உள்ளடக்கத்துக்குச் செல்

இண்டா தீவு

ஆள்கூறுகள்: 2°56′56″N 101°19′54″E / 2.94889°N 101.33167°E / 2.94889; 101.33167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இண்டா தீவு
2023-இல் இண்டா தீவு
இண்டா தீவு is located in மலேசியா
இண்டா தீவு
இண்டா தீவு
      கிள்ளான் தீவு       மலேசியா
புவியியல்
அமைவிடம்மலாக்கா நீரிணை
ஆள்கூறுகள்2°56′56″N 101°19′54″E / 2.94889°N 101.33167°E / 2.94889; 101.33167
பரப்பளவு2.70 km2 (1.04 sq mi)
நிர்வாகம்
மாநிலம்சிலாங்கூர்
மாவட்டம்கிள்ளான் மாவட்டம்
முக்கிம்கிள்ளான்
மக்கள்
மக்கள்தொகை20,000

இண்டா தீவு (மலாய்: Pulau Indah; ஆங்கிலம்: Indah Island; சீனம்: 英达岛) என்பது மலேசியா, சிலாங்கூர், கிள்ளான் மாவட்டம், கிள்ளான் துறைமுகத்திற்கு அருகில் மலாக்கா நீரிணை கடல்பகுதியில் அமைந்து உள்ள ஒரு தீவு. சதுப்பு நிலங்களால் (Mangrove Swamps) சூழப்பட்டுள்ள இந்தத் தீவு, சிலாங்கூர் மாநிலத்தில் மூன்றாவது பெரிய தீவும் ஆகும். அழகிய தீவு எனப் பெயர் பெற்ற இந்தத் தீவின் மக்கள் தொகை 20,000.[1]

1994-ஆம் ஆண்டு இண்டா தீவை கிள்ளான் துறைமுகத்துடன் இணைக்கும் செலாட் லூமுட் பாலம் (Selat Lumut Bridge)[2] கட்டி முடிக்கப்படுவதற்கு முன்பு இந்தத் தீவு, ஒராங் அசுலி மக்களைக் கொண்ட ஒரு மீன்பிடி கிராமத் தீவாக இருந்தது. பின்னர் மலேசியாவின் மிக முக்கியமான கிள்ளான் துறைமுகத்தின் மூன்று முக்கிய கப்பல் முனையங்களில் ஒன்றான மலேசிய மேற்கு துறைமுகம் (West Port) இங்கு கட்டப்பட்டது.[3]

பாலங்கள்

[தொகு]

இண்டா தீவை தீபகற்ப மலாயா பெருநிலப் பகுதியுடன் இணைக்கும் வகையில் இரு பாலங்கள் உள்ளன:

1. 181 புலாவ் இண்டா விரைவுச்சாலை (Pulau Indah Expressway) அல்லது மலேசிய கூட்டரசு சாலை 118 பாலம்; இது பண்டமாரான் நகரத்தை இணைக்கும் E5 சா ஆலாம் விரைவுச்சாலையின் நீட்டிப்பாகும்.

2. E26 கிள்ளான் பள்ளத்தாக்கு தெற்கு விரைவுச்சாலை (South Klang Valley Expressway) பாலம்; இந்தப் பாலம் இண்டா தீவை; கேரி தீவு மற்றும் தெலுக் பாங்லிமா காராங் நகரத்துடன் இணைக்கிறது.

பாலங்கள் கட்டி முடிப்பதற்கு முன்பு, கிள்ளான் துறைமுக முனையத்திற்கு, ஒரு மணி நேர படகு சேவை மட்டுமே இண்டா தீவுவாசிகளுக்கான ஒரே போக்குவரத்து முறையாக இருந்தது.

இணைப்புகள்

[தொகு]

2 தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடத்தில் இங்கு ஒரு மலாயா தொடருந்து (KTM) நிலையம் உள்ளது. இந்த நிலையம் புலாவ் இண்டா விரைவுச்சாலையை இணைக்கும் ஒரு பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த நிலையம் சரக்கு பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது; பயணிகளின் பயன்பாட்டிற்கு இன்னும் திறக்கப்படவில்லை.

கிராமங்கள்

[தொகு]

மலேசிய மேற்கு துறைமுகத்தைத் தவிர, இண்டா தீவில் புலாவ் இண்டா தொழில்துறைப் பூங்கா (Pulau Indah Industrial Park) (சிலாங்கூர் அலால் முனையம் உட்பட) உள்ளது.[4] லகுனா பார்க் (Laguna Park) எனும் ஒரு கடலோரப் பூங்கா; பண்டார் அர்மடா புத்ரா (Bandar Armada Putra) எனும் ஒரு வீட்டு மனைத் திட்டம்; மற்றும் மலேசிய கடற்படையின் தேசிய நீர்வரைவியல் மையமும் (Malaysian Navy's Pusat Hidrografi Nasional) இங்குள்ளன.[5]

இந்தத் தீவில் நான்கு உள்ளூர்க் கிராமங்கள் உள்ளன:

  • கம்போங் பெரிகி நெனாஸ் (Kampung Perigi Nenas)
  • கம்போங் சுங்கை பினாங்கு (Kampung Sungai Pinang)
  • கம்போங் சுங்கை கெம்போங் (Kampung Sungai Kembong)
  • கம்போங் தெலுக் நிப்பா (Kampung Teluk Nipah)

இண்டா தீவில் ஏராளமான சதுப்பு நிலக் காடுகள் உள்ளன. ஆனால், 1999-ஆம் ஆண்டு மேற்கு துறைமுகம் மற்றும் தொழில்துறை வளாகங்களின் வளர்ச்சியின் காரணமாக, பெரும்பாலான சதுப்புநிலங்கள் தற்போது காணாமல் போய்விட்டன.[6][7]

காட்சியகம்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "'Build it and they will come'". Business Times (Singapore). 9 May 1996. https://eresources.nlb.gov.sg/newspapers/digitised/article/biztimes19960509-1.2.39.12?qt=westport,%20klang&q=westport%20klang. 
  2. "It was a sleepy rural island with fishing villages, mangrove swamps, and some Orang Asli inhabitants before the Selat Lumut bridge connecting Pulau Indah to Port Klang was completed in 1994". myweekendplan.asia. 11 April 2023. Retrieved 31 October 2025.
  3. Kaur, Sharen (16 January 2020). "Growth in Pulau Indah". New Straits Times இம் மூலத்தில் இருந்து 28 April 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230428191426/https://www.nst.com.my/property/2020/01/557017/growth-pulau-indah. 
  4. "Pulau Indah Industrial Park". Central Spectrum (M) Sdn Bhd. Archived from the original on 21 October 2023. Retrieved 22 April 2024.
  5. "Pulau Indah's time to shine". EdgeProp. Archived from the original on 8 December 2023. Retrieved 22 April 2024.
  6. Mangrove and Coastal Environment of Selangor, Malaysia: Physical Features and Hydrography, Chong, V.C, King, B., and Wolanski, E.
  7. "Flora and Fauna of Klang Islands Mangrove Forest Reserves, Selangor, Malaysia, Norhayati, A., Shukor, M.N., Juliana, S., and Wan Juliana, W.A., Malaysian Journal of Science 28(3): 275 –288(2009)".

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இண்டா_தீவு&oldid=4386133" இலிருந்து மீள்விக்கப்பட்டது