இண்டியம்(III) குளோரைடு
நீரிலி
| |
நான்கு நீரேற்று
| |
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
இண்டியம் குளோரைடு
இண்டியம் டிரைகுளோரைடு | |
| இனங்காட்டிகள் | |
| 10025-82-8 | |
| ChemSpider | 23197 |
| EC number | 233-043-0 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 24812 |
| வே.ந.வி.ப எண் | NL1400000 |
| |
| UNII | 31JB8MKF8Z |
| UN number | 3260 |
| பண்புகள் | |
| InCl3 | |
| வாய்ப்பாட்டு எடை | 221.17 g·mol−1 |
| தோற்றம் | வெண் செதில்கள் |
| அடர்த்தி | 3.46 கி/செ.மீ3 |
| உருகுநிலை | 586 °C (1,087 °F; 859 K) |
| கொதிநிலை | 800 °C (1,470 °F; 1,070 K) |
| 195 கி/100 மி.லி, வெப்பம் உமிழும் | |
| பிற கரைப்பான்கள்-இல் கரைதிறன் | டெட்ரா ஐதரோ பியூரான், எத்தனால் |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு, mS16 |
| புறவெளித் தொகுதி | C12/m1, No. 12 |
| தீங்குகள் | |
| முதன்மையான தீநிகழ்தகவுகள் | அரிக்கும் தன்மை கொண்டது |
| GHS pictograms | |
| GHS signal word | அபாயம்[1] |
| H302, H314[1] | |
| P260, P303+361+353, P305+351+338, P301+330+331, P405, P501[1] | |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய எதிர் மின்னயனிகள் | இண்டியம்(III) புளோரைடு இண்டியம்(III) புரோமைடு இண்டியம்(III) அயோடைடு |
| ஏனைய நேர் மின்அயனிகள் | போரான் முக்குளோரைடு அலுமினியம் குளோரைடு காலியம்(III) குளோரைடு தாலியம்(III) குளோரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இண்டியம்(III) குளோரைடு (Indium(III) chloride) என்பது InCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அறியப்பட்டுள்ள மூன்று இண்டியம் குளோரைடுகளில் இதுவும் ஒன்றாகும். இச்சேர்மம் நான்குநீரேற்றாக உருவாகிறது. வெள்ளை நிறத்தில் செதில்களாக இருக்கும் திடப்பொருளாகக் காணப்படுகிறது. கரிமத் தொகுப்பு வினைகளில் இலூயிசு அமிலமாகப் பயன்படுத்தப்படுகிறது. அதிக அளவில் கிடைக்கும் கரையக்கூடிய வழிப்பெறுதியாகவும் இண்டியம்(III) குளோரைடு கருதப்படுகிறது.[2] .
தயாரிப்பு
[தொகு]ஒப்பீட்டளவில் இண்டியம் மின்-நேர்மறை உலோகமாக இருப்பதால், குளோரினுடன் விரைவாக வினைபுரிந்து முக்குளோரைடை அளிக்கிறது. இண்டியம் முக்குளோரைடு மிகவும் நன்றாக கரையக்கூடியதாகும். நீர்மத்தன்மை கொண்டதாகவும் உள்ளது.[3] கலப்பு மெத்தனால்-பென்சீன் கரைசலில் ஒரு மின்வேதியியல் கலத்தைப் பயன்படுத்தி இண்டியம் முக்குளோரைடு தயாரிக்கப்படும் ஒரு தயாரிப்பு முறையும் பதிவாகியுள்ளது.[4]
கட்டமைப்பு
[தொகு]அலுமினியம் குளோரைடு, தாலியம் முக்குளோரைடு சேர்மங்களைப் போலவே இண்டியம் முக்குளோரைடும் அடுக்குக் கட்டமைப்பில் படிகமாகிறது. இக்கட்டமைப்பில் எண்முகியாக ஒருங்கிணைக்கப்பட்ட In(III) மையங்களின் அடுக்குகளைக் கொண்ட நெருக்கப் பொதிவுக் குளோரைடு ஏற்பாட்டைக் கொண்ட ஓர் அடுக்கு அமைப்பு காணப்படுகிறது.[5] இட்ரியம் முக்குளோரைடிலும் (YCl3) இதேவகையிலான கட்டமைப்பு காணப்படுகிறது.[6] இதற்கு நேர்மாறாக, GaCl3 சேர்மம் Ga2Cl6 சேர்மத்தைக் கொண்ட இருபடியாகப் படிகமாக்குகிறது. உருகிய InCl3 மின்சாரத்தை கடத்தும். அதேசமயம் AlCl3 மூலக்கூறு இருபடியான Al2Cl6 ஆக மாறும்போது அவ்வாறு செய்யாது.[7]
வினைகள்
[தொகு]இண்டியம்(III) குளோரைடு என்பது ஓர் இலூயிசு அமிலமாகும். மேலும் இது கொடையளிக்கும் ஈந்தணைவிகளான InCl3L, InCl3L2, InCl3L3 ஆகியவற்றுடன் சேர்ந்து அணைவுச் சேர்மங்களைக் கொடுக்கிறது. எடுத்துக்காட்டாக, குளோரைடு அயனியுடன் இது நான்முகி [InCl4]−, முக்கோண இருபிரமிடு [InCl5]2− மற்றும் எண்முகி [InCl6]3− ஆகியவற்றை உருவாக்குகிறது.[5]
டை எத்தில் ஈதர் கரைசலில், இண்டியம்(III) குளோரைடு இலித்தியம் ஐதரைடுடன் (LiH) வினைபுரிந்து இலித்தியம் டெட்ராஐதரோ இண்டேட்டு(III) Li[InH4] சேர்மத்தை உருவாக்குகிறது. இந்த நிலையற்ற கலவை 0 ° செல்சியசு வெப்பநிலைக்கு கீழே சிதைவடைகிறது.[8] மேலும் கரிமத் தொகுப்பில் தளத்தில் ஒரு குறைக்கும் முகவராகவும் இது வினைபுரிந்து,[9] InH3 இன் மூன்றாம் நிலை அமீன் மற்றும் பாசுபீன் அணைவுகளைக் கொடுக்கிறது.[10]
டை எத்தில் ஈதர் கரைசலில் உள்ள இண்டியம்(III) குளோரைடு சேர்மத்தை கிரிக்கனார்டு வினைப்பொருளான மெத்தில்மெக்னீசியம் அயோடைடு CH3MgI அல்லது மெத்தில் இலித்தியம் LiCH3 உடன் வினைபுரியச் செய்வதன் மூலம் மும்மெத்தில் இண்டியம் சேர்மத்தை உற்பத்தி செய்யலாம். மூவெத்தில் இண்டியத்தையும் இதே முறையில் தயாரிக்கலாம், ஆனால் கிரிக்கனார்டு வினைப்பொருள் EtMgBr இங்கு பயன்படுகிறது.[11]
- InCl3 + 3 LiMe → Me3In·OEt2 + 3 LiCl
- InCl3 + 3 MeMgI → Me3In·OEt2 + 3 MgClI
- InCl3 + 3 EtMgBr → Me3In·OEt2 + 3 MgBr2
இண்டியம்(III) குளோரைடு அதிக வெப்பநிலையில் இண்டியம் உலோகத்துடன் வினைபுரிந்து குறைந்த இணைதிறன் இண்டியம் குளோரைடுகளான In5Cl9, In2Cl3 மற்றும் InCl சேர்மத்தை உருவாக்குகிறது.[5]
வேதியியலில் வினையூக்கி
[தொகு]பிரீடல்-கிராப்ட்சு அசைலேற்றம், டையீல்சு-ஆல்டர் வினைகள் போன்ற கரிம வினைகளில் இண்டியம் குளோரைடு ஒரு இலூயிசு அமில வினையூக்கியாகும். இரண்டாவது வினைக்கு ஓர் எடுத்துக்காட்டாக, இந்த வினை அறை வெப்பநிலையில் தொடர்கிறது.[12]
அசிட்டோநைட்ரைல்-நீர் கரைப்பான் கலவையில் 1 மோல்% வினையூக்கியானது ஏற்றப்படுகிறது. பார்பிட்யூரிக் அமிலத்திற்கும் ஆல்டிகைடுக்கும் இடையில் நிகழும் நொவெனகல் ஒடுக்கம் முதல் படியாகும். தலைகீழ் எலக்ட்ரான்-நாட்ட டையீல்சு -ஆல்டர் வினை இரண்டாவது படியாகும். இவ்வினை N,N'-டைமெத்தில்-பார்பிட்யூரிக் அமிலம், பென்சால்டிகைடு மற்றும் எத்தில் வினைல் ஈதர் ஆகியவற்றுக்கு இடையிலான பல கூறு வினையாகும். வினையூக்கியுடன், அறிவிக்கப்பட்ட வேதியியல் மகசூல் 90% மற்றும் மாறுபக்க மாற்றியத்தின் சதவீதம் 70% ஆகும். வினையூக்கி சேர்க்கப்படாவிட்டால், 50% மாறுபக்க தயாரிப்புடன் மகசூல் 65% ஆகக் குறைகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "Indium(III) Chloride". American Elements. Retrieved May 15, 2019.
- ↑ Araki, S.; Hirashita, T. "Indium trichloride" in Encyclopedia of Reagents for Organic Synthesis (Ed: L. Paquette) 2004, J. Wiley & Sons, New York. எஆசு:10.1002/047084289X.
- ↑ Indium Trichloride
- ↑ Habeeb, J. J.; Tuck, D. G. "Electrochemical Synthesis of Indium(III) Complexes" Inorganic Syntheses, 1979, volume XIX, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-04542-X
- ↑ 5.0 5.1 5.2 Egon Wiberg, Arnold Frederick Holleman (2001) Inorganic Chemistry, Elsevier பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0123526515
- ↑ Wells, A.F. Structural Inorganic Chemistry, Oxford: Clarendon Press, 1984. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-855370-6.
- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. ISBN 0080379419.
- ↑ Anthony John Downs (1993). Chemistry of aluminium, gallium, indium, and thallium. Springer. ISBN 0-7514-0103-X.
- ↑ Main Group Metals in Organic Synthesis vol 1, ed. Hisashi Yamamoto, Koichiro Oshima, Wiley VCH, 2004, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3527305084
- ↑ The Group 13 Metals Aluminium, Gallium, Indium and Thallium: Chemical Patterns and Peculiarities, Simon Aldridge, Anthony J. Downs, Wiley, 2011, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-68191-6
- ↑ Main Group compounds in Inorganic Syntheses, vol 31, By Schultz, Neumayer, Marks; Ed., Alan H. Cowley, John Wiley & Sons, Inc., 1997, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0471152889
- ↑ An efficient synthesis of novel pyrano[2,3-d]- and furopyrano[2,3-d]pyrimidines via Indium-Catalyzed Multicomponent Domino Reaction Prajapati, D. Mukut Gohain, M. Beilstein Journal of Organic Chemistry 2006, 2:11 எஆசு:10.1186/1860-5397-2-11