்

கணவன் மரணித்த பெண்கள்[தொகு]

கணவன் மரணித்த பெண்கள் கர்ப்பிணிகள் அல்ல என்றால் 4 மாதங்களும், 10 நாட்களும் இத்தா இருக்க வேண்டும். இந்தக் காலம் பிறைக் கணக்கின் அடிப்படையில் கணக்கிடப்பட வேண்டும்.

இது குறித்து அல்குர்ஆனில் பின்வருமாறு கூறப்படுகின்றது;

“உங்களில் எவரேனும் மனைவியர்களை விட்ட நிலையில் மரணித்து விட்டால், அவர்கள் தமக்காக நான்கு மாதங்களும், பத்து நாட்களும் (“இத்தா” வழிபாட்டில்) காத்திருக்க வேண்டும். அவர்கள் தமது காத்திருக்கும் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் தமது விடயத்தில் தாமாக நல்ல முறையில் அவர்கள் நடந்துகொள்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்பவை பற்றி அல்லாஹ் நன்கறிந்தவன்.” (2:234)

கணவன் விவாகரத்து விட்டதற்காக[தொகு]

கணவன், மனைவியைத் விவாகரத்து சொன்னால் அந்த மனைவியின் நிலையைப் பொருத்து இத்தாவின் சட்டம் 3 விதங்களாக அமையும்.

உடலுறவுக்கு முன்னர் விவாகரத்து[தொகு]

திருமண ஒப்பந்தம் முடிந்து உடல் உறவில் ஈடுபடுவதற்கு முன்னர் கணவன், மனைவியைத் விவாகரத்து கூறினால் அந்தப் பெண் “இத்தா” இருக்கவேண்டிய அவசியம் இல்லை.

இது குறித்து அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது;

“நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கையாளர்களான பெண்களை நீங்கள் மணம் முடித்து, அவர்களை நீங்கள் தீண்டுவதற்கு முன் விவாகரத்துச் செய்து விட்டால், நீங்கள் கணக்கிடக் கூடிய “இத்தா” (எனும் காத்திருக்கும் காலம்) எதுவும் உங்களுக்காக அவர்கள் மீதில்லை. ஆகவே, அவர்களுக்கு வாழ்க்கை வசதிகளை வழங்கி, அவர்களை அழகிய முறையில் விட்டு விடுங்கள்!” (33:49)

விவாகரத்து விடப்பட்ட மாதவிடாய் ஏற்படக்கூடிய பெண்களின் இத்தா[தொகு]

விவாகரத்து விடப்பட்ட மாதவிடாய் ஏற்படக்கூடிய பெண்களின் இத்தா, இவர்களைப் பொருத்தவரை 3 மாதவிடாய் ஏற்படும் வரை அல்லது 3 மாதவிடாய் ஏற்பட்டுச் சுத்தமாகும் வரை “இத்தா” இருக்கவேண்டும்.

இது குறித்துப் பின்வருமாறு கூறுகின்றது;

“விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் தங்களுக்காக எதிர்பார்த்திருக்க வேண்டும்..” (2:228)

மாதவிடாய் நின்ற அல்லது ஏற்படாத பெண்கள்[தொகு]

இந்த நிலையில் இருக்கும் பெண்கள் பிறைக் கணக்கில் 3 மாதங்கள் “இத்தா” இருக்க வேண்டும்.

இது குறித்துப் பின்வரும் வசனம் பேசுகின்றது;

“உங்கள் பெண்களில் எவர்கள் மாதவிடாயை விட்டும் நம்பிக்கையிழந்து (அவர்களின் இத்தா விடயத்தில்) நீங்கள் சந்தேகங்கொண்டால் அவர்களுக்கும் (இதுவரை) மாதவிடாய் ஏற்படாதவர்களுக்குமுரிய இத்தாக்காலம் மூன்று மாதங்களாகும்..” (65:4)

மேற்கோள்கள்[தொகு]

  1. https://todayislamicsound.wordpress.com/category/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B3%E0%AE%A9/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

மூலம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இத்தா&oldid=2718628" இருந்து மீள்விக்கப்பட்டது