இணைதொகுதிமரபு உயிரினத் தோற்றம்

இணைதொகுதிமரபு உயிரினத் தோற்றம் (Paraphyly) என்பது உயிரியல் வகைப்பாட்டியலில், மூன்று முக்கியமான கருத்துருக்களில் ஒன்றாகும். ஒரு பொதுவான மூதாதையரையும், அதிலிருந்து உருவான ஒரு சில சந்ததியினரையும் மட்டுமே[1] உள்ளடக்கிய குழு, "இணைமுறை/பக்கமுறை/த் தொகுதி" என அழைக்கப்படுகிறது. இதில் அந்த மூதாதையரிடமிருந்து தோன்றிய அனைத்து உயிரினங்களும் சேர்க்கப்படுவதில்லை. எடுத்துக்காட்டாக, ஊர்வன இனங்களான ஆமைகள், பல்லிகள், முதலை போன்றவை பொதுவான மூதாதையரிடமிருந்துதான் என்றாலும், பறவைகளும், இதே இணைதொகுதிமரபு உயிரினங்களில் இருந்தே தோன்றின. ஆனால், பாரம்பரிய வகைப்பாட்டியலில் பறவைகள் ஊர்வன குழுவில் சேர்க்கப்படாமல் தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளன. எனவே, பறவைகளைத் தவிர்த்த "ஊர்வன" இனங்கள், இந்த தோற்றக் கருத்துருவின் கீழ் வருகின்ற.
தற்போது பின்பற்றப்படும் கிளைப்பாட்டியல் முறையில், ஒரு பொதுவான மூதாதையரின் அனைத்து சந்ததியினரையும் உள்ளடக்கிய 'ஒற்றை மரபுவழித் தொகுதி' (Monophyly) முறையே அறிவியல் ரீதியாகச் சரியானதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. எனினும், உயிரினங்களின் பரிணாம மாற்றங்களையும் உருவ ஒற்றுமைகளையும் வகைப்படுத்தப் பக்கமுறைத் தொகுதி பற்றிய புரிதல் அவசியமானது.
இதன் தொடர்ச்சியாக, ஒற்றைத்தொகுதிமரபு உயிரினத் தோற்றம் என்பதற்கும், பலதொகுதிமரபு உயிரினத் தோற்றம் என்பதற்கும் இடையேயான வேறுபாடுகளையும் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Paraphyly (Biochemistry, Genetics and Molecular Biology)". sciencedirect. Retrieved 17 சனவரி 2026.