இட்ஸ் யுவர் ஃபால்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இட்ஸ் யுவர் ஃபால்ட் (It's Your Fault (video)) 2013 ஆம் ஆண்டில் வெளியான நையாண்டி நிகழ்படம் ஆகும். இதில் கல்கி கோய்ச்லின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் சூகி பாண்டே ஆகியோர் இந்தியாவில் வன்கலவியினைப் பற்றி நடித்துள்ளனர், [1] இந்த நிகழ்படம் யூடியூப்பில் 5.500.000 பார்வைகளுக்கு மேல் இணையதளத்தில் பார்வையிடப்பட்டது. இது அகில இந்திய பக்கோட் மூலம் உருவாக்கப்பட்டது. [1][2]

இந்தியாவில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பரவலாக அதிகரித்ததனை தொடர்ந்து 'ஏஐபி' எனப்படும் ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நடிகர்கள் நையாண்டி நிகழ்படத்தினை உருவாக்கினர். இந்தக் குழுவில் தன்மய் பட், குர்சிம்ரன் கம்பா, ரோஹன் ஜோசி மற்றும் ஆசிசு சாக்யா ஆகியோர் இருந்தனர். இந்த நிகழ்படத்தில் பாலிவுட் நடிகை கல்கி கோச்லின் மற்றும் வானொலி வர்ணனையாளர் சூகி பாண்டே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பிரச்சாரத்தில் பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களைக் காட்டுகிறது. [3] பாலியல் வல்லுறவைத் தூண்டும் பெண்களை குற்றம் சாட்டும் இந்திய மனநிலையை இந்த நிகழ்படம் பகடி செய்கிறது. [4] [5]

தயாரிப்பு மற்றும் உருவாக்கம்[தொகு]

கல்கி கோச்லின் சூகி பாண்டேவுடன் இணைந்து நிகழ்படத்தில் நடித்தார்.

"நான்கு வேடிக்கையான தோழர்களின் குழுவிலிருந்து நீங்கள் எதிர்பார்ப்பது இதில் நடக்காது, அது தான் இந்த நிகழ்படத்தின் மையப்புள்ளி. இதில் எந்த பகுதியும் வேடிக்கையானது அல்ல, எனவே நாங்கள் அதை வேறு வழியில் அணுகினோம். நாங்கள் நிகழ்படத்தினை வெளியிட்ட தருணத்திலிருந்து இப்போது வரை மக்களின் வரவேற்பு எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இந்த நிகழ்ப்டத்தின் கருத்தானது நமக்குத் தெரிந்த ஒவ்வொரு நபருடனும் தொடர்புடையதாக நம்மை உணரவைக்கும் என்று ரோகன் ஜோசி கூறினார்.

இந்த நிகழ்படத்தின் இணைந்து நடித்த சூகி பாண்டே, "நாங்கள் நிகழ்படத்தினைப் படமாக்கும்போது அது நிறைய எதிர்வினைகளைப் பெறும் என்று எங்களுக்குத் தெரியும். இது தொடர்பாக நிறைய விவாதங்கள் இருக்கும் என்றும் எதிர்பார்த்தோம். நாம் அனைவரும் நமது சமூகக் குழுக்களில் இந்த விவாதங்களை நடத்தியுள்ளோம், மேலும் பரவலாக நடைபெறும் பாலியல் வல்லுறவு செய்தி அறிக்கைகள் குறித்து அனைவரும் கோபமாகவும் விரக்தியுடனும் இருந்தோம்..இந்த நிகழ்படம் ஆங்கிலம் பேசும், 'கிண்டல்களைப் புரிந்துகொள்ளும்' இளைஞரை மட்டுமே சென்றடையும், ஆனால் குறைந்தபட்சம் எங்களது கருத்துக்களை மக்களிடையே சென்று சேர்க்க விரும்பினோம். எங்களது படைப்பு கடலில் ஒரு துளியாகவே இருக்கும், அந்த ஒரு துளியில் பங்களித்தனை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்." என்று கூறினார்.[6]

ஆரம்பத்தில், தனது பணியின் காரணமாக கல்கி இந்த நிகழ்படப் பணியில் ஈடுபடத் தயங்கினார் ஆனால் "நிகழ்பட கருத்தை அனுப்பியபோது, நான் என் மனதை மாற்றிக்கொண்டேன்." என்று கூறுகிறார்,மக்கள் கிண்டல்களைப் புரிந்து கொள்வார்களோ என்று கவலைப்பட்டோம். இது ஒரு முக்கியமான விடயம் மற்றும் அது தீவிளைவை ஏற்படுத்தக்கூடும் என்று நாங்கள் கவலைப்பட்டோம், ”இதன் நோக்கம் யாரையும் புண்படுத்துவது அல்ல. "நகைச்சுவை ஒரு தீவிரமான விஷயத்தை கையாள ஒரு அருமையான வழியாகும். [7]

வரவேற்பு[தொகு]

இந்த நிகழ்படம் செப்டம்பர் 19 அன்று வெளியிடப்பட்டது யூடியூப்பில் 4,713,620 க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றது. இந்த நிகழ்படம் பரவலாக அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பம்மலாகியது.

தி ஹிந்து நிகழ்படத்தினை பின்வருமாரு மதிப்பாய்வு செய்தது, "நிகழ்படத்தின் மையக் கருத்து மற்றும் பொதுமக்களின் நுட்பமான உணர்வுகளைக் கருத்தில் கொண்டு வரும் இந்த முயற்சி பாராட்டத்தக்கது. ஆணாதிக்கம் அல்லது வன்கலவி போன்ற ஒரு பிரச்சினையை எடுத்து நையாண்டி மூலம் உங்கள் செய்தியை கொன்டு சேர்ப்பது என்பது மிகவும் கடினமாக இருந்திருக்க வேண்டும். ஏஐபி குழு தங்களது இந்த முயற்சியில் பெரும்பானமையான வெற்றியினைப் பெற்றுள்ளது.[8]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 Mehta, Ankita (21 September 2013). "It's Your Fault! Kalki Koechlin, VJ Juhi Pande Blame Rape Victims in Satirical Video [WATCH]". International Business Times. பார்க்கப்பட்ட நாள் 7 July 2014.
  2. Kohli, Karnika (Sep 21, 2013). "Rape? It's your fault, women: Sarcastic video on victim-blaming goes viral". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 2013-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130924001112/http://articles.timesofindia.indiatimes.com/2013-09-21/india/42271972_1_indian-women-fault-video. பார்த்த நாள்: 2013-10-05. 
  3. [1]
  4. Awaasthi, Kavita (September 24, 2013). "It's Your Fault video goes viral, Kalki Koechlin plans a Hindi version". ஹிந்துஸ்தான் டைம்ஸ். Mumbai இம் மூலத்தில் இருந்து 2013-10-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131002012651/http://www.hindustantimes.com/Entertainment/Tabloid/It-s-Your-Fault-video-goes-viral-Kalki-Koechlin-plans-a-Hindi-version/Article1-1126400.aspx. பார்த்த நாள்: 2013-10-05. 
  5. "Rape? Ladies, it's your fault: Kalki Koechlin features in viral video". September 20, 2013 இம் மூலத்தில் இருந்து செப்டம்பர் 23, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130923011041/http://ibnlive.in.com/news/rape-ladies-its-your-fault-kalki-koechlin-features-in-viral-video/423504-77.html. 
  6. http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Kalki-Koechlin-Juhi-Pande-Rohan-Joshi-Tanmay-Bhat-Gursimran-Khamba/articleshow/22891592.cms?
  7. Hindustan Times
  8. http://www.thehindu.com/opinion/blogs/blog-by-the-way/article5152991.ece
"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்ஸ்_யுவர்_ஃபால்ட்&oldid=3315861" இலிருந்து மீள்விக்கப்பட்டது