இணக்க நடத்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறிமுகம்[தொகு]

பிறரோடு இணைந்து செயல்பட வேண்டுமானால் நாம் பிறரோடு கொண்டுள்ள ஐக்கியம், பிறரை மதிக்கும் தன்மை, அவர்களது உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் தன்மை, நெகிழ்வுத் தன்மை, பிறர் மனம் புண்படாமல் நமது கருத்தை வலியுறுத்தும் திறன் ஆகிய பண்புகள் அவசியமாகிறது. இணக்கம் என்பது ஒருவர் தமது கருத்துக்களையும், உணர்வுகளையும், எண்ணங்களையும், மற்றும் தமது தேவைகளையும் மற்றவர்களின் மனம் நோகாமல், அதாவது மற்றவர்களின் உணர்வுகள் மற்றும் உரிமைகள் ஆகியவற்றிற்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் வெளிப்படுத்தும் திறனாகும்.

இணக்க நடவடிக்கைகளை வளர்த்துக் கொள்ள[தொகு]

திறந்த மன எண்ணங்களை நம்முள் ஏற்படுத்திக் கொள்ள வேன்டும் பிறருடைய உணர்வுகளையும், எண்ணங்களையும் தேவைகளையும் சரிவரப் புரிந்து கொள்ள வேண்டும். கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள எல்லோருக்கும் சரிசமமான வாய்ப்புகளைத் தரவேண்டும். தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். தமது உணர்வுகளும் பிறரது உணர்வுகளும் பாதிக்கப்படாமல் சமயோசிதமாக நடந்து கொள்ள வேண்டும். தமது உரிமை பாதுகாக்கப்படுவது போல பிறரது உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

இணக்க நடத்தையும் தகவல் தொடர்பு திறனும்[தொகு]

"நான்" என்ற சொல்லை பயன்படுத்தும் திறன் "இல்லை" என்று சொல்ல கற்றுக் கொள்ளுதல் உடலசைவு மொழிகள் உணர்வுகளைக் கட்டுப்படுத்துதல் பிறரைக் கவர்தல்

சான்றாதாரம்[தொகு]

ஆளுமை மேம்பாடு(டிசம்பர்-2010).முனைவர் இரா.சாந்தகுமாரி,ச.வைரவராஜ்(நூலாசிரியர்கள்).பக்.95-99,சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை-600 014.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இணக்க_நடத்தை&oldid=2398939" இருந்து மீள்விக்கப்பட்டது