இதய வெளியேற்றவளவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இதய வெளியேற்றவளவு (இ.வெ) அல்லது இதய வெளியேற்றக் கொள்ளளவு என்பது ஒருநிமிடத்தில் இதயத்தால் வெளியேற்றப்படுகின்ற குருதியின் கொள்ளளவு ஆகும். இது வெவ்வேறு முறைகளில் அளக்கப்படுகிறது, எ.கா: இலீட்டர்/நிமிடம். இதய வெளியேற்றக் கொள்ளளவானது இடது, வலது கீழ் இதயவறைகளினால் இதயச் சுருக்கத்தின் போது வெளியற்றப்படும் குருதியின் மொத்தக் கொள்ளளவு ஆகும், இதய வெளியேற்றவளவு சராசரியாக ஓய்வான நிலையில் உள்ள ஒரு ஆணில் 5.6 இலீ./நிமி. மற்றும் பெண்ணில் 4.9 இலீ./நிமி. ஆகும். பொதுவாக இதய வெளியேற்றவளவு நிமிடத்துக்கு ஐந்து இலீட்டர் ஆகக் கருதப்படுகிறது.[1] துடிப்புக்கொள்ளளவினதும் இதயத்துடிப்பு வீதத்தினதும் பெருக்கம் இதய வெளியேற்றவளவைத் தரும்.

இ.வெ = துடிப்புக்கொள்ளளவு X இதயத்துடிப்பு வீதம்

மேற்கோள்கள்[தொகு]

  1. Guyton, Arthur C.; John E. (John Edward) (2006). Textbook Of Medical Physiology (11th ). Philadelphia: Elsevier Inc.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7216-0240-1. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இதய_வெளியேற்றவளவு&oldid=3157443" இருந்து மீள்விக்கப்பட்டது