இட்டோசி நொசாகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இட்டோசி நொசாகி
Hitoshi Nozaki
野崎 一
பிறப்பு1922
ஒகாயாமா, சப்பான்
குடியுரிமைசப்பான்
துறைகரிம வேதியியல்
அறியப்படுவதுநொசாகி–இயாமா–கிச்சி வினை

இட்டோசி நொசாகி (Hitoshi Nozaki 野崎 一 Nozaki Hitoshi?) 1922 ஆம் ஆண்டில் பிறந்த ஒரு சப்பானிய வேதியியல் அறிஞராவார். இவர் கரிம வேதியியல் துறையில் நிபுணராக விளங்கினார். சப்பானிய கரிம வேதியியல் துறையின் தலைவராகச் செயல்பட்டார். நொசாகி-இயாமா கிசி வினையின் கண்டுபிடிப்பாளர்களில் இவரும் ஒருவராவார். ஓய்வுபெற்ற சிறப்புநிலை பேராசிரியாக தற்போது கியோட்டோ பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து வருகிறார்[1].

வாழ்க்கை[தொகு]

சப்பானிலுள்ள ஒகாயாமாவில் 1922 இல் நொசாகி பிறந்தார். தன்னுடைய பட்டப்படிப்பையும் முனைவர் பட்டத்தையும் கியோட்டோ இம்பெரியல் பல்கலைக்கழகத்தில் பெற்றார்[2].

பங்களிப்புகள்[தொகு]

சப்பானியப் போருக்குப் பிந்தைய பொருளாதார மேம்பாட்டு அதிசயத்தின் போது, இட்டோசி நொசாகி கரிம வேதியியல் துறையின் பலபிரிவுகளில் முன்னணி வகித்தார்.

  • டெர்ப்பீன் அடிப்படையிலான செயற்கை கார்பாக்சிலிக் நேர்மின்னயனி
  • நொசாகி-இயாமா-கிசி வினை

முக்கியமான மாணவர்கள்[தொகு]

  • ரியொகி நொயோரி: 2001 நோபல் பரிசு வென்றவர்[3].
  • யோசிட்டோ கிச்சி: ஆர்வார்டு பல்கலைக்கழக பேராசிரியர்.

விருதுகள்[தொகு]

  • 1979 சப்பானின் வேதியியல் சங்க விருது
  • 1986 சப்பான் அகாதெமியின் இம்பீரியல் பரிசு
  • 1986 பதக்கமும் கருஞ்சிவப்பு மைப்பட்டையும்
  • 1992 புனிதப் புதையல் விருது
  • 1993 சப்பானின் செயற்கை கரிம வேதியியல் விருது
  • 1999 சப்பான் அகாதெமியின் உறுப்பினர் கௌரவம்

மேற்கோள்கள்[தொகு]

  1. Tamejiro Hiyama, Organofluorine Compounds: Chemistry and Applications. NY: Springer-Verlag GmbH, 2000.
  2. 野崎一(のざき ひとし)とは - コトバンク
  3. "ノーベル賞日本人受賞者7人の偉業【野依 良治】". Archived from the original on 2016-09-05. பார்க்கப்பட்ட நாள் 2017-05-23.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்டோசி_நொசாகி&oldid=3619185" இலிருந்து மீள்விக்கப்பட்டது