இணைய நெறிமுறை முகவரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


இன்டர்நெட் புரோட்டோகால் (ஐபி) அட்ரஸ் எனப்படும் இணைய நெறிமுறை (இ. நெறி ) முகவரி என்பது ஓர் எண் அடையாளமாகும். குறிப்பாக கணினி வலையமைப்புகளில் இருக்கும் உபகரணங்களுக்கு இடையே இணைய நெறிமுறையைப் பயன்படுத்தும் போது இந்த எண் அடையாளம் அளிக்கப்படுகிறது.[1] இ.நெறி முகவரியானது வலையமைப்புகளில் இரண்டு முக்கிய செயல்பாடுகளைச் செய்கிறது: ஒன்று, புரவன் (host) அல்லது வலையமைப்பின் இடைமுகத்திற்கு எண் அடையாளம் அளிப்பது; மற்றொன்று, அந்த புரவன் அல்லது வலையமைப்பு அமைந்திருக்கும் இடத்தைக் குறிப்பிட்டு காட்டுவது.

TCP/IP நெறிமுறையை வடிவமைத்தவர்கள், இன்றும் பயன்படுத்தப்பட்டு வரும் 32-பிட் எண்ணை[1] இ.நெறி முகவரியாகவும் இந்த அமைப்புமுறையை இணைய நெறிமுறை பதிப்பு 4 அல்லது இ.நெறி ப4 என்றும் வரையறுத்தார்கள். ஆனால், அபாரமான இணைய வளர்ச்சியின் காரணமாகவும், இருக்கும் முகவரிகள் குறைந்து வருவதாலும், 128-பிட்களைப் பயன்படுத்தும் முகவரிக்காக ஒரு புதிய முகவரி அமைப்புமுறை (இ.நெறி ப6) என்பது 1995[2] அன்று உருவாக்கப்பட்டு, 1998-ல் RFC 2460 ஆல் தரமுறைப்படுத்தப்பட்டது.[3] இ.நெறி முகவரிகள் பைனரி எண்களாக சேமிக்கப்பட்டாலும் கூட (எடுத்துக்காட்டாக, 208.77.188.166 (இ.நெறி ப4 முறை) மற்றும் இ.நெறி ப6 முறையில் 2001:db8:0:1234:0:567:1:1), பொதுவாக அவை மனிதர்கள்-படிக்க கூடிய வகையில் தான் காட்டப்படுகின்றன.

இணைய நெறிமுறையானது வலையமைப்புகளுக்கு இடையில் தரவு பேக்கெட்களை ரௌட்டிங் செய்யும் பணியையும் மேற்கொள்கிறது. அத்துடன் ரௌட்டிங் அமைப்புமுறையில் அனுப்பும் மற்றும் பெறும் கணைகளின்(node) இடங்களையும் இ.நெறி முகவரிகள் குறிப்பிட்டு காட்டுகின்றன. இந்த தேவைக்காக, இ.நெறி முகவரியின் சில பிட்கள் ஒரு துணை-வலையமைப்பை (sub-network) உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பிட்களின் எண்கள் CIDR குறியீட்டில் குறிப்பிடப்படுகின்றன. இவை இ.நெறி முகவரியுடன் சேர்ந்து அனுப்பப்படும். எடுத்துக்காட்டாக, 208.77.188.166/24 .

தனிமுறை வலையமைப்புகளின் (Private Network) அபிவிருத்திகளால், இ.நெறி ப4 முகவரிகள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டுவிடக்கூடிய அபாயம் ஏற்பட்டதால், தனிப்பட்ட முகவரியின் (private address) ஒரு தொகுப்பு RFC 1918 இன் படி ஒதுக்கி வைக்கப்பட்டது. இந்த தனிமுறைப்பட்ட முகவரிகளை எந்த தனிமுறைப்பட்ட வலையமைப்புகளிலும் (private network) பயன்படுத்திக் கொள்ளலாம். இவை பெரும்பாலும் உலகளாவிய பொது இணையத்தில் வலையமைப்பு முகவரி மாற்றிகளுடன் பயன்படுத்தப்பட்டன.

இணையத்திற்காக ஒதுக்கப்படும் எண்களின் ஆணையம் (Internet Assigned Numbers Authority - IANA) சர்வதேச அளவில் இ.நெறி முகவரிகளை ஒதுக்கீடு செய்வதை நிர்வகிக்கிறது. வட்டார இணைய பதிவகங்களுக்கும், ஏனைய பிற நிறுவனங்களுக்கும் இ.நெறி முகவரி தொகுப்புகளை ஒதுக்கி அளிக்க, இந்த ஐஏஎன்ஏ (IANA) ஐந்து பிராந்திய இணையப் பதிவகங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இணைய நெறிமுறைப் பதிப்புகள்[தொகு]

தற்போது இணைய நெறிமுறையின் (IP) இரண்டு பதிப்புகள் பயன்பாட்டில் உள்ளன. அவையானவை: இ.நெறி பதிப்பு 4 மற்றும் இ.நெறி பதிப்பு 6. ஒவ்வொரு பதிப்பும் வெவ்வேறு வகையில் ஒரு இ.நெறி முகவரியை வரையறுக்கிறது. இ.நெறி முகவரி என்பது பொதுவாக இ.நெறி ப4 ஆல் வரையறுக்கப்பட்ட முகவரிகளைத் தான் இன்றும் குறிப்பிடுகிறது.

இணைய நெறிமுறைப் பதிப்பு 4 முகவரிகள்[தொகு]

இ.நெறி ப4 32-பிட் (4-பைட்) முகவரிகளைப் பயன்படுத்துகிறது. இதனால் 4,294,967,296 (232) தனித்தனி முகவரிகள் மட்டுமே சாத்தியமாகும் என்பதால் முகவரிகளின் எண்ணிக்கை குறைந்துவிடுகிறது. தனிமுறை வலையமைப்புகள் (~18 மில்லியன் முகவரிகள்) அல்லது மல்டிகேஸ்ட் முகவரிகள் (~270 மில்லியன் முகவரிகள்) போன்ற சிறப்பு பயன்பாடுகளுக்கான சில முகவரிகளை இ.நெறி ப4 இல் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதனால் சாதாரண பயனர்களுக்கு ஒதுக்கப்படும் முகவரிகளின் எண்ணிக்கையையும், ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் முகவரிகளின் எண்ணிக்கையையும் இது கணிசமாக குறைத்துவிட்டிருக்கிறது. இதனால் இ.நெறி ப4(IPV4) முகவரி பற்றாக்குறை தவிர்க்க முடியாததாக உள்ளது. முன்னிற்கும் இந்த பற்றாக்குறை தான் இ.நெறி ப6 பதிப்பு அபிவிருத்திக்கான முதன்மை உந்துசக்தியாக இருந்தது. இது உலகளவில் பல்வேறு அபிவிருத்தி நிலைகளில் இருக்கிறது என்பதுடன் இ.நெறி ப4 பதிப்பிற்கு மாற்றாகவும், தொடர்ச்சியான இணைய விரிவாக்கத்திற்கும் இது மட்டுமே ஒரே மூல ஆதாரமாக இருக்கிறது.

இ.நெறி ப4 முகவரிகள் பொதுவாக புள்ளி-தசம குறியீட்டில் (புள்ளிகளால் பிரிக்கப்பட்ட, 0-த்தில் இருந்த 255 வரையிலான நான்கு எண்கள், எடுத்துக்காட்டாக, 208.77.188.166) குறிக்கப்படும். ஒவ்வொரு பாகமும் முகவரியின் 8 பிட்களைக் குறிப்பிட்டு காட்டும். ஆகவே இது ஓர் ஆக்டட் (octet) என்று அழைக்கப்படுகிறது. வெகுசில இடங்களில் தொழில்நுட்பரீதியாக, இ.நெறி ப4 முகவரிகள் ஹெக்சாடெசிமலிலும், ஆக்டலிலும் அல்லது பைனரி குறியீடுகளாகவும் குறிப்பிட்டு காட்டப்படும்.

இ.நெறி ப4 சப்நெட்டிங்[தொகு]

இணைய நெறிமுறை அபிவிருத்தி அடைந்து வந்த ஆரம்ப காலகட்டத்தில்,[1] வலையமைப்பு நிர்வாகிகள் ஓர் இ.நெறி முகவரியை வலையமைப்பு எண் பகுதி மற்றும் புரவன் எண் பகுதி என்று இரண்டு பாகங்களாக வகைப்படுத்தினார்கள். ஒரு முகவரியில் இருக்கும் உயர்நிலை ஆக்டெட்களை (முதல் எட்டு பிட்டுகள்) வலையமைப்பு எண்களுக்காக வகைப்படுத்தினார்கள். மீதமிருந்த பிட்கள் ரெஸ்ட் பீல்டு அல்லது ஹோஸ்டு ஐடென்டிபியர் என்று அழைக்கப்பட்டன. அவை ஒரு வலையமைப்பிற்குள் இருக்கும் புரவன்களைக் கணக்கில் கொண்டுவர பயன்படுத்தப்பட்டன. ஒரேயொரு வலையமைப்பு எண்ணால் வடிவமைக்கப்பட்ட வலையமைப்புகளிலேயே உள்ளார்ந்து கூடுதல் வலையமைப்புகள் உருவான போது இந்த முறை போதுமானதாக அமையவில்லை. 1981-ல், இணைய முகவரி தொழில்நுட்ப குறிப்புகள், கிளாஸ் வகையிலான வலையமைப்பு கட்டமைப்பின் அறிமுகத்துடன் மாற்றியமைக்கப்பட்டன.[4]

கிளாஸ் வகையிலான வலையமைப்பு வடிவமானது, பெருமளவிற்கு தனிமுறை வலையமைப்புகளை அமைக்க உதவியது. ஓர் இ.நெறி முகவரியின் முதல் முக்கிய ஆக்டெட்களில் முதல் மூன்று பிட்கள் முகவரியின் கிளாஸை வரையறை செய்தன. சர்வதேச ஒரேதர (Universal unicast) முகவரி பயன்பாட்டிற்காக மூன்று கிளாஸ்கள் (, பி மற்றும் சி) வரையறுக்கப்பட்டன. பெறப்பட்ட கிளாஸிற்கு ஏற்ப, மொத்த முகவரியின் ஆக்டெட் எல்லைக்குள் வலையமைப்பின் அடையாளம் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு கிளாஸூம் வலையமைப்பு அடையாளம்காட்டியில் வெற்றிகரமாக கூடுதல் ஆக்டெட்களைப் பயன்படுத்தியது. இதனால் உயர்நிலை கிளாஸ்களில் (பி மற்றும் சி) புரவன்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான சாத்தியக்கூறு ஏற்பட்டது.

பின்வரும் அட்டவணை இப்போதிருக்கும் இந்த முழுமையான சிஸ்டத்தைப் பற்றிய ஒரு பார்வையை அளிக்கும்.

வரலாற்றுரீதியான கிளாஸ்வகையிலான வலையமைப்பு கட்டமைப்பு
வகுப்பு பைனரியில் இருக்கும் முதல் ஆக்டெட் முதல் ஆக்டெட்டின் வரிசை வலையமைப்பு அடையாளம் புரவன் அடையாளம் வலையமைப்புகளின் எண்ணிக்கை முகவரிகளின் எண்ணிக்கை
0XXXXXXX 0 - 127 a b.c.d 27 = 128 224 = 16,777,216
பி 10XXXXXX 128 - 191 a.b c.d 214 = 16,384 216 = 65,536
சி 110XXXXX 192 - 223 a.b.c d 221 = 2,097,152 28 = 256

'சப்நெட்வொர்க்' மற்றும் 'கிளாஸ் வகையிலான வலையமைப்பு' என்ற கட்டுரைகள் இந்த வடிவத்தின் விபரங்களை விளக்கமாக விவரிக்கும்.

கிளாஸ் வகையிலான வலையமைப்பு வடிவம் வெற்றிகரமான அபிவிருத்தி நிலையில் இருந்தாலும் கூட, இணையத்தின் விரைவான வளர்ச்சிக்கு இணையாக அது போதுமானதாக இல்லை. மேலும் இ.நெறி முகவரி தொகுப்புகளை ஒதுக்குவதற்காகவும், இ.நெறி ப4 முகவரிகள் பயன்படுத்தி ரௌட்டிங் நெறிமுறை பேக்கெட்களுக்கான புதிய விதிமுறைகளுக்காகவும் Classless Inter-Domain Routing (CIDR) உருவாக்கப்பட்ட போது இது கைவிடப்பட்டது. முன்சேர்க்கைகளின் நீள அளவில் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல், ஒதுக்கீட்டை அனுமதிப்பதற்காகவும், ரௌட்டிங் செய்வதற்காகவும் CIDR ஆனது variable-length subnet masking அடிப்படையில் அமைக்கப்பட்டது.

இன்று, கிளாஸ்வகையிலான வலையமைப்பு திட்டங்களின் எச்சசொச்சங்கள் குறைந்தளவு வசதிகளுடன் மட்டும் தான் செயல்பாட்டில் இருக்கின்றன. அதாவது இது சில மென்பொருள் மற்றும் வன்பொருள் வலையமைப்பு பாகங்களில் முன்னிருப்பு உள்ளமைவு அளபுருவாக (default configuration parameter) மட்டுமே இருக்கின்றன.

இ.நெறி ப4 தனிமுறை முகவரிகள்[தொகு]

ஆரம்பகால வலையமைப்பு வடிவமானது, அதாவது அனைத்து இணைய புரவன்களோடும் உலகளாவிய அளவில் ஒருமுனையில் இருந்து மறுமுனைக்கு இணைப்பு கொடுப்பது குறித்து ஆராயப்பட்ட போது, ஒரு குறிப்பிட்ட கணினி அல்லது சாதனத்திற்கு பிரத்யேக முகவரிகள் அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால், தனிமுறை வலையமைப்புகள் வளர்ச்சி அடைந்த போதும், பொதுவான முகவரிகளின் எண்ணிக்கைக் குறைந்த போதும் (ஏனென்றால் இ.நெறி ப4 முகவரி தீர்ந்துகொண்டிருந்தது) இவ்வாறு செய்வது எல்லா காலத்திற்கும் சாத்தியப்படாது என்று கண்டறியப்பட்டது.

TCP/IP வழியாக ஒன்றோடொன்று தொடர்பு கொள்ளும் தொழிற்துறை கணினிகள் போன்ற, இணையத்தோடு இணைக்கப்படாத கணினிகளுக்கு உலகளாவிய-பிரத்யேக இ.நெறி முகவரிகள் தேவைப்படுவதில்லை. தனிமுறை வலையமைப்புகளுக்காக இ.நெறி ப4 முகவரிகளின் மூன்று வரிசைகள் RFC 1918 இல் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த முகவரிகள் இணையத்தில் அனுப்பப்படுவதில்லை. இதனால் இவற்றின் தேவை இ.நெறி முகவரி பதிவகத்தோடு ஒருங்கிணைய வேண்டிய அவசியமில்லாமல் போய்விடுகிறது.

இன்று, இ.நெறி முகவரிகளின் தேவைப்பாடு அதிகரித்திருக்கும் நிலையில், இதுபோன்ற தனிமுறை வலையமைப்புகளானது வலையமைப்பு முகவரி மாற்றி (network address translation) மூலமாக இணையத்தோடு இணைக்கப்படுகின்றன.

IANA-க்காக ஒதுக்கப்பட்ட தனிமுறை இ.நெறி ப4 வலையமைப்பு வரிசைகள்
தொடக்கம் முடிவு முகவரிகளின் எண்ணிக்கை
24-பிட் தொகுப்பு (/8 பிற்சேர்க்கை, 1 x ஏ) 10.0.0.0 10.255.255.255 16,777,216
20-பிட் தொகுப்பு (/12 பிற்சேர்க்கை, 16 x பி) 172.16.0.0 172.31.255.255 1,048,576
16-பிட் தொகுப்பு (/16 பிற்சேர்க்கை, 256 x சி) 192.168.0.0 192.168.255.255 65,536

எந்த பயனரும் ஒதுக்கப்பட்ட எந்த தொகுப்பையும் பயன்படுத்தலாம். அடிப்படையில், ஒரு வலையமைப்பு நிர்வாகி ஒரு தொகுப்பைத் துணை-பிணையத்தில் பிரித்தளிப்பார்; எடுத்துக்காட்டாக, வீட்டு பயன்பாட்டு ரௌட்டர்கள் பல தானாகவே 192.168.0.0 - 192.168.0.255 (192.168.0.0/24) என்ற ஒரு முன்னிருப்பு முகவரி வரிசையைப் (default address range) பயன்படுத்தும்.

இ.நெறி ப4 முகவரி பற்றாக்குறை[தொகு]

இ.நெறி பதிப்பு 4 முகவரிகளின் எண்ணிக்கை விரைவாக தீர்ந்து வருகிறது. அதாவது உத்தியோகப்பூர்வமாக ஒதுக்ககூடிய முகவரி தொகுப்புகள் தீர்ந்து வருகின்றன.

இ.நெறி பதிப்பு 6 முகவரிகள்[தொகு]

மாற்றும் நுட்பங்கள் இருந்த போதினும் கூட, இ.நெறி ப4 முகவரி இடம் விரைவாக தீர்ந்து வந்ததால், இணையத்தின் முகவரி ஒதுக்கும் திறனை விரிவாக்குவதற்காக புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறிய வேண்டிய அவசியத்தை இணைய பொறியியல் பணிக்குழுவிற்கு (Internet Engineering Task Force - IETF) ஏற்படுத்தியது. இணைய நெறிமுறையையே மாற்றி அமைப்பது தான் நிரந்தர தீர்வாக இருக்கும் என்று தீர்மானிக்கப்பட்டது. இணைய நெறிமுறைக்கான இந்த புதிய தலைமுறை, இணையத்தில் இ.நெறி ப4-க்கு மாற்றாக கொண்டு வர திட்டமிடப்பட்டது. இதற்கு 1995-ல் இணைய நெறிமுறை பதிப்பு 6 என்று பெயரிடப்பட்டது.[2][3] முகவரி அளவு 32 பிட்டில் இருந்து 128 பிட்டுகளாக அல்லது 16 ஆக்டெட்களாக அதிகரிக்கப்பட்டது. இணைய முகவரி தொகுப்புகளின் ஒரு சிறப்பார்ந்த ஒதுக்கீட்டுடன் இது, எதிர்வரும் காலத்திற்கு போதுமானதாக கணிக்கப்படிருக்கிறது. கணக்கீட்டளவில், இந்த புதிய முகவரி இடமானது அதிகபட்சம் 2128 அல்லது சுமார் 3.403 x 1038 பிரத்யேக முகவரிகளை அளிக்கிறது.

போதுமான அளவிற்கு தரமான முகவரிகளை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தை மட்டுமே புதிய வடிவம் அடிப்படையாக கொண்டிருக்கவில்லை. மாறாக ரௌட்டிங் நோட்களில் சப்நெட் ரௌட்டிங் பிற்சேர்க்கைகளின் போதுமான வேகத்தை அனுமதிக்கும் வகையிலும் அமைந்திருக்கிறது. இதன் பயனாக, ரௌட்டிங் அட்டவணை சிறியதாகிவிடும், மேலும் 264 புரவன்களின் ஒரு துணை-வலையமைப்பு குறைந்தபட்சம் சாத்தியப்படும் தனிமுறை ஒதுக்கீடாக அமையும். இது மொத்த இ.நெறி ப4 இணையத்தின் அளவை விட இருமடங்காகும். இந்த அளவுகளில், எந்த இ.நெறி ப6 வலையமைப்பு பிரிவிலும் உண்மையான முகவரி பயன்பாடு விகிதங்கள் மிகவும் குறைவாக இருக்கும். இந்த புதிய வடிவமானது, ஒரு வலையமைப்பில் வெளிப்புற தரவு பரிமாற்றத்தை ரௌட்டிங் செய்வதற்கான முகவரி ஒதுக்கி அளிக்கும் பிற்சேர்க்கையைப் பயன்படுத்துவதில் இருந்து, ஒரு வலையமைப்பு பிரிவின் முகவரி ஒதுக்கி அளிக்கும் உள்கட்டமைப்பைப் பிரிக்கும் வாய்ப்பையும் (அதாவது, இது அப்பிரிவில் இருக்கும் இடத்தின் உள்நிலை நிர்வாகம்) அளிக்கிறது. உள்நிலை மறுவடிவமைப்போ (redesign), மறு எண்ணிடுதலோ (renumbering) இல்லாமல் ரௌட்டிங் கொள்கையை மாற்றி, உலகளாவிய இணைப்பிற்காக மொத்த வலையமைப்புகளின் ரௌட்டிங் பிற்சேர்க்கையையும் தானாகவே மாற்றும் வசதிகளையும் இ.நெறி ப6 கொண்டிருக்கிறது.

இ.நெறி ப6 முகவரிகளின் பெரும் எண்ணிக்கை, குறிப்பிட்ட தேவைகளுக்காக நிறைய முகவரி தொகுப்புகளை ஒதுக்க அனுமதிக்கிறது. இவ்வாறான பிரத்யேக ஒதுக்கீடு, துல்லியமான ரௌட்டிங்கை ஏற்படுத்துவதில் உதவும். நிறைய முகவரி இடம் இருப்பதால், CIDR பயன்படுத்தப்பட்ட சிக்கலான முகவரி மாற்றும் முறைகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியமும் இருப்பதில்லை.

தற்போதைய அனைத்து modern மேஜை கணினி மற்றும் நிறுவன சர்வர் இயங்குத்தளங்களும் இ.நெறி ப6 நெறிமுறைக்கு பொருத்தமாகவே இருக்கின்றன. ஆனால் வீட்டு வலையமைப்பு ரௌட்டர்கள், இணைய நெறிமுறையில் குரல்சேவை மற்றும் மல்டிமீடியா உபகரணங்கள் மற்றும் வலையமைப்பு உபகரணங்கள் போன்ற பிற சாதனங்களில் இன்னும் இது பரவலாக பயன்பாட்டிற்கு வரவில்லை.

ஒரு இ.நெறி ப6 முகவரிக்கான எடுத்துக்காட்டு: 2001:0db8:85a3:08d3:1319:8a2e:0370:7334

இ.நெறி ப6 தனிமுறை முகவரிகள்[தொகு]

தனிமுறை அல்லது உள் வலையமைப்புகளுக்காக இ.நெறி ப4 முகவரிகளை ஒதுக்குவது போலவே, தனிமுறை முகவரிகளுக்காக இ.நெறி ப6 இல் முகவரிகளின் தொகுப்புகள் இருக்கின்றன. இ.நெறி ப6 இல், இவை பிரத்யேக உள் முகவரிகள் (unique local addresses - ULA) என்று குறிப்பிடப்படுகின்றன. RFC 4193, இந்த பிளாக்கிற்காக ரௌட்டிங் பிற்சேர்க்கையான fc00::/7 என்பதை ஒதுக்கி அளிக்கிறது. நிறுவப்பட்ட வெவ்வேறு கொள்கைகளுடன் இரண்டு /8 முகவரி தொகுப்புகளாக இது பிரிக்கப்படுகிறது. இந்த முகவரிகள் ஒரு 40-பிட் போலி-வரிசை எண்ணை உள்ளடக்கி இருக்கும். இது வலைத்தளங்கள் எதிர்பாராமல் ஒன்றோடொன்று பிணைந்து கொண்டாலோ அல்லது பேக்கெட்டுகள் தவறுதலாக திருப்பிவிடப்பட்டாலோ முகவரி முரண்பாடுகளின் அபாயத்தைக் குறைக்கிறது.

இந்த நோக்கத்திற்காக (fec0::) முந்தைய வடிவமைப்புகள் (RFC 3513) வெவ்வேறு முகவரி தொகுப்புகளைப் பயன்படுத்தின. ஆனால், இவற்றில் வலைத்தளங்கள் எவற்றால் உருவாக்கப்படுகின்றன என்ற வரையறை தெளிவில்லாமல் இருந்தது. மிகவும் சிக்கலாக வரையறுக்கப்பட்ட முகவரி அளிப்பு கொள்கை (addressing policy) ரௌட்டிங்கில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கியது. முகவரி வரிசை அளவு கைவிடப்பட்டது என்பதுடன், புதிய அமைப்புமுறைகளிலும் அவை மேற்கொண்டு பயன்படுத்தப்படவில்லை.

லிங்க்-லோக்கல் முகவரிகள் என்றழைக்கப்பட்ட, fe80: என்பதில் தொடங்கும் முகவரிகள் லோக்கல் லிங்க் பகுதியில் மட்டும் ஒதுக்கப்பட்டது. பொதுவாக ஒவ்வொரு வலையமைப்பு இடைமுகத்திற்காகவும் இயங்குதளங்களால் தானாகவே முகவரிகள் தோற்றுவிக்கப்பட்டன. இது எந்த இ.நெறி ப6 புரவனிற்கும் உடனடியாக தானாகவே வலையமைப்பு இணைப்பை அளிக்கிறது. ஒரு பொதுவான ஹப் அல்லது சுவிட்சில் பல்வேறு புரவன்கள் இணைக்கப்பட்டிருந்தால், அவற்றின் லிங்க்-லோக்கல் இ.நெறி ப6 முகவரி வழியாக அவை ஓர் உடனடி தொடர்பு பாதையைப் பெற்றிருக்கும். இந்த வசதி பிரத்யேகமாக இ.நெறி ப6 வலையமைப்பு நிர்வாகத்தின் கீழ் அடுக்குகளில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது பெரும்பாலான பயனர்களுக்கு புலனாகாமலும் இருக்கும் (cf. Neighbor Discovery Protocol).

தனிமுறை முகவரி பிற்சேர்க்கைகள் எதுவுமே பொதுவாக பயன்படுத்தப்படும் இணையத்தில் அனுப்பப்படாது.

இ.நெறி துணை-வலையமைப்புகள்[தொகு]

துணை-வலையமைப்பு அமைக்கும் நுட்பம் இ.நெறி ப4 மற்றும் இ.நெறி ப6 ஆகிய இரண்டிலும் செயல்படும். இ.நெறி முகவரிகள் இரண்டு பாகங்களாக பிரிக்கப்படுகிறது: அதாவது வலையமைப்பு முகவரி பிரிவு மற்றும் புரவன் அடையாளம் காணும் பிரிவு. சப்நெட் மாஸ்க் (இ.நெறி ப4-ல் மட்டும்) அல்லது CIDR பிற்சேர்க்கையானது, இ.நெறி முகவரி எவ்வாறு வலையமைப்பு மற்றும் புரவன் பாகங்களாக பிரிக்கப்படுகிறது என்பதை வரையறுக்கிறது.

சப்நெட் மாஸ்க் என்ற இந்த வார்த்தை இ.நெறி ப4-ல் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. CIDR நுட்பத்தையும், குறிமான முறையையும் இரண்டு இ.நெறி பதிப்புகளுமே பயன்படுத்துகின்றன. இதில், வலையமைப்பு பாகத்தைக் குறிப்பதற்காக, இ.நெறி முகவரியானது, அதை தொடர்ந்து ஒரு முன்சாய்வு கோட்டையும், பிட்களின் எண்ணிக்கையையும் கொண்டிருக்கும். இது ரௌட்டிங் பிற்சேர்க்கை என்று அழைக்கப்படுகிறது. அதே இ.நெறி முகவரிக்கான CIDR குறிமான முறையும், சப்நெட்டும் 192.0.2.1/24 என்று இருக்கும். ஏனென்றால் இ.நெறி முகவரியின் முதல் 24 பிட்கள் வலையமைப்பு மற்றும் சப்நெட்டைக் குறித்து காட்டும்.

நிலையான, ஆற்றல்மிகு இ.நெறி முகவரிகள்[தொகு]

ஒரு கணினியானது ஒவ்வொரு முறை தொடங்கப்படும் போதும் ஒரே இ.நெறி முகவரியைப் பயன்படுத்தும்படி உள்ளமைப்பு செய்யப்பட்டிருந்தால், அது ஒரு நிலையான இ.நெறி முகவரி என்று அழைக்கப்படும். மாறாக, கணினியின் இ.நெறி முகவரி தானாகவே அமைக்கப்படும் வகையில் இருந்தால், அது மாறும் இ.நெறி முகவரி என்று அழைக்கப்படுகிறது.

ஒதுக்கும் முறை[தொகு]

ஒரு கணினிக்கான நிலையான முகவரிகள், வலையமைப்பு நிர்வாகியால் வழங்கப்படும். இதற்கான வழிமுறையானது பயன்படுத்தப்படும் பணித்தளத்தைப் பொறுத்து மாறுபடும். இது மாறும் இ.நெறி முகவரிகளில் இருந்து வேறுபட்டது. இவை கணினி இடைமுகத்தால் அல்லது புரவன் மென்பொருளினால் தானாகவே அளிக்கப்படும் அல்லது டைனமிக் ஹோஸ்டு கான்பிக்ரேஷன் நெறிமுறையைப் (Dynamim Host Configuration Protocol - DHCP) பயன்படுத்தி வழங்கனால் வழங்கப்படும். இ.நெறி முகவரிகள் டிஎச்சிபி நுட்பத்தில் வழங்கப்பட்டாலும் கூட, அவை நீண்ட காலத்திற்கு ஒரேமாதிரியாக தான் இருக்கும். பிறகு அவை தானாகவே எப்போதாவது மாறிவிடும். சில சமயங்களில், ஒரு வலையமைப்பு நிர்வாகியானவர் மாறிமாறி வழங்கப்படும் நிலையான இ.நெறி முகவரிகளைக் கூட நிறுவுவார். இதுபோன்ற சமயங்களில், ஒரு டிஎச்சிபி வழங்கன் பயன்படுத்தப்படும். ஆனால் ஒரு குறிப்பிட்ட கணினிக்கு ஒரே இ.நெறி முகவரியை எப்போதும் அளிக்க சிறப்பாக உள்ளமைப்பு செய்யப்படும். இது வலையமைப்பில் இருக்கும் ஒவ்வொரு கணினியாக சென்று கைகளால் முறைப்படி மாற்ற வேண்டிய தொந்தரவை ஏற்படுத்தாமல், ஒரேயிடத்தில் இருந்து நிலையான இ.நெறி முகவரிகளை உள்ளமைப்பு செய்ய அனுமதிக்கிறது.

நிலையான அல்லது நிலையுள்ள (DHCP) முகவரி உள்ளமைவுகள் பழுதுபட்டாலோ அல்லது அது அமைக்கப்படாமல் இருந்தாலோ, ஜீரோகான்ப் போன்ற நிலையில்லா தானியங்கி உள்ளமைவு முறைகளைப் பயன்படுத்தி வலையமைப்பு இடைமுகத்திற்கு ஓர் இ.நெறி முகவரி வழங்கப்படுகிறது.

ஆற்றல்மிகு முகவரி வழங்கலின் பயன்கள்[தொகு]

மாறும் இ.நெறி முகவரிகளானது பெரும்பாலும் டைனமிக் ஹோஸ்டு கான்பிக்ரேஷன் நெறிமுறை (DHCP) வழங்கன்களைப் பயன்படுத்தி உள்நிலை பகுதி வலையமைப்புகள் (LAN) மற்றும் அகல்கற்றை வலையமைப்புகளில் நிறுவப்படுகிறது. இவை வலையமைப்பில் இருக்கும் ஒவ்வொரு சாதனத்திற்கும் குறிப்பிட்ட நிலையான முகவரிகளை ஒதுக்கும் நிர்வாகியின் வேலையைத் தவிர்ப்பதால் இது பயன்படுத்தப்படுகிறது. ஒரு வலையமைப்பில் இருக்கும் பல உபகரணங்களில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சில உபகரணங்கள் மட்டுமே இணையத்தில் இணைந்திருந்தால், அந்நிலையில் குறைந்த எண்ணிக்கையிலான முகவரிகளைப் பகிர்ந்து கொள்ளவும் இது அனுமதிக்கிறது. தற்போதிருக்கும் பெரும்பாலான மேஜைகணினி இயங்குதளங்களில், முன்னிருப்பாகவே மாறும் இ.நெறி உள்ளமைப்பு தூண்டப்பட்டிருக்கும். இதனால் ஒரு டிஎச்சிபி வழங்கனுடன் கூடிய ஒரு வலையமைப்பிற்குள் நுழைய பயனர் எந்த அமைவுகளையும் உள்ளிட வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. மாறும் இ.நெறி முகவரிகளை ஒதுக்க டிஎச்சிபி மட்டுமே ஒரேயொரு தொழில்நுட்பம் இல்லை. தொலைபேசி அழைப்புமுறை மற்றும் சில அகல்கற்றை வலையமைப்புகள் point-to-point நெறிமுறையின் மாறும் முகவரி வசதிகளைப் பயன்படுத்துகின்றன.

ஸ்டிக்கி ஆற்றல்மிகு இ.நெறி முகவரி[தொகு]

ஸ்டிக்கி ஆற்றல்மிகு இ.நெறி முகவரி அல்லது ஸ்டிக்கி ஐபி என்ற உத்தியோகப்பூர்வமான வார்த்தையானது, அடிக்கடி மாறாத ஆற்றல்மிகு முறையில் ஒதுக்கப்படும் இ.நெறி முகவரியைக் குறிப்பிட கேபிள் மற்றும் டிஎஸ்எல் இணைய பயனர்களால் பயன்படுத்தப்படும் வார்த்தையாகும். இந்த முகவரிகள் பொதுவாக டிஎச்சிபி நெறிமுறையுடன் வழங்கப்படும். பொதுவாக மோடம்கள் நீண்ட நேரத்திற்கு இயக்கத்தில் இருக்கும் என்பதால், முகவரியும் நீண்ட காலத்தில் மாறாமல் இருக்கும். அதன் ஆயுட்காலம் முடிந்த உடனே மீண்டும் புதுப்பிக்கப்படும். முகவரிக்கான காலம் முடிவதற்கு முன்னரே மோடம் அணைக்கப்பட்டு மீண்டும் இணைக்கப்பட்டாலும், பெரும்பாலும் அதே இ.நெறி முகவரியைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

முகவரி தானாகவே மாறும் வகையில் அமைக்கப்பட்ட உள்ளமைவு[தொகு]

RFC 3330 ஆனது, இ.நெறி ப4 வலையமைப்புகளுக்காக லிங்க்-லோக்கல் முகவரி அளித்தலில் சிறப்பு பயன்பாடிற்காக ஒரு முகவரி பிளாக்கை, 169.254.0.0/16, வரையறுக்கிறது. இ.நெறி ப6-ல், ஒவ்வொரு இடைமுகமும், அது நிலையான முகவரி அல்லது மாறும் முகவரி இதில் எதைப் பயன்படுத்தினாலும், fe80::/10 துணை-வலையமைப்பில் தானாகவே ஒரு லிங்க்-லோக்கல் முகவரியையும் பெறுகிறது.

இந்த முகவரிகள் புரவன் இணைக்கப்பட்டிருக்கும் அந்த லிங்கில் மட்டுமே மதிப்பைப் பெற்றிருக்கும். அதாவது ஒரு உள்நிலை வலையமைப்பு பிரிவு அல்லது பாயிண்ட்-டூ-பாயிண்ட் இணைப்பு போன்றவற்றில் மட்டும். இந்த முகவரிகளை ரௌட்டிங் செய்ய இயலாது. மேலும் தனிமுறை முகவரிகளைப் போல இணையத்தில் குறுக்காக செல்லும் தொடங்கும் அல்லது முடியும் பேக்கெட்களாகவும் இருக்காது.

லிங்க்-லோக்கல் இ.நெறி ப4 முகவரி பிளாக் ஒதுக்கப்பட்டுவிட்டால், முகவரி தானாகவே மாறும் வகையில் அமைக்கப்பட்ட உள்ளமைவின் செயல்முறைக்காக எந்த தரமுறையும் இருக்காது. இந்த ஒன்றுமில்லாததை நிறைக்க, மைக்ரோசாப்ட்டானது ஆட்டோமெடிக் பிரைவேட் ஐபி அட்ரஸிங் (APIPA) என்றழைக்கப்படும் ஒரு நிறுவுதலை உருவாக்கியது. சந்தையில் இருந்த மைக்ரோசாப்டின் செல்வாக்கால், APIPA மில்லியன்கணக்கான கணினிகளில் நிறுவப்பட்டது, இவ்வாறு அது தொழில்துறையில் ஒரு நிஜமான தரமுறையாக உருவெடுத்தது. பிறகு பல ஆண்டுகளுக்குப் பின்னர், IETF செயல்பாட்டிற்கான ஓர் உத்தியோகப்பூர்வமான தரமுறையை வரையறுத்தது. அதுவே இ.நெறி ப4 லிங்க்-லோக்கல் முகவரிகளுக்கான ஆற்றல்மிகு உள்ளமைவு என்ற தலைப்பில் வந்த RFC 3927.

நிலை முகவரி வழங்கலின் பயன்கள்[தொகு]

சில உள்கட்டமைப்பு சூழ்நிலைகள், புரவன் பெயர்களை இ.நெறி முகவரிகளாக மாற்றும் புரவன் பெயர் அமைப்புமுறை வழங்கனைக் கண்டறியும் போது ஏற்படும் சூழ்நிலைகள் போன்ற நிலைமைகளில், நிலையான முகவரிகளைப் பயன்படுத்த வேண்டியதிருக்கும். நிலையான முகவரிகளும் சில சௌகரியங்களைக் கொண்டிருக்கின்றன. ஆனால் கட்டாயம் இவை தேவை என்பதில்லை. ஒரு நிறுவனத்தில் இருக்கும் வழங்கன்களைக் கண்டறிவது போன்ற பயன்பாட்டிற்கு இவை தேவைப்படும். ஒரு டிஎன்எஸ் வழங்கனில் இருந்து பெறப்பட்ட ஒரு முகவரி விடுபடுவதற்கான நேரத்தோடு அல்லது கேச் நேரத்தோடு தான் வருகிறது. ஆகவே அதன்பிறகு அது மாறிவிடவில்லை என்பதை உறுதிப்படுத்த அது மீண்டும் கவனிக்கப்பட வேண்டும். நிலையான இ.நெறி முகவரிகளும் கூட, வலையமைப்பு நிர்வாகியால் மாற்றப்பட்டு விடலாம் (RFC 2072).

இ.நெறி முகவரி வழங்கலில் மாற்றங்கள்[தொகு]

இ.நெறி தடுப்புகளும் தீச்சுவர்களும்[தொகு]

இன்று இணையத்தில் பயர்வால்கள் பொதுவாக இருக்கின்றன. வலையமைப்பின் உயர் பாதுகாப்பிற்காக, வாடிக்கையாளரின் பொது இ.நெறியின் (public ip) அடிப்படையில் அவை தனிமுறை வலையமைப்புகளுக்குள் அணுகுவதைக் கட்டுப்படுத்துகின்றன. ஒரு கருப்புபட்டியலையோ அல்லது வெள்ளைப்பட்டியலையோ பயன்படுத்தி, தடுக்கப்பட்ட இ.நெறி முகவரி தான் வாடிக்கையாளரின் அறியப்பட்ட பொது இ.நெறி முகவரி என்பதைப் பயன்படுத்தி கொள்கிறது, அதாவது வாடிக்கையாளர் ஒரு புராக்ஸி சர்வர் அல்லது NAT பயன்படுத்துகிறார் என்றால், ஒரு இ.நெறி முகவரியைத் தடுத்தாலே பல தனிமுறை பயனர்களைத் தடுத்துவிடும் என்பதையே இது குறிக்கிறது.

இ.நெறி முகவரி மாற்றம்[தொகு]

இ.நெறி முகவரிகளைப் பகிர்ந்து கொள்வதற்காக பல பயனர் உபயோகிக்கும் உபகரணங்கள் உருவாகலாம்: ஒரு பகிர்வு ஹோஸ்டிங் வெப் சர்வர் சூழலின் ஒரு பாகமாகவோ அல்லது இ.நெறி ப4 வலையமைப்பு முகவரி மாற்றியின் (NAT) காரணமாகவோ அல்லது புராக்ஸி சர்வர் அதன் பயனர்களுக்குச் சார்பாக ஓர் இடைநிலை முகவராக செயல்படுவதாலோ, இந்த விஷயத்தைப் பொறுத்த வரையில் நிஜமான தோற்றுவிக்கும் இ.நெறி முகவரிகள் ஒரு கோரிக்கையைப் பெறும் சர்வரில் இருந்து மறைக்கப்படலாம், ஏதோவொரு வகையில் இவ்வாறான உபகரணங்கள் உருவாகலாம். பொதுவான வழக்கம் என்னவென்றால், ஒரு தனிமுறை வலையமைப்பில் பெருமளவிலான இ.நெறி முகவரிகள் NAT-னினால் மறைக்கப்படும். NAT இன் வெளிப்புற இடைமுகங்கள் மட்டும் இணைய-ரௌட்டபிள் முகவரிகளைப் பெற்றிருக்க வேண்டும்[5].

பெரும்பாலும், NAT சாதனம் வெளியில் இருக்கும் TCP அல்லது UDP போர்ட் எண்களை உள்ளிருக்கும் தனித்தனியான தனிமுறை முகவரிகளுக்கு மேப்பிங் செய்கிறது. ஒரு தொலைபேசி எண் இடஞ்சார்ந்த விரிவெண்களைக் கொண்டிருப்பது போல, இந்த போர்ட் எண்கள் என்பவை ஓர் இ.நெறி முகவரியின் இடஞ்சார்ந்த விரிவாக்கங்களாகும்.

சிறிய வீட்டு வலையமைப்புகளில், இந்த NAT செயல்பாடு பொதுவாக ஒரு ரெசிடென்சியல் கேட்வே சாதனத்தில் நடக்கும், பொதுவாக இது "ரௌட்டர்" என்று குறிப்பிடப்படுவதில் நடக்கும். இந்த விஷயத்தில், ரௌட்டரோடு இணைக்கப்பட்டிருக்கும் கணினிகள் 'தனிமுறை' இ.நெறி முகவரிகளைக் கொண்டிருக்கலாம், அந்த ரௌட்டர் இணையத்தோடு தொடர்பு கொள்ள ஒரு 'பொது' முகவரியைக் கொண்டிருக்கலாம். இந்த வகையான ரௌட்டர் பல கணினிகள் ஒரே பொது இ.நெறி முகவரியைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது.

கருவிகள்[தொகு]

விண்டோஸ் இயங்குதளத்தில், கட்டளை-தள(command prompt) கருவியைப் பயன்படுத்தி ipconfig என்ற கட்டளையின் மூலமாக இ.நெறி முகவரியை வரையறுக்கலாம். யூனிக்ஸில், கட்டளை-தளத்தில் ifconfig என்ற கட்டளை இந்த பணியைச் செய்கிறது.

ஒரு வழங்கன் பெயரைச் சேர்ந்த இ.நெறி முகவரியை, nslookup, example.net அல்லது dig example.net என்ற கட்டளைகளைப் பயன்படுத்தி வரையறுக்கலாம்.

குறிப்புதவிகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 RFC 760, "DOD Standard Internet Protocol". DARPA Request For Comments. Internet Engineering Task Force. January 1980. பார்க்கப்பட்ட நாள் 2008-07-08.
  2. 2.0 2.1 RFC 1883, "Internet Protocol, Version 6 (IPv6) Specification". Request For Comments. The Internet Society. December 1995. பார்க்கப்பட்ட நாள் 2008-07-08.
  3. 3.0 3.1 RFC 2460, இணைய நெறிமுறை பதிப்பு 6 (இ.நெறி ப6) தொழில்நுட்ப குறிப்புகள், எஸ். டெர்ரிங், ஆர். ஹிண்டன், தி இண்டர்நெட் சொசைட்டி (டிசம்பர் 1998)
  4. Jon Postel, தொகுப்பாசிரியர் (September 1981). [[[:வார்ப்புரு:Cite IETF/makelink]] Internet Protocol, DARPA Internet Program Protocol Specification]. IETF. RFC 791. வார்ப்புரு:Cite IETF/makelink.  Updated by RFC 1349, 2474, 6864.
  5. Comer pg.394

பிற வலைத்தளங்கள்[தொகு]

ஆர்எப்சிக்கள்[தொகு]

Rajava theadiya seethai[தொகு]

கணினி பிணையமாக்கம் தலைப்புகள் பட்டியல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இணைய_நெறிமுறை_முகவரி&oldid=3910566" இலிருந்து மீள்விக்கப்பட்டது