இணுவையூர் மயூரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


இணுவையூர் மயூரன்
இணுவையூர் மயூரன்.jpg
பிறப்புஇணுவில்,யாழ்ப்பாணம்
தேசியம்ஈழத்தமிழர்
மற்ற பெயர்கள்சுவிட்சர்லாந்து
அறியப்படுவதுவானொலி ஒலிபரப்பாளர்,ஈழத்து எழுத்தாளர், பாடலாசிரியர், கவிஞர்
சமயம்சைவம்
பிள்ளைகள்3
வலைத்தளம்
இணுவையூர் மயூரன்.com

இணுவையூர் மயூரன் இணுவையூர் மயூரன் ஈழத்தின் யாழ்ப்பாணம் இணுவிலை [[இணுவில்]] பிறப்பிடமாகக் கொண்டவர். தனது 11வது வயது முதல் புலம்பெயர்ந்து சுவிற்சர்லாந்தின் [[சுவிட்சர்லாந்து]] பாசல் மாநிலத்தில் வாழ்ந்து வருகின்றார். இவர் பல்துறைக் கலைஞராவார்.

ஈழத்துப்பித்தன், மூங்கில்காடன், ராஜிமைந்தன் ஆகிய புனைப் பெயர்களிலும் இவர் தனது படைப்புக்களைப் அச்சு ஊடகங்களிலும் சமூகவலைத்தளங்களிலும் படைத்தது வருகின்றார்.

1998ம் ஆண்டளவில் உருவாக்கம்பெற்ற சுவிற்சர்லாந்தின் பாசல் தமிழ் மன்றத்தின் ஆணிவேர் இவராவார்.

2000ம் ஆண்டு முதல் [[ஐபீசி தமிழ்]] [[வானொலி]] யின் சுவிஸ் செய்தியாளராகவும் பணி செய்தார்.

2002ம் ஆண்டு முதல் சுவிற்சர்லாந்தில் இருந்து வெளிவந்த [[குருத்து மாத இதழ்]] இன் ஆசிரியராக பணியாற்றினார்.

2003ம் ஆண்டளவில் பதினாறு தேசங்களில் வாழும் ஈழத்தமிழ் இளந்தலைமுறையினரோடு வன்னியில் கூடி, தமிழ் இளையோர் அமைப்பின் [[TYO]] உருவாக்கத்திற்கு வித்திட்டோரில் இவரும் ஒருவர்.

2003 முதல் சுவிற்சர்லாந்து வாழ் தமிழ்ச் சிறார்களின் பேச்சு மற்றும் எழுத்தாற்றலை வெளிக்கொணரும் முகமாக நடாத்தப்பட “தன்னாற்றல் திறன்களம்” எனும் போட்டியினை உருவாக்கி தான் சார்ந்த ஊடகங்களின் அனுசரணையுடன் நடாத்தி வந்தார்.

2006ம் ஆண்டளவில் இவரின் தொகுப்பில் “அறிவுத்திறன்” எனும் பொது அறிவு வினா விடை நூற்தொகுதி வெளி வந்தது.

2008ம் ஆண்டிலிருந்து பாசல் மாநிலத்தில் ஒலிபரப்பாகும் தமிழ் வானொலி X இன் ஒருங்கமைப்பாளராகவும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்தார்.

2010ம் ஆண்டு முதல் நடைபெற்ற பாசல் மாநிலத்தின் பிரமாண்ட கலை நிகழ்வான “தமிழ் காத்து” மேடை நிகழ்வின் உருவாக்குனரும் கட்டுப்பாட்டாளருமாவார்.

2018ம் ஆண்டு முதல் பாடலாசிரியராக பரிணாமம் பெற்று தொடர்ச்சியாக பல பாடல்களை புனைந்து வருகின்றார். இவரது வரியில் வெளிவந்த முதலாவது பாடலான “அப்பா எப்ப வருவீங்கள்?” பாடல் ஒரே நாளில் உலகத் தமிழர் நெஞ்சமெங்கும் நிலைத்தது.

1.1.2019 அன்று ஜேர்மனியிலுள்ள கவிஞரும் ஆன்மீகப்பற்றாளருமான திரு.லம்போதரன் அவர்களால் "கவிநயபாரதி" எனும் சிறப்பு கௌரவம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்.

22.09.2019 அன்று கம்போடிய அரசின் கலை பண்பாட்டு அமைச்சும் அங்கோர் தமிழ்ச் சங்கமும் உலகதமிழ் பண்பாட்டு நடுவமும் இணைந்து “சர்வதேச யசோவர்மன்” விருதினை வழங்கி மதிப்பளித்தார்கள்.

22.02.2020 அன்று பண்டிதர் சா.வே. பஞ்சாட்சரம் அவர்கள் “நவீன ஏகலைவன்” எனும் சிறப்பை வழங்கினார்.

22.03.2020 அன்று ஆசிரியரின் "ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்” எனும் கவிதை நூல் சுவிற்சர்லாந்தில் வெளியிடப்பட்டது.

கவிஞராக, பாடலாசிரியராக, எழுத்தாளராக, வானொலி, மேடை அறிவிப்பாளராக, நாடக, திரைப்கபட நடிகராக, சமூகச் செயற்பாட்டாளராக, பட்டிமன்ற பேச்சாளராக, பட்டிமன்ற நடுவராக, தமிழ்த் திறன் போட்டிகளின் நடுவராக தமிழ் ஆர்வலராக பல்துறைகளிலும் தடம்பதித்து வரும் ஆசிரியரின் முதலாவது கவிதைத் தொகுதி இதுவாகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இணுவையூர்_மயூரன்&oldid=3119352" இருந்து மீள்விக்கப்பட்டது