இட்டோலியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இட்டோலியா
Αἰτωλία
பண்டைக் கிரேக்கப் பிராந்தியம்
பண்டைய மற்றும் நவீன தெர்மான், ஏட்டோலியா
பண்டைய மற்றும் நவீன தெர்மான், ஏட்டோலியா
பண்டைய ஏட்டோலியாவின் வரைபடம்
பண்டைய ஏட்டோலியாவின் வரைபடம்
அமைவிடம்மேற்கு கிரேக்கம்
பெரிய நகரங்கள்தெர்மன்
பேச்சுவழக்குகள்டோரிக்
முக்கிய காலங்கள்இட்டோலியன் கூட்டணி
(கிமு 290–189 )

இட்டோலியா (Aetolia, கிரேக்கம்: Αἰτωλία‎ ) என்பது கிரேக்கத்தின் ஒரு மலைப் பகுதியாகும். இது கொரிந்து வளைகுடாவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ளது. இது கிரேக்கத்தின் நவீன பிராந்திய அலகின இட்டோலியா-அகார்னானியாவின் கிழக்குப் பகுதியாக உள்ளது.

நிலவியல்[தொகு]

அச்செலஸ் ஆறு இட்டோலியாவை அகர்னானியாவிலிருந்து மேற்கே பிரிக்கிறது; வடக்கில் இது எபிரஸ் மற்றும் தெசலியுடன் எல்லைகளைக் கொண்டிருந்தது; கிழக்கில் ஓசோலியன் லோக்ரியர்களுடன் ; தெற்கில் கொரிந்து வளைகுடாவின் நுழைவாயில் இட்டோலியாவின் எல்லைகளகளாகும்.

பாரம்பரியக் காலங்களில் ஏட்டோலியா இரண்டு பகுதிகளைக் கொண்டிருந்தது: "பழைய ஏட்டோலியா" ( கிரேக்கம்: Παλιά Αιτωλία‎ ) மேற்கில், அச்செலஸ் முதல் ஈவ்னஸ் மற்றும் கலிடன் வரை; மற்றும் "புதிய ஏட்டோலியா" ( கிரேக்கம்: Νέα Αιτωλία‎ ) அல்லது "அக்கியூரிடு ஏடோலியா" ( கிரேக்கம்: Αἰτωλία Ἐπίκτητος‎ ) கிழக்கில் ஈவ்னஸ் மற்றும் கலிடன் முதல் ஓசோலியன் லோக்ரியன்ஸ் வரை. இதன் கடற்கரையை ஒட்டிய பகுதிகள் சமமான மற்றும் விளைச்சல் தரும் நிலப்பகுதியாக உள்ளது. ஆனால் இதன் உட்புறப் பகுதியானது விளைச்சல் ஏதும் தராத மலைப்பாங்கான பகுதியாக உள்ளது. மலைகளில் பல காட்டு மிருகங்கள் இருந்தன, மேலும் இட்டோலியன் பன்றி என்றும் அழைக்கப்படும் கலிடோனியன் பன்றியை வேட்டையாடும் சித்தரிப்பு கிரேக்கத் தொன்மங்களில் புகழ் பெற்றது. [1]

குறிப்புகள்[தொகு]

  1. Rose, Carol, Giants, Monsters, and Dragons: An Encyclopedia of Folklore, Legend, and Myth, W. W. Norton, 2001. ISBN 9780393322118, p. 66.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்டோலியா&oldid=3424897" இலிருந்து மீள்விக்கப்பட்டது