இண்டைட்டு
Appearance
இண்டைட்டுIndite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | சல்பைடு கனிமம் தயோசிபைனல் தொகுதி சிபைனல் கட்டமைப்புத் தொகுதி |
வேதி வாய்பாடு | FeIn2S4 |
இனங்காணல் | |
நிறம் | கருப்பு |
படிக இயல்பு | பொதிவு, மணிகள் |
படிக அமைப்பு | கனசதுரம் |
மோவின் அளவுகோல் வலிமை | 5 |
மிளிர்வு | உலோகம் |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது |
ஒப்படர்த்தி | 4.67 |
மேற்கோள்கள் | [1][2][3] |
இண்டைட்டு (Indite) என்பது FeIn2S4. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இண்டியம்-இரும்பு சல்பைடு கனிமமான இது மிகவும் அரிய கனிமமாகும்.
நீர்வெப்பப் படிவுகளில் கேசிட்டரைட்டு கனிமத்திற்குப் பதிலாக இது தோன்றுகிறது. திசாலிண்டைட்டு, கேசிட்டரைட்டு, குவார்ட்சு போன்ற கனிமங்களுடன் இண்டைட்டு கனிமம் கலந்து காணப்படுகிறது [1][2]. உருசியாவின் தூரக்கிழக்கு பிரதேசம் கபரோவ்சுக் பிரதேசம், சீனாவின் லெசர் கின்கான் மலைத்தொடர், திசாலிண்டா வெள்ளீயப் படிவுகள் போன்ற பகுதிகளில் காணப்பட்டதாக 1963 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது [4].
பன்னாட்டு கனிமவியல் சங்கம் இண்டைட்டு கனிமத்தை Idt[5] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Handbook of Mineralogy
- ↑ 2.0 2.1 Webmineral data
- ↑ https://www.mineralienatlas.de/lexikon/index.php/MineralData?mineral=Indite Mineralienatlas
- ↑ Mindat
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
- Emsley, John. Nature's Building Blocks. Oxford, 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-850341-5
- Schwarz-Schampera, Ulrich; Herzig, Peter M. (2002-06-10). Indium: Geology, Mineralogy, and Economics. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-43135-0.