இண்டங்கொடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இண்டங்கொடி என்பது வெப்ப மண்டலக் காடுகளில் காணப்படும் ஒரு வகை கொடி இனத்தைச் சேர்ந்த தாவரம். இதனை ஈங்கந்தண்டு எனவும் கிராம மக்கள் அழைக்கின்றனர்.

இண்டங்கொடியின் அமைப்பு[தொகு]

இது கொடிக்கும் குற்று மரத்திற்கும் இடைப்பட்ட அளவில் உள்ள தாவரமாகும். இது கொடி இனத்தைப் போல வேறு தாவரத்தைப் பற்றி ஏறுவதில்லை. தடித்த தண்டை உடையது. நேராக கொடிபோல் வளர்ந்து பின் புவியீர்ப்பின் விசையால் வளைந்துகீழ் நோக்கி வளைந்து விடும். ஆனால் அருகில் உயரம் குறைவான தாவரம் இருந்தால் அதன் மிது பரவி அந்த தாவரத்தையே மூடிவிடும். புதர் போல் வளரும். தண்டு முழுதும் முட்கள் நிறைந்திருக்கும். இலைகளிகளிலும் வரிசையாக முட்கள் இருக்கும். முட்கள் கீழ் நோக்கி வளைந்து இருக்கும். கூர்மையாகவும் வலிமையுடனும் இருக்கும். அந்த தாவரத்தின் பாகங்கள் நம்மீது பட்டால் முட்கள் கொக்கி போல் குத்தி பிடித்துக்கொள்ளும் அதிலிருந்து விடுபடுவது மிகவும் சிரமம். விலங்குகள் அதன் அருகில் செல்வதை தவிர்த்து விடும். வலிமை வாய்ந்த புலி கூட இதன் அருகில் செல்ல முடியாது என்பதால் இதனை புலி தடுக்கி கொடி என மக்கள்அழைக்கின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இண்டங்கொடி&oldid=1544381" இருந்து மீள்விக்கப்பட்டது