இதயவறை அகச்சவ்வு அழற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இதயவறை அகச்சவ்வு அழற்சி
Endocarditis
குருதி வளர்சோதனையில் அகச்சவ்வு அழற்சி இல்லை என முடிவு வந்த நோயாளியின் இதய அடைப்பிதழில் பார்டொனெல்லா என்செலே நீள நுண்ணுயிரிகள். நுண்ணுயிரிகள் கரும் புண்ணாறிய வடுக்களாகத் தெரிகின்றன.
சிறப்புஇதயவியல், தொற்றுநோயியல்

இதயவறை அகச்சவ்வு அழற்சி (Endocarditis) இதயத்தின் மிக உட்புற அடுக்கான இதயவறை அகச்சவ்வில் ஏற்படும் அழற்சி. இது வழமையாக இதய அடைப்பிதழ்களையும் உள்ளடக்கும். தவிரவும் இந்த அழற்சி இதயவறை பிரிசுவர், இதயவாயிற் நாண்கள், இதய உள்ளுறை, அல்லது இதயத்தினுள் பொருத்தப்பட்டுள்ள கருவிகளின் மேற்புறப் பரப்பில் ஏற்படலாம். இதய அகச்சவ்வு அழற்சி புண்களாக காணப்படும். தாவரத் தொகுதி எனக் குறிப்பிடப்படும் இவை குருதிச் சிறுதட்டுக்கள்கள், பைபிரின், நுண் நுண்ணுயிர் கூட்டம், மிகக்குறைவான அழற்சி விளைவிக்கும் அணுக்களாலானவை.[1] கடிய இதயவறை அகச்சவு அழற்சி தொற்றில் இத்தாவரத் தொகுதியின் மையத்தில் நுண்மணிப்புத்து அணுக்கள் இருக்கும்; இவை நார்த்தன்மையுடனோ சுண்ணகக் கடினத்துடனோ இருக்கலாம்.[2]

இதயவறை அகச்சவ்வு அழற்சியை வெவ்வேறு விதங்களில் பகுக்கலாம். எளிமையான பகுப்பு காரணத்தைக் கொண்டமையும்: நுண்ணுயிரி நோயின் காரணமா அல்லவா என்பதைப் பொறுத்து தொற்று அல்லது தொற்றல்லாதது. எவ்வாறாயினும், நோய் கண்டறிதல் மின்னொலி இதய வரைவி, குருதி வளர்சோதனை போன்ற ஆய்வகச் சோதனைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது.

இதன் உணர்குறிகளாக சுரம், குளிர், வேர்த்தல், சோர்வு, பலவீனம், பசியின்மை, எடை இழப்பு, மண்ணீரல் உருப்பெருக்கம், சளிக்காய்ச்சலை ஒத்த உணர்வு, இதய முணுமுணுப்பு, இதயத் திறனிழப்பு, குருதி ஒழுக்கு (சருமத்தில் சிவப்பு புள்ளிகள்), ஓசுலரின் கணுக்கள் (கால்களிலும் கைகளிலும் காணப்படும் சருமத்தடி முடிச்சுகள்), ஜேன்வே காயங்கள் (உள்ளங்கையிலும் பாதங்களின் கீழும் காணப்படும் முடிச்சு காயங்கள்), மற்றும் ரோத்தின் புள்ளிகள் (கண்திரையில் இரத்தக்கசிவு).

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

வகைப்பாடு
வெளி இணைப்புகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இதயவறை_அகச்சவ்வு_அழற்சி&oldid=3580846" இலிருந்து மீள்விக்கப்பட்டது