இணையப் புகழ்மண்டபம்
இணையப் புகழ்மண்படம் (Internet Hall of Fame) என்பது 2012-ஆம் ஆண்டு இணையக் கழகம் நிறுவிய ஒரு வாழ்நாள் சாதனை விருது ஆகும். இவ்விருது இணையத்தின் வளர்ச்சி, முன்னேற்றத்துக்குப் பெரும் பங்காற்றியோரைச் சிறப்பிக்கும் நோக்கில் வழங்கப்படுகிறது. வின்டு செர்ப்பு, திம் பேர்னேர்சு-லீ, இரிச்சர்டு சிட்டால்மேன், இலினசு தோர்வால்டுசு முதலியோர் இதன் தொடக்க உறுப்பினர்களுள் சிலர்.
நோக்கம்
[தொகு]2012ஆம் ஆண்டு, இணையக் கழகத்தின் இருபதாம் ஆண்டு நிறைவை ஒட்டி, "உலகளாவிய இணையத்தின் வளர்ச்சி, முன்னேற்றத்துக்காகப் பங்களித்த தொலைநோக்காளர்கள், தலைவர்கள், புகழ்பெற்றவர்களைப் பொதுவில் சிறப்பிக்கும் பொருட்டு" இணையப் புகழ்மண்டபத்தை உருவாக்கினார்கள்.[1]
இவ்விருதை இன்னாருக்கு அளிக்கலாம் என்ற முன்மொழிவுகளை முறையான விண்ணப்பங்கள் மூலம் எவரும் தரலாம். இவர்களில் யார் தெரிவு பெறுவார்கள் என்ற இறுதி முடிவுக்கு இணையப் புகழ்மண்டபத்தின் ஆலோசனைக் குழு பொறுப்பெடுக்கும்.[1] இந்த ஆலோசனைக் குழுவில் இணையத் தொழில் துறையில் நன்கு அறியப்பெற்ற தொழில்வல்லுநர்கள் இடம்பெறுகிறார்கள்.[2]
வரலாறு
[தொகு]ஏப்பிரல் 23, 2012 அன்று சுவிட்சர்லாந்தின் செனீவாவில் இணையக் கழகம் நடத்திய மாநாட்டில் 33 தொடக்க உறுப்பினர்கள் புகழ்மண்டபத்தில் இடம்பெற்றனர்.[3][4][4] 2014 இல் 24 பேர் இப்புகழ்மண்படத்தில் இடம்பெற்றனர். இவர்களின் பெயர்கள் ஆங்காங்கில் நடைபெற்ற நிகழ்வில் அறிவிக்கப்பட்டன. [4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 About page, Internet Hall of Fame website.
- ↑ Advisory board, Internet Hall of Fame website.
- ↑ 2012 Inductees பரணிடப்பட்டது 2012-12-13 at the வந்தவழி இயந்திரம், Internet Hall of Fame website.
- ↑ 4.0 4.1 4.2 "Internet gets Hall of Fame, Al Gore honored". CBS News. April 24, 2012. Archived from the original on ஜூலை 3, 2013. Retrieved April 24, 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)