உள்ளடக்கத்துக்குச் செல்

இதயக் குறுக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இதயத்தின் பின்பக்கமும் அடிப்பகுதியும். இதயத்தின் மிகப்பெரிய சிரை கரோனரி பள்ளத்தில் செல்கிறது; நடு இதயச் சிரை பின் இடைவெப்பறைப் பள்ளத்தில் செல்கிறது. இவ்விரு பள்ளங்களும் இதயக் குறுக்குப் பகுதியில் சந்திக்கின்றன

இதயக் குறுக்கு (Crux cordis) என்பது இதயத்தின் கீழ் பின்புறப் பகுதியில் உள்ள ஒரு சந்திப்புப் பகுதியாகும். இதயத்தின் குறுக்கு என்ற பெயராலும் இப்பகுதி அறியப்படுகிறது. இலத்தீன் மொழியில் "சிலுவை" என்று பொருள்படும் "கிரக்சு" என்பதிலிருந்து இச்சொல் பெறப்பட்டது. இதயத்தின் மேல் அறைகளையும் கீழ் அறைகளையும் பிரிக்கும் ஆழமான பள்ளமும் இதயத்தின் பின்புற மேற்பரப்பில், இடது மற்றும் வலது இதயக் கீழறைகளை பிரிக்கும் பள்ளமும் சந்திக்கும் இடமே இதயக் குறுக்கு எனப்படுகிறது.[1] இது அறுவை சிகிச்சையில் ஒரு முக்கியமான பகுதியாகும். ஏனெனில் ஏட்ரியோவெண்ட்ரிகுலர் மையத் தமனி என்ற ஒரு சிறிய ஆனால் இன்றியமையாத இரத்தக்குழாய், இதயக் குறுக்குக்கு அருகில் செல்கிறது.[2] இது வலது மற்றும் இடது கரோனரி தமனிகளின் குடல், இரத்த நாளங்கள் அல்லது பிற குழாய் போன்ற உறுப்புகளின் அறுவை சிகிச்சை இணைப்புப் புள்ளியாகும். இதய நோய்களைப் புரிந்துகொள்ள மருத்துவர்களுக்கு இது முக்கியமான பகுதியாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இதயக்_குறுக்கு&oldid=4700982" இலிருந்து மீள்விக்கப்பட்டது