இட்டாவா வனவிலங்குப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இட்டாவா வனவிலங்குப் பூங்கா
Etawah Safari Park.jpg
இட்டாவா வனவிலங்குப் பூங்காவின் நுழிவாயில்
திறக்கப்பட்ட தேதி24 நவம்பர் 2019
இடம்இட்டாவா, உத்தரப் பிரதேசம், இந்தியா
பரப்பளவு350 எக்டேர்கள் (860 ஏக்கர்கள்)[1]
அமைவு26°46′05″N 79°00′03″E / 26.7679945°N 79.0008985°E / 26.7679945; 79.0008985ஆள்கூறுகள்: 26°46′05″N 79°00′03″E / 26.7679945°N 79.0008985°E / 26.7679945; 79.0008985
விலங்குகளின் எண்ணிக்கை165[2]
உயிரினங்களின் எண்ணிக்கை5 (2019)
இணையத்தளம்etawahlionsafari.in

இட்டாவா வனவிலங்கு சரணாலயம் (Etawah Safari Park) முன்னர் இட்டாவா சிங்கப் பூங்கா, அதிகாரப்பூர்வமாக ஆசிய சிங்க இனப்பெருக்கம் மையம் , பல்லுயிர் வனவிலங்குப் பூங்கா, எட்டாவா,[3] என்றெல்லாம் அறியப்பட்ட இது இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் இட்டாவாவில் உள்ள வனவிலங்குப் பூங்காவாகும். இது 2019 நவம்பரில் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. இதில் பல விலங்குகள், ஆசியச் சிங்கங்களின் இனப்பெருக்கம் மையம், பார்வையாளர் மையம் ஆகியவையும் அடங்கும்.[4]

வரலாறு[தொகு]

இந்தத் திட்டம் முதன்முதலில் 2006இல் முன்மொழியப்பட்டது. [5] மே 2012இல் பணிகள் தொடங்கப்பட்டன. இந்தப் பூங்காவை எசுப்பானிய நிறுவனமான ஆர்ட் உர்பே வடிவமைத்தது. [6] முதலில், ஆறு சிங்கங்கள் 2014 இல் பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டன.  2015 ஆம் ஆண்டில் ஒரு மான் பூங்கா, மறிமான் பூங்கா, சிறுத்தைப் பூங்கா, கரடிப் பூங்கா ஆகியவை சேர்க்கப்பட்டு பூங்காவின் பெயர் இட்டாவா வனவிலங்குப் பூங்கா என மறுபெயரிடப்பட்டது. மான் பூங்கா 6 அக்டோபர் 2016 இல் திறக்கப்பட்டது. [7] [8] மீதமுள்ள பூங்காக்கள் 1 ஜூன் 2018 அன்று திறக்கப்பட்டன. [9] [10] சிங்கப்பிரிவு தவிர இந்த பூங்கா 24 நவம்பர் 2019 அன்று பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. 

விலங்குகள்[தொகு]

இங்குள்ள பூங்காக்களில், சிங்கப் பூங்கா, மான் பூங்கா , மறிமான் பூங்கா , கரடிப் பூங்கா சிறுத்தைப் பூங்கா ஆகியவை அடங்கும். [11] [12] 2019 நவம்பரின்படி , சிங்கம் மற்றும் சிறுத்தைப் பூங்காக்கள் மத்திய விலங்கு காட்சியக ஆணையத்தின் (CZA) ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன. [13]

ஆசிய சிங்க இனப்பெருக்கம் மையம்[தொகு]

இந்த ஆசியச் சிங்கம் இனப்பெருக்க மையத்தில் பன்னிரண்டு சிங்கங்கள் உள்ளது.[14] இது குசராத்தின் உயிரியல் பூங்காக்களிலிருந்து பெரும்பாலும் செப்டம்பர் 2014 இல் வந்த பதினொரு சிங்கங்களுடன் தொடங்கப்பட்டது.[15] நான்கு சிங்கங்களும் ஐந்து குட்டிகளும் "கேனைன் டிஸ்டெம்பர்" என்ற ஒரு வைரசு காரணமாக இறந்தன. பின்னர் சிங்கங்கள் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசி மூலம் பாதுகாக்கப்பட்டது.[16] 2020 திசம்பரின் படி, மையத்தில் ஒன்பது குட்டிகள் உள்ளன.[17] [18] [19] [20]

வசதிகள்[தொகு]

பார்வையாளர் வசதி மையம்

பார்வையாளர் வசதி மையத்தில் கணினி வரைபடம், பெரிய வடிவமைப்பு காட்சிகள் கொண்ட பல்லூடக அருங்காட்சியகம், பார்வையாளர்களுக்கு தகவல் மற்றும் வழிகாட்டுதலுக்கான நாற்பரிமாண கல்வி அரங்கம் ஆகியவையும் அடங்கும். [21]

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Lion Breeding Centre and Multiple Safari Parks information". மத்திய விலங்கு காட்சியக ஆணையம்.
 2. https://m.jagran.com/uttar-pradesh/kanpur-city-etawah-lion-safari-lion-will-be-adopt-any-four-lakh-one-thousand-rupees-21196796.html
 3. "Information about Zoos". மத்திய விலங்கு காட்சியக ஆணையம்.
 4. "Annual report" (PDF).
 5. "Loksabha Election 2019 : बड़ा मुद्दा : सियासी शोर में दब गई सफारी पार्क के शेरों की दहाड़".
 6. "Lion Safari Etawah".
 7. "Four months on, Lion Safari sees birth of two cubs" (7 October 2016).
 8. "मुख्यमंत्री अखिलेश यादव आज इटावा में करेंगे हिरन सफारी का शुभारंभ".
 9. Asia, 12Go. "Etawah Safari Park Will Be Opened in October News".
 10. "आम जनता को समर्पित हुआ इटावा सफारी पार्क". மூல முகவரியிலிருந்து 2018-06-29 அன்று பரணிடப்பட்டது.
 11. "A Sneak Peek at India's Lion Safari: A Conservation Effort for Asia's "Last Lions"". மூல முகவரியிலிருந்து 2018-03-22 அன்று பரணிடப்பட்டது.
 12. "इटावा सफारी को शासन की हरी झंडी". மூல முகவரியிலிருந்து 2017-12-01 அன்று பரணிடப்பட்டது.
 13. "Etawah Safari opens for public, lion segment to wait".
 14. "Etawah safari to get four lions from Gujarat's Sakarbaug Zoo" (18 August 2013).
 15. "Gir lions gifted to Etawah Wildlife Lion Safari Park die; Mulayam's dream project could be in question in next year's elections".
 16. "Etawah lion safari roars back to life from the edge of oblivion".
 17. "इटावा लॉयन सफारी: शेरनी जेसिका ने दो शावकों को दिया जन्‍म, चौथी बार मां बनी" (hindi).
 18. "लॉयन सफारी में शेरनी ने दिया शावक को जन्म".
 19. Apr 16, Faiz Rahman Siddiqui / TNN /. "Cub born to lioness Jennifer at Etawah Safari | Kanpur News - Times of India" (en).
 20. "Etawah safari may begin with deer, antelope next month".
 21. "Annual report".

வெளி இணைப்புகள்[தொகு]