இண்டிகிர்கா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இண்டிகிர்கா ஆறு ( உருசியம்: Индиги́рка  ; Yakut ) என்பது உருசியாவின் சகா குடியரசில் யானா ஆற்றுக்கும் கொலிமா ஆற்றுக்கும் இடையில் உள்ள ஒரு ஆறு ஆகும். இது 1,726 கிலோமீட்டர்கள் (1,072 mi) நீண்டது. அதன் படுகையின் பரப்பளவு 360,000 சதுர கிலோமீட்டர்கள் (140,000 sq mi) ஆகும்.

விளக்கம்[தொகு]

இது 251 கிலோமீட்டர் (156 மைல்) நீளமுள்ள துரா- யூரியாக் (கஸ்தாக், கல்கன் அல்லது கல்கன் என்றும் அழைக்கப்படுகிறது) ஆறு [1] மற்றும் 63 கிலோமீட்டர் (39 மைல்) நீளமான தாரின்-யூரியாக்,[2] ஆகிய இரு ஆறுகளின் சேர்கையால் உருவாகிறது. மேற்கண்ட இரண்டு ஆறுகளும் கல்கன் மலைத்தொடரின் வடக்கு சரிவுகளில் உருவாகின்றன .

இந்த ஆற்றின் உயரமான ஓட்டத்தில் ஓமியாகோன் பீட பூமியில் மிகக் தாழ்வான பகுதியில் வடமேற்கு நோக்கி பாய்கிறது. வடக்கு நோக்கி திரும்பும்போது, இது செர்ஸ்கி மலைத்தொடரின் பல துணைப்பகுதிகளின் வழியாக பாய்கிறது. இந்த ஆறானது செமல்கின் மலைத்தொடரைக் கடக்கும் இடத்தில் குறுகிய ஆழமான பள்ளத்தாக்கில் பாய்ந்து விரைவோட்டங்களை உருவாக்குகிறது. தென்கிழக்கில் இருந்து மோமா நதியுடன் இணைந்த இடத்தில், இண்டிகிர்கா மோமோ-செலென்யாக் தன் வேகத்தைக் குறைத்துக்கொள்கிறது. ஒரு பரந்த மலையிடை வடிநிலம் உருவாகியதும் இப்பகுதியில் ஆற்றின் நடுப்பகுதி தொடங்குகிறது, அங்கு அதன் பள்ளத்தாக்கு விரிவடைகிறது. வடக்கு நோக்கி திரும்பும்போது, இண்டிகிர்கா மோமா மலைத்தொடரை ஆழமாக வெட்டி வடகிழக்கு நோக்கி பாய்ந்து அபி லோலாண்ட் முழுவதும் சுற்றிலும் 500 மீட்டர் அகலமாக செல்கிறது. போலஸ்னி மலைத்தொடரின் கிழக்கு முனையிலும், உலகான்-சிஸ்டே மலைத்தொடரின் மேற்கு முனையிலும் உருவான கழுத்துக்கு இடையில் பாய்ந்தபின், அது யானா- இண்டிகிர்கா தாழ்நிலத்தின் குறுக்கே வடக்கே பாய்கிறது. அங்கிருந்து 130 கி.மீ தொலைவில் கிளைகளாகப் பிரிந்து 5.500 கிமீ² பரந்த வடிநிலத்தில் பாய்கிறது. இதன் ஆற்றுமுகத்துவாரம் கிழக்கு சைபீரியக் கடலின் கோலிமா விரிகுடாவில் உள்ளது .[3]

இண்டிகிர்கா அக்டோபரில் உறைந்து மே-சூன் வரை பனிபோர்த்தியபடி இருக்கும்.

துணை ஆறுகள்[தொகு]

முக்கிய துணை ஆறுகள் :

 • அல்லைகா நதி
 • பையோரையோலைஹோ
 • ஷான்ட்ரின் நதி
 • குய்துசுன் நதி
 • கியூண்டே நதி
 • எல்கி நதி
 • நேரா நதி ,
 • மோமா நதி
 • பத்யரிகா நதி
 • செலென்யாக் நதி
 • ட்ருஷினா நதி
 • உயண்டினா

துறைமுகங்கள், குடியிருப்புகள் மற்றும் பொருளாதாரம்[தொகு]

இந்த ஆற்றின் முக்கிய துறைமுகங்கள்:

 • கோனூ
 • துருஜினா
 • சோக்குர்திஷ்
 • தபோர் .

இண்டிகிர்கா ஆற்றுப் படுகையில் தங்க சேகரிப்பு தொழில் உள்ளது. தங்க சுரங்க மையமான உஸ்ட்-நேரா இந்த ஆற்றுப்பகுதியியின் மிகப்பெரிய குடியேற்றப்பகுதியாகும்.

இண்டிகிர்கா ஆறு பல்வேறு வகையான மீன்களைக் கொண்டுள்ளது. இந்த ஆற்றில் காணப்படும் வெண்டேஸ், சிர், முக்சன், இன்கொன்னு (நெல்மா), ஓமுல் போன்ற பல வெள்ளை மீன் இனங்கள் மிகவும் மதிப்புமிக்கவை ஆகும்.

வரலாறு[தொகு]

இண்டிகிர்கா ஆற்று முகத்துவாரத்தில் அமைந்துள்ள தனிமைப்படுத்தப்பட்ட கிராமமான ரஸ்கோய் உஸ்டே, உருசிய குடியேறியவர்களின் தனித்துவமான பாரம்பரிய கலாச்சாரத்திற்கு பெயர் பெற்றது, இந்த கிராமத்தில் வாழும் மக்களின் முன்னோர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அங்கு வந்து குடியேறியவர்கள். சில வரலாற்றாசிரியர்கள் 17 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் போமோர்ஸால் ரஸ்கோய் உஸ்டியே குடியேறினார் என்று ஊகித்துள்ளனர்.[4]

1638 இல் இவான் ரெப்ரோவ் என்பவர் இண்டிகிர்காவை அடைந்தார்.[5] 1636–42 ஆம் ஆண்டில் எலிசீ புசா இண்டிகிர்கா ஆற்றுப் பகுதிக்கும், தரைவழி பாதைக்கும் முன்னோடியாக இருந்தார். ஏறக்குறைய அதே நேரத்தில், போஸ்னிக் இவானோவ் கீழ் லீனாவின் துணை ஆற்றில் பயணித்து, வெர்கோயான்ஸ்க் மலைத்தொடரைக் கடந்து மேல் யானாவைக் கடந்து, பின்னர் செர்ஸ்கி மலைத்தொடரைக் கடந்து இண்டிகிர்கா வரை சென்றார். 1642 ஆம் ஆண்டில் மைக்கேல் ஸ்டாடுகின் லீனாவிலிருந்து இண்டிகிர்கா நிலப்பரப்பை அடைந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இண்டிகிர்கா_ஆறு&oldid=3583334" இருந்து மீள்விக்கப்பட்டது