இணையத்தில் பயன்படும் மொழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலகளாவிய வலையில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட வலைத்தளங்களின் முதற்பக்கங்கள் ஆங்கிலத்தில் தான் உள்ளன. பிறதரவுகள் அனைத்தும் பல்வேறு மொழிகளில் காணக் கிடைக்கின்றன.[1][2] ஆங்கிலம் அல்லாமல் இணையத்தில் அதிகம் பயன்படும் மொழிகளாக அறியப்படுவன உருசிய மொழி, எசுப்பானிய மொழி, துருக்கிய மொழி, பெருசிய மொழி, பிரெஞ்சு மொழி, செருமன் மொழி, சப்பானிய மொழி ஆகியவையாகும்.[1]உலகில் பேசப்படும் ஏழாயிரம் மொழிகளில், சிலநூறு மொழிகளே இணையத்தில் பயன்படுபவையாக உள்ளன. [3]

பயன்பாட்டு விழுக்காடு[தொகு]

உலகின் முதல் மில்லியன் வலைத்தளங்களை பயன்பாட்டு மொழிகளின் பெயரில் ஆய்ந்த போது கிடைத்த சனவரி 11, 2021 படியான தரவு அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளது. [1]

தகுதி மொழி விழுக்காடு
1 ஆங்கிலம் 60.5%
2 உருசிய மொழி 8.6%
3 எசுப்பானிய மொழி 4.0%
4 துருக்கிய மொழி 3.7%
5 பெருசிய மொழி 3.1%
6 பிரெஞ்சு மொழி 2.7%
7 செருமன் மொழி 2.4%
8 சப்பானிய மொழி 2.1%
9 வியட்நாமிய மொழி 1.7%
10 சீன மொழி 1.4%
11 போர்த்துக்கேய மொழி 1.2%
12 அரபு மொழி 1.1%
13 இத்தாலிய மொழி 0.8%
14 இந்தோனேசிய மொழி 0.7%
15 கிரேக்க மொழி 0.7%
16 போலிய மொழி 0.6%
17 இடாய்ச்சு மொழி 0.6%
18 கொரிய மொழி 0.6%
19 தாய் மொழி 0.5%
20 உக்குரேனிய மொழி 0.4%
21 எபிரேயம் 0.4%
22 செக் மொழி 0.3%
23 சுவீடிய மொழி 0.2%
24 உருமானிய மொழி 0.2%
25 செருபிய மொழி 0.2%
26 அங்கேரிய மொழி 0.2%
27 டேனிய மொழி 0.2%
28 பல்கேரிய மொழி 0.1%
29 பின்னிய மொழி 0.1%
30 சுலோவாக்கிய மொழி 0.1%
31 குரோவாசிய மொழி 0.1%
32 இந்தி 0.1%
33 இலித்துவானிய மொழி 0.1%
34 பூக்மோல் மொழி 0.1%
35 சுலோவேனிய மொழி 0.1%
36 நோர்வே மொழி 0.1%
37 இலத்துவிய மொழி 0.1%

பிற மொழிகள் 0.1% விழுக்காட்டிற்கும் குறைவாக பயன்படுகின்றன. இன்னும் சில வலைத்தளங்கள் பல்வேறு மொழிகளில் பயன்படக் கூடியவனாகவும் உள்ளன.

மொழிவாரியான இணைய பயன்பாட்டாளர்கள்[தொகு]

மார்ச்சு 31, 2020 இன் படியான தரவு.

தகுதி மொழி பயன்பாட்டாளர் எண்ணிக்கை விழுக்காடு
1 ஆங்கிலம் 1,186,451,052 25.9%
2 சீன மொழி 888,453,068 19.4%
3 எசுப்பானிய மொழி 363,684,593   7.9%
4 அரபு மொழி 237,418,349   5.2%
5 இந்தோநேசிய மொழி / மலாய் மொழி 198,029,815   4.3%
6 போர்த்துக்கேய மொழி 171,750,818   3.7%
7 பிரெஞ்சு மொழி 151,733,611   3.3%
8 சப்பானிய மொழி 118,626,672   2.6%
9 உருசிய மொழி 116,353,942   2.5%
10 செருமன் மொழி 92,525,427   2.0%
1-10 முதற்பத்து மொழிகள் 3,525,027,347   76.9%
- ஏனையவை 1,060,551,371  23.1%
மொத்தம் 4,585,578,718 100%

மொழிவாரியான விக்கிப்பீடியப் பக்கப் பார்வைகள்[தொகு]

விக்கிப்பீடியா புள்ளிவிவரங்களில் இருந்து இத்தரவுகள் பெறப்பட்டன.

தகுதி மொழி அன்றாட பக்கப் பார்வைகள் (2021)
1 ஆங்கிலம் 257,705,129
2 சப்பானிய மொழி 37,286,466
3 எசுப்பானிய மொழி 37,018,505
4 செருமன் மொழி 30,844,175
5 உருசிய மொழி 26,358,126
6 பிரெஞ்சு மொழி 24,392,611
7 இத்தாலிய மொழி 18,622,198
8 சீன மொழி 13,371,571
9 போர்த்துக்கேய மொழி 11,506,680
10 போலிய மொழி 8,810,420
11 அரபு மொழி 7,333,102
12 பெருசிய மொழி 5,672,829
13 இந்தோனேசிய மொழி 5,385,401
14 இடாய்ச்சு மொழி 4,935,611
15 துருக்கிய மொழி 3,382,454

மேற்கோள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]