இணையமும் தமிழும் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இணையமும் தமிழும்
நூல் பெயர்:இணையமும் தமிழும்
ஆசிரியர்(கள்):துரை. மணிகண்டன்
வகை:தமிழ்
துறை:இணையத்தில் தமிழ்
இடம்:எண்:7/3சி மேட்லி சாலை,
தியாகராயநகர்
சென்னை 600 017
மொழி:தமிழ்
பக்கங்கள்:93
பதிப்பகர்:நல்நிலம்(ஸ்கைடெக் பப்ளிகேசன்ஸ்)
பதிப்பு:2008
ஆக்க அனுமதி:ஆசிரியருடையது

துரை. மணிகண்டன் எழுதிய இணையமும் தமிழும் என்கிற நூல் ISBN 978-81-907120-4-0 என்ற குறியீட்டு எண்ணுடன் டெம்மி அளவில் 93 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

நூலாசிரியர்[தொகு]

இந்நூலின் ஆசிரியர் துரை.மணிகண்டண் தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் திருச்சியிலுள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரியில் தமிழ்த் துறைத்தலைவராகப் பணியாற்றி வருகிறார்.

அணிந்துரை[தொகு]

தமிழ்நாட்டில் திருச்சியிலுள்ள ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் இயக்குனர் மற்றும் முதல்வராக இருக்கும் முனைவர் கே.மீனா அவர்கள் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ளார்.

வாழ்த்துரை[தொகு]

நூலாசிரியர் பணிபுரிந்து வரும் திருச்சியிலுள்ள தேசியக் கல்லூரியின் செயலாளராக இருந்து வரும் கா. இரகுநாதன் என்பவர் வாழ்த்துரை வழங்கியிருக்கிறார்.

பொருளடக்கம்[தொகு]

"இணையமும் தமிழும்" என்கிற இந்நூலில் கீழ்காணும் 11 தலைப்புகளின் கீழ் உள்ளடக்கம் அமைந்துள்ளது.

  1. இணையம் ஓர் அறிமுகம்
  2. இணையத்தின் வரலாறு
  3. கணினியில் இணையத்தில் தமிழ்
  4. தமிழ் இணையம் தொடர்பான மாநாடுகள் - கருத்தரங்குகள்
  5. இணையத்தில் தமிழின் பயன்பாடு
  6. இணையத்தில் தமிழ்க் கல்வி
  7. இணையத்தில் தமிழ் மின் இதழ்கள்
  8. இணையத்தில் தமிழ் மின் நூலகம்
  9. இணையம் கணினி வழி ஆய்வுகள்
  10. இணைய அகராதி
  11. இணையத் தமிழ் இதழ்களின் முகவரி

இணையம் ஓர் அறிமுகம்[தொகு]

இணையம் என்றால் என்ன? இணையத்தின் பயன்பாடுகள் என்ன? என்பது குறித்தும் இந்தப் பகுதியில் விளக்கப்பட்டுள்ளது.

இணையத்தின் வரலாறு[தொகு]

இணையம் தோன்றிய வரலாறு குறித்த தகவல்கள் இந்தப் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கணினியில் இணையத்தில் தமிழ்[தொகு]

கணினியில் தமிழ் கொண்டு வரப்பட்ட விதம், தமிழ் எழுத்துருக்கள் உருவாக்கப்பட்ட முறைகள், விசைப்பலகையில் எழுந்த சிக்கல்கள், பொதுத்தரம் இல்லாத எழுத்துருக்கள், வலைக்கணினியில் (இணையத்தில்) தமிழ் மின்னஞ்சல், தமிழில் மின்னஞ்சல் இடர்கள், தமிழில் மின்னஞ்சல் தீர்வுகள், முரசு அஞ்சல் , இணையத் தமிழ் முன்னோடி - நா.கோவிந்தசாமி, தமிழ் நெட், தகுதர நியமம், ஒருங்குறி நியமம், தமிழ்நெட் 99 என்பது குறித்த தகவல்கள் சுருக்கமாகத் தரப்பட்டிருக்கிறது.

தமிழ் இணையம் தொடர்பான மாநாடுகள் - கருத்தரங்குகள்[தொகு]

உலகில் நடைபெற்ற தமிழ் இணையம் தொடர்பாக நடைபெற்ற மாநாடுகள் , கருத்தரங்குகள் குறித்த தகவல்கள் தரப்பட்டுள்ளது. 1994 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் -5 மற்றும் 6 ஆம் தேதிகளில் நடைபெற்ற "தமிழும் கணிப்பொறியும்" என்ற தலைப்பிலான கருத்தரங்கம், 1997 ஆம் ஆண்டு மே மாதம் 17, 18 ஆம் தேதிகளில் சிங்கப்பூரில் நாங்யாங் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதல் உலகத் தமிழ் இணைய மாநாடு , 1999 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 7, 8, 9 ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் சென்னையில் அன்றைய தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி முன்னிலையில் நடைபெற்ற மூன்றாவது தமிழ் இணைய மாநாடு (தமிழ் இணையம் 99 மாநாடு), 2000 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் நடைபெற்ற மூன்றாவது தமிழ் இணைய மாநாடு, 2001 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் 23, 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்ற நான்காம் தமிழ் இணைய மாநாடு, 2002 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் சான்பிரான்சிஸ்கோவிலுள்ள பாஸ்டர் நகரில் நடைபெற்ற ஐந்தாம் தமிழ் இணைய மாநாடு மற்றும் கணிப்பொறித் திருவிழாக்கள் போன்ற செய்திகள் தரப்பட்டுள்ளன.

இணையத்தில் தமிழின் பயன்பாடு[தொகு]

இப்பகுதியில் இணையத்தைப் பயன்படுத்துபவர்கள், கல்வி, ஆராய்ச்சிகள் போன்ற செய்திகள் தரப்பட்டுள்ளன.

இணையத்தில் தமிழ்க் கல்வி[தொகு]

இணைய வழிக்கல்வி குறித்த செய்திகளுடன் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட தமிழ் இணையப் பல்கலைக்கழகம், அதன் நோக்கம், பாடத்திட்டங்கள், மழலையர் கல்வி, சான்றிதழ், மேற்சான்றிதழ், பட்டயம், இணைய வகுப்பறை ஆகியவற்றுடன் இணையவழித் தேர்வு முறைகள் ஆகியவை குறித்த செய்திகள் தரப்பட்டுள்ளன.

இணையத்தில் தமிழ் இதழ்கள்[தொகு]

இணையத்தில் இதழ்கள் தோன்றக் காரணம், இணையத்தில் தமிழ் மின்னிதழ்கள், மின்னிதழ்களின் சிறப்புகள், இணையத்தில் அச்சு இதழ்கள் போன்ற செய்திகள் தரப்பட்டிருக்கிறது.

இணையத்தில் தமிழ் மின் நூலகம்[தொகு]

இணையத்தில் உள்ள தமிழ் மின் நூலகம் குறித்த தகவல்கள், அதில் இடம் பெற்றுள்ள தமிழ் இலக்கண நூல்கள், சங்க இலக்கியம், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், திரட்டு நூல்கள், நெறி நூல்கள், இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள், உரைநடை நூல்கள், நாட்டுப்புற இலக்கியம், அகராதிகள், கலைச்சொல் அகராதி மற்றும் பிற மின்நூலகப் பங்களிப்புகள் போன்ற செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.

இணையம் கணினி வழி ஆய்வுகள்[தொகு]

இன்று இணையம் வழியில் கணினி வழி ஆய்வுகள் அதிகரித்து வருவது குறித்தும், ஆய்வாளர்களில் 75 சதவிகிதம் பேர் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துவது குறித்த தகவலுடன், தமிழ் எழுத்துருக்கள் குறித்த தகவல்களும் தரப்பட்டுள்ளது.

இணைய அகராதி[தொகு]

அகராதி என்றால் என்ன? அவைகளின் வகைகள், இணைய அகராதி, தமிழ் இணைய அகராதி, இணைய அகராதியின் பயன்பாடு, தமிழ் இணைய அகராதியின் தனிச்சிறப்பு, இணைய அகராதியை பயன்படுத்தும் முறை மற்றும் தேடல் வகை குறித்த செய்திகள் தரப்பட்டுள்ளன.

இணையத் தமிழ் இதழ்களின் முகவரி[தொகு]

இணையத்தில் வெளியாகும் சில தமிழ் இணைய இதழ்களின், தமிழ்க் கணிமை நிறுவனங்கள், பல்கலைக்கழகத் தளங்கள், தமிழ் இணைய நூலகங்கள், தமிழ்க் கணிமைச் சுவடிகள், ஆய்வுக் கட்டுரை மற்றும் தமிழ் இணைய வானொலி போன்ற தலைப்புகளின் கீழ் இணைய முகவரி பட்டியல்கள் தரப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]