உள்ளடக்கத்துக்குச் செல்

இணைய வடிகட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இணைய வடிகட்டி

இணைய வடிகட்டி ( Internet Filter ) என்பது இணையப் பயனரால் அணுகக்கூடிய உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்தும் அல்லது வரையறுக்கும் ஒரு மென்பொருள் அல்லது அமைப்பு ஆகும்[1]. இது ஒரு வகையான இணையத் தணிக்கை முறையாகும். குறிப்பாக வலைத்தளங்கள் மின்னஞ்சல்கள் போன்ற வழிகள் மூலம் இணையத்தில் விநியோகிக்கப்படும் தகவல்களைக் கட்டுப்படுத்த இது பயன்படுகிறது. இத்தகைய கட்டுப்பாடுகளை ஒரு அரசாங்கம் நாடு முழுவதும் விதிக்கலாம், அல்லது இணையச் சேவை வழங்குநர் தன் வாடிக்கையாளர்களுக்கு விதிக்கலாம். வேலை அளிப்பவர் தன் பணியாளர்களுக்கு, பள்ளி தன் மாணவர்களுக்கு அல்லது பெற்றோர் தன் குழந்தைகளுக்காக கணினியில் அமைக்கலாம்.

இணைய வடிகட்டிகள் பல வகைகளில் காணப்படுகின்றன. உதாரணமாக, இணைய உலாவியில் நிறுவப்படும் நீட்டிப்புகள் (Browser Extensions), மின்னஞ்சல் வடிகட்டிகள், தனிப்பட்ட கணினியில் நிறுவப்படும் மென்பொருட்கள், இணைய சேவையகங்களில் அமைக்கப்படும் பாதுகாப்பு முறைகள் போன்றவை. சில வடிகட்டிகள் நேரத்தை கட்டுப்படுத்தும் வசதியையும் கொண்டுள்ளன. இது குழந்தைகள் இணையத்தை பயன்படுத்தும் நேரத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. நிறுவனங்கள் தங்கள் பணியாளர்கள் பணிநேரத்தில் தேவையற்ற தளங்களை அணுகாமல் இருக்க இதைப் பயன்படுத்துகின்றன.

சில நாடுகளில் அரசு மட்டுமே இணைய வடிகட்டிகளை கட்டாயமாக பயன்படுத்துகிறது. இணைய வடிகட்டிகள் சில நேரங்களில் தேவையற்ற தகவல்களை தவறாக தடுக்கும். இதை 'அதிக தடுப்பு' என அழைக்கப்படுகிறது. சில நேரங்களில் தேவையான தகவல்களும் தவறாக தடுப்படுகின்றன. இதனால் பயனர்கள் அந்த வடிகட்டிகளை மீற முயற்சிக்கிறார்கள். சில வடிகட்டிகள் மாறுபட்ட மதம், அரசியல் மற்றும் சமூக கருத்துகளை தடுக்கும். இது கருத்து சுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆபாசப் படங்கள், மத அல்லது அரசியல் ரீதியாக சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்கள் போன்றவற்றைத் தடுக்க பெரும்பாலும் இது பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் தீங்கிழைக்கும் மென்பொருட்கள் (Malware) கணினி நச்சுகள் (Viruses) போன்றவை ஊடுருவுவதைத் தடுக்கவும் பயன்படுகிறது.

இந்தத் தடுப்பு அமைப்புகளை தொழில்நுட்ப அறிவுள்ள தனிநபர்களால் மாற்று வழிகள் மெய்நிகர் தனியார் பிணையம் (VPN, Proxy Servers) மூலம் தவிர்க்க முடியும் என்பதால் எந்த ஒரு தீர்வும் முழுமையான பாதுகாப்பை அளிப்பதில்லை. இணைய வடிகட்டிகள் பாதுகாப்பு, ஒழுக்கம் மற்றும் சமூக நலனுக்காக பயன்படும் ஒரு தொழில்நுட்பம். ஆனால் இது கருத்து சுதந்திரம், தகவல் அணுகல் மற்றும் தனிநபர் உரிமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "இணைய வடிகட்டி ( Internet filter-Web archive )". Archived from the original on 2009-12-08. Retrieved 2021-11-01.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இணைய_வடிகட்டி&oldid=4567973" இலிருந்து மீள்விக்கப்பட்டது