இணைப்புத் தரவு
இணைப்புத் தரவு என்பது அமைப்புடைய தரவுகளை ஒன்றோடு ஒன்று இணைக்ககூடியவாறும், பொருளுணர் முறையில் வினவக்கூடியவாறும் வெளியிடுவதற்கான முறையினைக் குறிக்கிறது. இதனைத் தரவுகளின் வலைப் பின்னல் என்று விபரிப்பர்.[1] இணைப்புத் தரவு ஏற்கனவே பரவலாகப் பயன்படுத்தப்படும் இணையத் தொழில்நுட்பங்களான எச்.ரி.ரி.பி (HTTP), சீரான வள அடையாளங்காட்டி (URI), வள விபரிப்புச் சட்டகம் (RDF) ஆகியவற்றைப் பயன்படுத்தி, அவற்றை விரிவாக்கி அமைகிறது. உலகாளாவிய வலையில் உள்ள தகவல்களை மனிதர்கள் மட்டும் அல்லாமல் இயந்திரங்களும் இலகுவான முறையில் பயன்படுத்த இந்தத் தொழில்நுட்பம் உதவுகின்றது.
2006 ஆம் ஆண்டு அளவில் உலகளாவிய வலை கண்டுபிடிப்பாளரான ரிம் பேர்னேர்ஸ்-லீயினால் இந்தத் தொழில்நுட்பம் பரந்து அறிமுகப்படுத்தப்பட்டது. 2010 களில் நூலகங்கள், ஆவணகங்கள், பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிறுவனங்கள், அரச நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் இதனை கூடிய அளவில் பயன்படுத்தத் தொடங்கி உள்ளன.
கொள்கைகள்
[தொகு]ரிம் பேர்னேர்ஸ்-லீ நான்கு கொள்கைகளை இணைப்புத் தரவு தொடர்பாக 2006 முன்வைத்தார்.[2] அவை பின்வருமாறு:
- தகவல் வளங்களையும் (எ.கா வலைப்பக்கம், கோப்பு, படிமம்), தகவல் அல்லா வளங்களையும் (எ.கா பொருள், கருத்து) யு.ஆர்.ஐ (URI) பெயர் கொண்டு இனங்காட்டுதல்.
- எச்.ரி.ரி.பி யு.ஆ.ஐ களைப் பயன்படுத்தல் மூலம் இந்த வளங்களைப் பற்றிய தகவல்களைக் கண்டறிய உதவுதல் (dereferencing using http)
- ஒருவர் யு.ஆர்.ஐ பெயரை அணுகும் போது, பயன்படக்கூடிய தகவல்களைத் திறந்த சீர்தரங்களைப் பயன்படுத்தி வழங்குதல் (எ.கா ஆர்.டி.எப் (RDF), எசுபார்க்குவல் (SPARQL))
- பிற வளங்களுக்கு இணைப்புத் தருதல். இதன் ஊடாக மேலதக வளங்களைக் கண்டறிய உதவுதல்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Linked Data". W3C. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Tim Berners-Lee (2006-07-27). "Linked Data". W3. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)